சினிமா

Lokesh Kanagaraj: லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் அமீர்கான்... பாலிவுட்டில் என்ட்ரியாகும் LCU..?

சூப்பர் ஸ்டார் ரஜினியின் கூலி படத்தை இயக்கி வரும் லோகேஷ் கனகராஜ், விரைவில் பாலிவுட் மெகா ஸ்டார் அமீர்கானுடன் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Lokesh Kanagaraj: லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் அமீர்கான்... பாலிவுட்டில் என்ட்ரியாகும் LCU..?
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அமீர்கான்

சென்னை: கோலிவுட்டில் டாப் மோஸ்ட் இயக்குநர்களில் ஒருவர் லோகேஷ் கனகராஜ். மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ என அடுத்தடுத்து ப்ளாக் பஸ்டர் ஹிட் கொடுத்துள்ளார் லோகேஷ். இதனையடுத்து தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் லியோ படத்தை இயக்கி வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் கூலி, அடுத்தாண்டு ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து கார்த்தி நடிக்கும் கைதி 2ம் பாகத்தை இயக்கவுள்ளார் லோகேஷ் கனகராஜ். இது லோகேஷின் சினிமாட்டிக் யூனிவர்ஸில் உருவாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், லோகேஷ் கனகராஜ்ஜின் அடுத்தப் படம் குறித்து தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகிறது. அதன்படி பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமீர்கான் நடிக்கும் புதிய படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்தக் கூட்டணி இணையும் படம் குறித்த முதற்கட்ட பேச்சுவார்த்தை முடிந்துவிட்டதாகவும், இதனை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அமீர்கான் நடிப்பில் கடைசியாக வெளியான லால் சிங் சத்தா படுதோல்வியடைந்தது. அதேபோல் அவரை நெட்டிசன்களும் கடுமையாக ட்ரோல் செய்து வந்தனர்.

இதனால், தற்போதைக்கு சினிமாவில் இருந்து விலகுவதாக அமீர்கான் அறிவித்திருந்தார். அதாவது நடிப்பதில் இருந்து விலகிய அமீர்கான், தொடர்ந்து படங்கள் தயாரிப்பதில் பிஸியாக காணப்பட்டார். சில தினங்களுக்கு முன்னர் விஜய் சேதுபதியின் மகாராஜா இந்தி ரீமேக் உரிமையை வாங்கிய அமீர்கான், அதில் அவரே ஹீரோவாக நடிக்கவுள்ளதாக சொல்லப்பட்டது. லால் சிங் சத்தா தோல்வியில் இருந்து மீண்டு வர மகாராஜா தான் சரியான படமாக இருக்கும் என அவர் முடிவு செய்துள்ளார்.

மேலும் படிக்க - தங்கலான் முதல் வாரம் பாக்ஸ் ஆபிஸ் கலெக்‌ஷன்

இந்த வரிசையில் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அமீர்கான் ஹீரோவாக நடிக்கவிருப்பது, பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஷாருக்கானின் ஜவான் மூலம் பாலிவுட்டில் என்ட்ரியான இயக்குநர் அட்லீக்காக இந்தி ஹீரோக்கள் வெயிட்டிங்கில் உள்ளனர். அடுத்து சல்மான்கானின் சிக்கந்தர் படத்தை ஏஆர் முருகதாஸ் இயக்கி வருகிறார். அதேபோல், விஷ்ணுவர்த்தனும் தற்போது பாலிவுட் பக்கம் பிஸியாகிவிட்டார். இவர்களுடன் லோகேஷ் கனகராஜ் முதன்முதலாக இந்தி திரையுலகில் அடியெடுத்து வைக்கவுள்ளது பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

லோகேஷ் கனகராஜ் – அமீர்கான் இணையும் படத்தில், கோலிவுட்டில் இருந்தும் ஒரு மாஸ் ஹீரோ நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. அதேநேரம் இந்தப் படம் லோகேஷின் LCU கான்செப்ட்டில் உருவாகிறதா அல்லது Standalone மூவியா என்பது குறித்து இன்னும் தெரியவில்லை. கூலி, கைதி 2ம் பாகம் ரிலீஸான பின்னர் தான் அமீர்கான் நடிக்கும் படத்தை இயக்கவுள்ளாராம் லோகேஷ் கனகராஜ். அதனால் இந்தப் படம் பற்றிய அபிஸியல் அப்டேட் இப்போதைக்கு வெளியாக வாய்ப்பில்லை என்றே சொல்லப்படுகிறது. ஆனாலும், லோகேஷின் ரசிகர்கள் இந்த அப்டேட்டை கொண்டாடி வருகின்றனர்.