Aadi Pooram 2024 : ஆடிப்பூரம் நாளில் அம்மனுக்கு வளையல்.. என்னென்ன பலன்கள்
Aadi Pooram 2024 Festival Benefits in Tamil : நாளை மறுநாள் (ஆகஸ்ட் 7) ஆடிப்பூரத்தை முன்னிட்டு செய்யக்கூடிய வழிபாட்டு முறைகளும் அதன் பலன்களும் குறித்துக் கீழே பார்க்கலாம்.
Aadi Pooram 2024 Festival Benefits in Tamil : ஆடி மாதம் என்றாலே அது, அம்மனுக்கு உகந்த மாதமாகும். ஒரு ஆண்டின் இரண்டு பெரும் காலங்களில் தட்சணாயனம் எனப்படும் சூரியனின் தெற்குப் பயணம் தொடங்கிவிட்டது எனவும் இது தேவர்களுக்கு மாலைப்பொழுது என்பதால் வழிபாடுகள் நிகழ்த்த வேண்டிய காலம் என்றும் சாஸ்திர சம்பிரதாயங்கள் கூறுகின்றன.
ஆடி மாதத்தில் அம்மனுக்குக் கொண்டாடப்படும் நிகழ்வுகளில் ஆடிப்பூரம்(Aadi Pooram) முக்கிய நிகழ்வாகக் கருதப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் பூரம் நட்சத்திரம் வந்தாலும், ஆடி மாதத்தில் வரும் இந்த நட்சத்திரம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகக் கூறப்படுகிறது. மகாலட்சுமியின் மறு அவதாரமான ஆண்டாளின் அவதார தினத்தையே ஆடிப்பூரமாகக் கொண்டாடுகிறோம்.
ஆடிப்பூரம்(Aadi Pooram) அன்று அனைத்து அம்மன் கோயில்களிலும் சிறப்பு ஹோமங்கள், பூஜைகள், சிறப்பு அலங்காரங்கள் உள்ளிட்டவை நடத்தப்படுவது வழக்கம். ஆண்டாள் அவதரித்த திருத்தலமான ஸ்ரீவில்லிபுத்தூரில் 10 நாட்கள் ஆடிப்பூரத் திருவிழா நடைபெறும். 10ம் நாளன்று ஆண்டாள் - ஸ்ரீரங்கநாதர் திருக்கல்யாணம் வெகுவிமரிசையாக நடைபெறும். இந்த திருக்கல்யாணத்தை காணும் திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும் எனக் கூறப்படுகின்றன. ஆண்டாள் தான் விரும்பிய ஸ்ரீரங்கநாதரையே திருமணம் செய்தது போல, தாங்கள் விரும்பிய மணவாழ்க்கை நிச்சயமாக அமையும் என்பது நம்பிக்கை.
இந்த ஆண்டிற்கான ஆடிப்பூரத் திருவிழா(Aadi Pooram Festival 2024) கடந்த 30ம் தேதி ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் மிக பிரமாண்டமாகக் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்நிலையில் இவ்விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் நாளை மறுநாள் (ஆகஸ்ட் 7) காலை 9:05 மணிக்கு நடைபெற இருக்கிறது. இதில் கலந்துகொண்டு அம்மனின் ஆசி பெறுவதற்காக பல்வேறு மாநிலங்களிலுருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தருவர். இதற்காக காவல்துறையினர் பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் படிக்க: இன்றைய ராசிபலன் ஆகஸ்ட் 05 - சந்திராஷ்டமம் யாருக்கு?
நடப்பாண்டிற்கான ஆடிப்பூரம்(Aadi Pooram) திருவிழா, வரும் 7ம் தேதி நடைபெறவுள்ளது. நாளை (ஆகஸ்ட் 6) மாலை 6:45 முதல் மறுநாள் (ஆகஸ்ட் 7) இரவு 9 மணி வரை பூர நட்சத்திரம் நீடிக்கும். எனவே அன்றைய தேதி முழுவதுமே ஆடிப்பூரண வழிபாடு மேற்கொள்ளலாம். மேலும் குழந்தை பாக்கியம் வேண்டும் என்பவர்கள் அருகிலுள்ள அம்மன் கோயிலுக்கு சென்று, அம்மனுக்கு வளையல் மற்றும் குங்குமம் வாங்கிக் கொடுத்து மனதார வழிபட்டால், நினைத்த காரியங்கள் நிச்சயம் நடக்கும் என்பது ஐதீகம்.
What's Your Reaction?