குரு வக்ர பெயர்ச்சி பலன்: 6 ராசிக்காரர்களுக்கு அள்ளித்தரப்போகும் குரு.. அடி தூள்!

Guru Peyarchi Palangal 2024 : குரு பகவான் அக்டோபர் மாதம் 9ஆம் தேதி ரிஷப ராசியில் வக்ரமடையப்போகிறார். 2025ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை வக்ர நிலையில் பயணம் செய்யும் குருபகவான் யாருடைய வாழ்க்கையில் அதிரடி மாற்றத்தை ஏற்படுத்தப்போகிறார் என்று பார்க்கலாம்.

Jul 27, 2024 - 16:01
Jul 27, 2024 - 17:19
 0
குரு வக்ர பெயர்ச்சி பலன்:  6 ராசிக்காரர்களுக்கு அள்ளித்தரப்போகும் குரு.. அடி தூள்!
Guru Vakra Peyarchi Palan 2024

Guru Peyarchi Palangal 2024 : குரு பகவான் ரிஷப ராசியில் செவ்வாயுடன் இணைந்து குரு மங்கள யோகத்தோடு பயணம் செய்கிறார். சில நாட்களில் சந்திரனும் இணைந்து குரு சந்திர யோகத்தை தரப்போகிறார். குரு பகவான் சில கிரகங்கங்களுடன் சேரும் போது புதுவிதமான யோகத்தை தருவார். சந்திரன், செவ்வாய், சுக்கிரன் உடன் குரு கூட்டணி அமைத்தாலோ பார்த்தாலோ கோடீஸ்வர யோகம் தேடி வரும்.  'குருபார்க்க கோடி நன்மை' என்ற பழமொழிக்கு ஏற்ப குரு பகவான் யாருக்கு கோடீஸ்வர யோகத்தை தரப்போகிறார் என்று பார்க்கலாம்.

துலாம்:

அஷ்டம ஸ்தானத்தில் குரு பயணம்(Thulam Guru Peyarchi) செய்வது அவ்வளவாக நல்லதில்லை என்றாலும் குருவின் பார்வையினால் அதிகம் நன்மைகள் நடைபெறும்.  ராசிக்கு 12 ஆம் இடமான விரைய ஸ்தானம், 2 ஆம் இடம் மற்றும் 4 ஆம் இடங்களின் மீது விழுவதால் சுப விரைய செலவுகள் ஏற்படும். பணவரவு அதிகரிக்கும். நோய்கள் தீரும் காலம் வந்து விட்டது. செவ்வாயும், சந்திரனும் எட்டாம் வீட்டில் இணைந்து சந்திர மங்கள யோகத்தையும் விபரீத ராஜயோகத்தையும் தருவதால் பணம் பலவழிகளிலும் வரப்போகிறது. 

விருச்சிகம்: 

குரு பகவான் உங்கள் ராசிக்கு 7வது வீட்டில் அமர்ந்து குரு மங்கள யோகம்(Guru Mangala Yogam), குரு சந்திர யோகத்தை தரப்போகிறார். குருவின் பார்வை, நேரடியாக உங்கள் ராசியின் மீதும், லாப ஸ்தானத்தின் மீதும் 3ஆம் இடமான முயற்சி ஸ்தானத்தின் மீதும் விழுகிறது. வராது என்று நினைத்த பணம் தேடி தேடி வரும். கோடி கோடியாக செல்வம் சேர்க்கப்போகிறீர்கள். மகிழ்ச்சியும் மன நிம்மதியும் அதிகரிக்கப்போகிறது. 

தனுசு: 

குரு பகவான் உங்கள் ராசிக்கு ஆறாமிடமான ருண ரோக சத்ரு ஸ்தானத்தில் பயணம்(Dhanushu Rasi Guru Peyarchi) செய்கிறார் குரு பகவான் 10ஆமிடமான தொழில் ஸ்தானம் 12 ஆம் இடமான விரைய ஸ்தானம், மற்றும் 2 ஆம் இடமான தன ஸ்தானத்தை பார்வையிடுகிறார். பணம் அதிகமாக வந்தாலும் கூட சுப விரைய செலவுகள் ஏற்படும்.  கிரகங்கள் கூட்டணியாலும் உச்சம் பெற்ற சந்திரன் 6ஆம் வீட்டில் குரு உடன் இணைந்து குரு சந்திர யோகத்தை தருவதாலும் சிலருக்கு வேலையில் புரமோசன் கிடைக்கும்.எதிர்பாராத இடத்தில் இருந்து பண வருமானம் வரும்.

மகரம்: 

பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் குரு மங்கள யோகம், குரு சந்திர யோகம் கூடி வந்துள்ளது. குரு பகவான் உங்கள் ராசிக்கு 5ஆம் வீட்டில் பயணம் செய்கிறார். செவ்வாய் பகவானுடன் இணைந்துள்ள குரு தனது 9ஆம் பார்வையால் உங்கள் ராசியை பார்வையிடுகிறார். ராசிக்கு 9ஆம் இடம், 11வது இடத்தையும் பார்வையிடுகிறார். பாக்ய ஸ்தானம், லாப ஸ்தானத்தையும் குரு பகவான் பார்வையிடுவது சிறப்பு. குரு பார்வையால் பண வருமானம் அபரிமிதமாக இருக்கும். தீபாவளிக்கு முன்பாகவே கோடி கோடியாக செல்வம் சேரும் யோக காலம் வந்து விட்டது. 

கும்பம்: 

சுக ஸ்தானமான நான்காம் வீட்டில் பயணம் செய்யப்போகிறார். சுக ஸ்தானத்தில் குரு மங்கள யோகம் கூடி வந்துள்ளது. உங்கள் ராசிக்கு நான்காம் வீட்டில் அமர்ந்து பயணம் செய்யும் குரு பகவானின் பார்வை 8ஆம் இடம், 10ஆமிடம், 12வது இடங்களின் மீது விழுகிறது. பண வருமானம் வரும். யாருக்கும் கடன் வாங்கவோ,யாருக்கும் கடன் கொடுக்கவோ வேண்டாம். தீபாவளி நாளில் கவனமாக இருக்க வேண்டும். 

மீனம்:

குரு பகவான் முயற்சி ஸ்தானமான மூன்றாவது வீட்டில் பயணம் செய்கிறார்.  தொட்டது துலங்கும். குரு பகவான் உங்களுடைய ராசிக்கு 7வது வீடு, 9வது வீடு 11வது இடத்தை பார்வையிடுகிறார். இந்த குரு பெயர்ச்சியினால் வேலைப்பளு ஏற்பட்டாலும் நீண்ட நாள் பிரச்சினைக்கு தீர்வு ஏற்படும். கொடுத்த கடன்கள் வசூலாகும். அஷ்டலட்சுமி வீடு தேடி வரப்போவதால் பல வழிகளிலும் பண வருமானம் வரப்போகிறது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow