சனி பிரதோஷம்.. சதுரகிரி மகாலிங்கம் தரிசனம்…. மலையேற குவிந்த பக்தர்கள்!

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு ஆவணி மாதம் சனி மகாபிரதோஷம் மற்றும் அமாவாசை தினங்களுக்காக 4 நாட்கள் பக்தர்கள் மலையேறி செல்ல அனுமதி வழங்கப்பட்ட நிலையில் பக்தர்கள் வருகை அதிகரிப்பு

Aug 31, 2024 - 10:30
 0
சனி பிரதோஷம்.. சதுரகிரி மகாலிங்கம் தரிசனம்…. மலையேற குவிந்த பக்தர்கள்!
sathuragiri temple

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு ஆவணி மாதம் தேய்பிறை சனிப்பிரதோஷம் மற்றும் அமாவாசையை முன்னிட்டு  இன்று முதல் 3 ஆம் தேதி வரை பக்தர்கள் மலையேறி செல்ல 4 நாட்கள் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அனுமதிக்கப்பட்ட நாட்களில் மழை பெய்தால் பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்படும் என வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில்.இந்த கோவிலானது கடல் மட்டத்திலிருந்து சுமார் 4500 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இன்றும் இத்தளத்தில் சித்தர்கள் வாழ்ந்து வருவதால் இது சித்தர்களின் சொர்க்க பூமி எனவும் நினைத்த காரியங்கள் நடைபெறும் எனவும் தமிழகம் மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்து வருகை தரும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சாமியை தரிசனம் செய்து செல்கின்றனர்.

 சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு செல்ல மாதந்தோறும், பிரதோஷம், அமாவாசை, பௌர்ணமி ஆகிய 8 நாட்கள் மட்டுமே பக்தர்கள் மலையை சென்று சுவாமி தரிசனம் செய்ய அனுமதி என்பது வனத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் வழங்கப்பட்டு வருகிறது.

 இந்நிலையில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு ஆவணி மாதம் தேய்பிறை சனிப்பிரதோஷம் மற்றும் அமாவாசையை முன்னிட்டு  இன்று முதல் 3 ஆம் தேதி வரை பக்தர்கள் மலையேறி செல்ல 4 நாட்கள் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில்  மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் வருகை புரிந்துள்ளனர். தாணிப்பாறை அடிவாரப் பகுதியில்  வனத்துறையினர் தீவிர சோதனைக்கு பின்னர் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். அனுமதிக்கப்பட்ட நாட்களில் மழை பெய்தால் பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்படும் என வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனுமதிக்கப்பட்ட நாட்களில் காலை 6 மணி முதல் பிற்பகல் 12:00 மணி வரை மட்டுமே பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுவார்கள் எளிதில் தீபற்ற கூடிய பொருட்களைக் கொண்டு செல்ல அனுமதி கிடையாது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் பக்தர்களுக்கு விதிக்கபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow