சுக்கிரன் பெயர்ச்சி 2024: கன்னி ராசியில் கேது உடன் கூட்டணி சேரும் சுக்கிரனால் குழப்பம் யாருக்கு?

சுக்கிரன் காதல் நாயகன். கன்னி ராசியில் நீசம் பெறப்போகிறார். கேது உடன் கூட்டணி சேரப்போகும் சுக்கிரனால் துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிகளில் பிறந்தவர்களுக்கு யாருக்கு என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

Aug 18, 2024 - 08:23
 0
சுக்கிரன் பெயர்ச்சி 2024: கன்னி ராசியில் கேது உடன் கூட்டணி சேரும் சுக்கிரனால் குழப்பம் யாருக்கு?
sukran peyarchi palan 2024

சென்னை: சுக்கிரன் சுக போகங்களின் அதிபதி. இல்லறத்தில் தாம்பத்ய வாழ்க்கை மகிழ்ச்சியாக இருப்பதும் இவரது அனுக்கிரகத்தால் நடக்கக்கூடியதே. ஒவ்வொரு மாதமும் சுக்கிரப் பெயர்ச்சி சில ராசிக்காரர்களுக்கு சுகபோகங்களை அள்ளித்தரும். சில ராசிக்காரர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். சுக்கிரன் ரிஷபம், துலாம் ராசிகளின்  ஆட்சி நாயகன். கன்னி ராசியில் நீசமடையும் சுக்கிரன் 18 ஆண்டுகளுக்குப் பிறகு கேது உடன் இணையப்போகிறார் இதனால் எந்த ராசிக்காரர்களுக்கு என்ன பலன் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம். 

துலாம்

உங்க ராசிநாதன் சுக்கிரன் உங்க ராசிக்கு விரைய ஸ்தானமாக 12வது வீட்டில் சுக்கிரன் கேது உடன் குடியேறப்போகிறார். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும்.  பணவரவு சிலருக்கு உற்சாகத்தை தரும். பணம் வரும் போது பத்திரப்படுத்துங்கள். சுப விரையம் ஏற்படும் ஆடம்பர செலவு ஏற்படும். படிப்பாக வெளிநாடு செல்வீர்கள்.  வெள்ளிக்கிழமைகளில் சிவ ஆலயத்திற்கு மல்லிகை பூக்களை வாங்கி கொடுத்து அர்ச்சனை செய்யலாம்.

விருச்சிகம்

சுக்கிரன் ராசிக்கு 11வது வீடான லாப ஸ்தானத்தில் கேது உடன் பயணம் செய்யப்போகிறார்.  திருமண வாழ்க்கையில் உற்சாகமடையும் வகையில் பல செயல்கள் நடைபெறும் மாதம் இது. பண வருமானம் அதிகாிக்கும். அரசனுக்கு இணையான வாழ்க்கை கிடைக்கும் காலமாகும். சிலருக்கு குழந்தை பாக்கியம் ஏற்படும். வீட்டில் பொன் பொருள் சோ்க்கை ஏற்படும். இது யோகமான காலமாகும்.  தினசரி சூரிய பகவானை வழிபடவும். 

தனுசு

உங்கள் ராசிக்கு 10வது வீட்டில் சுக்கிரன் கேது உடன் கூட்டணி சேரப்போகிறார். சுக்கிரன் தொழில் ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் உங்கள் வேலையில், தொழிலில் உற்சாகத்தை ஏற்படுத்தும். வேலை செய்யும் இடத்தில் அமைதியாக நிதானமாக பேசவும். குடும்பத்தில் மனைவியுடனே அல்லது காதலியுடனே சின்னச் சின்ன ஊடல் ஏற்படலாம் சமாளியுங்கள். வெள்ளிக்கிழமைகளில் ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு விளக்கேற்றலாம். 

மகரம்

ராசிக்கு 9ஆவது வீட்டில் பாக்ய ஸ்தானத்தில் சுக்கிரன் பயணம் செய்யப்போவதால். வீட்டில் மனைவியின் அன்பான ஆதரவு கிடைக்கும். காதலி நண்பர்கள், உறவினர்களுடன் உற்சாகமாக இருக்கும் காலம் இது. காதலிப்பவர்களுக்கு இந்த மாதம் குதூகலமாக அமையும். வெளிநாடு செல்வதற்கு பாஸ்போர்ட் எடுப்பதற்கான முயற்சி செய்யலாம்.  புது வேலைகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. சிலருக்கு புரமோசன் ஊதிய உயர்வு கிடைக்கும். தம்பதியரிடையே ஒற்றுமை அதிகரிக்கும். வெள்ளிக்கிழமை சிவபெருமானுக்கு அபிஷேகத்திற்கு சந்தனம் வாங்கித்தர நன்மைகள் நடைபெறும்.

கும்பம்

உங்கள் ராசிக்கு எட்டாம் இடத்தில் சுக்கிரன் கேது உடன் மறைவதால் வாழ்க்கை துணையின் உடல் நலனில் கவனமும் அக்கறையும் தேவைப்படும். பணம் பொருள் ஆகியவற்றை பத்திரப்படுத்துங்கள். இருவருமே கவனமாக இருந்தால் பாதிப்பை தவிர்க்கலாம். இல்லாவிட்டால் மருத்துவ செலவுகள் எற்படும்.  பேசும் வார்த்தைகளில் கவனம் தேவை.தேவையில்லாத பேச்சுக்களை குறைக்கவும். பாதிப்பு குறைய வெள்ளிக்கிழமைகளில் துர்க்கா மந்திரம் கூற நன்மைகள் நடைபெறும்.

மீனம்

காதல் நாயகன் சுக்கிரன் உங்கள் ராசிக்கு 7ஆம் வீட்டில்  களத்திரத்தில் கேது உடன் இணைந்து அமரப்போவதால் வாழ்க்கை துணை உடனான காதல் உணர்வுகள் அதிகரிக்கும். நேரடியாக சுக்கிரன் பார்வை உங்கள் ராசி மீது விழுவதால் காதல் கணிந்து திருமணத்திலும் முடிய வாய்ப்பு உள்ளது.  சிலருக்கு கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் வெற்றி கிடைக்கும். உடல் நலனின் அக்கறை செலுத்தாவிட்டால் ஆபத்தாகி விடும். வெள்ளிக்கிழமைகளில் பெண் குழந்தைகளுக்கு வெள்ளியால் ஆன பொருட்களான கொலுசு உள்ளிட்ட பொருட்களை தானமாக வாங்கித்தரலாம். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow