சுக்கிரன் பெயர்ச்சி 2024: கன்னி ராசியில் 18 ஆண்டுகளுக்குப்பின் கேது உடன் கூட்டணி.. பலன் யாருக்கு?

சுக்கிரன் காதல் நாயகன். கன்னி ராசியில் நீசம் பெறப்போகிறார். கேது உடன் கூட்டணி சேரப்போகும் சுக்கிரனால் மேஷம் முதல் மீனம் வரை பிறந்த ராசிக்காரர்களில் யாருக்கு என்ன பலன் கிடைக்கப்போகிறது.

Aug 18, 2024 - 08:10
 0
சுக்கிரன் பெயர்ச்சி 2024: கன்னி ராசியில் 18 ஆண்டுகளுக்குப்பின் கேது உடன் கூட்டணி.. பலன் யாருக்கு?
sukran peyarchi palan 2024

சென்னை: சுக்கிரன் சுக போகங்களின் அதிபதி. இல்லறத்தில் தாம்பத்ய வாழ்க்கை மகிழ்ச்சியாக இருப்பதும் இவரது அனுக்கிரகத்தால் நடக்கக்கூடியதே. ஒவ்வொரு மாதமும் சுக்கிரப் பெயர்ச்சி சில ராசிக்காரர்களுக்கு சுகபோகங்களை அள்ளித்தரும். சில ராசிக்காரர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். சுக்கிரன் ரிஷபம், துலாம் ராசிகளின்  ஆட்சி நாயகன். கன்னி ராசியில் நீசமடையும் சுக்கிரன் 18 ஆண்டுகளுக்குப் பிறகு கேது உடன் இணையப்போகிறார் ஆவணி மாதத்தில் எந்த ராசிக்காரர்களுக்கு என்ன பலன் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம். 

மேஷம் :

சுக்கிரன் உங்கள் ராசிக்கு 6வது இடத்தில் கேது உடன் இணைந்து மறைவதால் வீட்டில் வாழ்க்கைத்துணையினால் சின்னச்சின்ன சச்சரவுகள், ஊடல்கள் ஏற்பட்டு அதனால் சிலருக்கு மன அழுத்தம் ஏற்படும். வேலை பார்க்கும் இடத்தில் கடும் உழைப்பை கொடுக்க வேண்டிய காலமிது. உங்கள் உடல் நலனையும் பாக்கெட்டில் உள்ள பணத்தையும் பத்திரமாக பார்த்துக்கொள்ளவும்.   வெள்ளிக்கிழமை அம்பிகையை வணங்கவும்.  அரிசியும் வெல்லமும் தானமாக கொடுப்பதன் மூலம் நன்மைகள் நடைபெறும்.

ரிஷபம் :

காதல் நாயகன் சுக்கிரன்  பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் கேது உடன் பயணம் செய்யப்போகிறார். காசு மேல காசு வந்து கொட்டுகிற நேரமிது என உற்சாகம் கொப்பளிக்கும். உங்களுக்கு கற்பனை வளமும் அழகுணர்ச்சியும் அதிகரிக்கும். வீட்டில் மனைவி, குழந்தைகள் மீது அன்பும் பாசமும் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணைவர் உங்கள் மீது காதல் மழை பொழியும் நேரமிது. வாழ்க்கைத் துணையுடன் இதே வேகத்தோடு வெளிநாடு பயணம் சென்று வாருங்கள். வெள்ளிக்கிழமை துர்க்கை அம்மன் கோவில்களில் விளக்கேற்ற நன்மைகள் நடைபெறும்.

மிதுனம் :

சுக்கிரன் உங்கள் ராசிக்கு சுக ஸ்தானமான நான்காவது வீட்டில் கேது உடன் இணையப்போவதால் சிலர் வீடுகளை பராமரிப்பு செய்வீர்கள். வீட்டுக்குத் தேவையான அலங்கார பொருட்களை வாங்கி குவிப்பீர்கள். அம்மாவின் உடல் நலத்தில் அக்கறை தேவை. வண்டி வாகனம் வாங்கும் போது மட்டும் கவனமாக வாங்க வேண்டும் இல்லை எனில் செலவு இழுத்து விட்டு விடும். உங்கள் வார்த்தைகளுக்கு மதிப்பும் கிடைக்கும்.   உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் மாற்றங்கள் ஏற்படும். பணம் பாக்கெட்டில் அதிகம் சேரும் கூடவே அதற்கேற்ப செலவும் அதிகரிக்கும். 

கடகம் :

ராசி நாயகன் சுக்கிரன் தன வாக்கு ஸ்தானத்தில் இருந்து 3ஆம் இடமான முயற்சி ஸ்தானத்தில் கேது உடன் இணையப்போவதால். உங்களின் பேச்சுத்திறமையும், அழகியலும் அதிகரிக்கும். உங்கள் நட்பு வட்டம் அதிகரிக்கும். சின்னச் சின்ன பாதிப்புகள் உடல் நலத்தில் ஏற்படும் கவனம் தேவை. புதனால் புது முயற்சி செய்ய நல்ல நேரமாகும். இளைய சகோதரர்கள் உடல் நலம் பாதிக்கப்படும். இளைய சகோதர சகோதரிகளுடன் உறவு மேம்படும்.  புதன்கிழமைகளில் ஏழைகளுக்கு பழங்களை தானம் செய்வதால் நன்மை ஏற்படும்வெள்ளிக்கிழமை மகாலட்சுமி தாயாரை விளக்கேற்றி வழிபட நன்மைகள் நடக்கும். சிறு குழந்தைகளுக்கு ஆடைகள் தானமாக வாங்கித்தரலாம்.

சிம்மம் :

உங்கள் ராசியில் சூரியன் உடன் இணைந்து பயணம் செய்யும் சுக்கிரன் ஆகஸ்ட் இறுதியில் உங்கள் ராசிக்கு 2வது வீட்டில் கேது உடன் இணைந்து பயணம் செய்யப்போகிறார்.  தன ஸ்தான சுக்கிரனால் பண வருமானம் அதிகாிக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். திருமண வயதில் இருப்பவா்களுக்கு திருமண பாக்கியம் கிடைக்கும். சிலருக்கு குழந்தைபாக்கியம் கிடைக்கும்  காலமிது. கணவன் மனைவிக்கு இடையே காதல் உணர்வுகள் அதிகரிக்கும்.  அம்மன் கோவில்களும் வெண்மை நிற மலர்களை வாங்கிக் கொடுக்க நன்மைகள் நடக்கும்.

கன்னி

காதல் நாயகன் சுக்கிரன் உங்கள் ராசியில் கேது உடன் குடியேறப்போகிறார். சுக்கிரனின் நீச்ச ஸ்தானம் என்றாலும் பொன்னும் பொருளும் சேரும் நேரம் இது. பெண்களுக்கு தங்க நகைகள் சேரும். தங்க நகைகள் வாங்கலாம். ஆடம்பரமான பொருட்களை வாங்குவதால் சுப செலவுகள் ஏற்படும். கணவன் மனைவி இடையே காதல் உணர்வுகள் அதிகரிக்கும். சிலருக்கு உணவு மூலம் பிரச்சினைகள் வரலாம் என்பதால் ஆரோக்கியமான உணவுகளை மட்டுமே சாப்பிட வேண்டும். தம்பதியரிடையே நெருக்கம் அதிகரிக்கும். சமூகத்தில் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் நல்ல பெயர் கிடைக்கும்.  வெள்ளிக்கிழமைகளில் அம்மன் கோவிலுக்கு சென்று சிவப்பு ரோஜா வைத்து வணங்கி வர நன்மைகள் நடைபெறும். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow