Today Horoscope: இன்றைய ராசிபலன் செப்டம்பர் 2 - திங்கட்கிழமை திடீர் திருப்பம் யாருக்கு?

Today Horoscope Predictions in Tamil: திங்கட்கிழமையான இன்றைய தினம் சந்திரனின் அருள் நிறைந்த நாள். இன்றைய தினம் சந்திரன் சிம்ம ராசியில் பயணம் செய்கிறார். சந்திரன் பயணத்தாலும் பார்வையாலும் எந்த ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் யாரெல்லாம் கவனமாக இருக்க வேண்டும் என்று பார்க்கலாம்.

Sep 2, 2024 - 05:30
Sep 2, 2024 - 18:02
 0
Today Horoscope: இன்றைய ராசிபலன் செப்டம்பர் 2 -  திங்கட்கிழமை திடீர் திருப்பம் யாருக்கு?
today rasi palan 2024


Today Horoscope Predictions in Tamil: நிகழும் மங்களகரமான குரோதி வருடம் ஆவணி மாதம் 17ஆம் நாள் செப்டம்பர் 02ஆம் தேதி திங்கட்கிழமை அமாவாசை திதி. மகம் நட்சத்திரம் இரவு 12.20 மணி வரை அதன் பின் பூரம் நட்சத்திரம். இன்று சந்திரபகவான் அருளினாலும் சந்திரன் பயணத்தாலும் மேஷம் மீனம் வரை 12 ராசிகளில் பிறந்தவர்களுக்கு என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம். இன்று முழுநாள் அமாவாசை திதி முன்னோர்களை வழிபட ஏற்ற நாள். 

மேஷம்

இன்று உங்களின் பொருளாதார நிலை நன்றாக இருக்கும். குடும்பத்தில் கணவன் மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும்.  உற்றார் உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். ஆடம்பர செலவுகளை குறைப்பதன் மூலம் கடன் பிரச்சினைகள் குறையும்.

ரிஷபம்

இன்று வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் ஏற்பட்ட மனகசப்பு நீங்கும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் தேவையற்ற பேச்சுக்களை குறைக்கவும். எந்த காரியத்தையும் சிந்தித்து செயல்பட்டால் வெற்றி பெறலாம். நண்பர்களின் உதவியும் ஒத்துழைப்பும் கிடைக்கும். தெய்வ வழிபாடு நன்மையை தரும்.

மிதுனம்

இன்று குடும்பத்தில் திடீர் தனவரவு உண்டாகும். உடன்பிறந்தவர்கள் மூலம் சுபசெய்திகள் தேடி வரும். வீட்டிற்குத் தேவையான ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தொழில் வளர்ச்சிக்காக எதிர்பார்த்திருந்த வங்கி கடன் கிடைக்கும். வேலையில் உடனிருப்பவர்களால் அனுகூலம் கிட்டும். சுபகாரியங்கள் கைகூடி வரும்.

கடகம்

இன்று பிள்ளைகளால் மன உளைச்சல் ஏற்படலாம். குடும்பத்தில் நிம்மதியற்ற சூழ்நிலை உண்டாகும். உழைப்பிற்கேற்ற பலன் கிடைப்பதில் கால தாமதம் ஏற்படும். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. வியாபாரத்தில் வேலையாட்கள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். வருமானம் பெருகும்.

சிம்மம்

இன்று இல்லத்தில் மனமகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்போடு லாபம் அடைவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு வருமானம் பெருகும்.

கன்னி

இன்று குடும்பத்தில் சாதகமற்ற நிலை உருவாகலாம். உடன் பிறந்தவர்களால் வீண் பிரச்சினைகள் வரக்கூடும். ஆடம்பர செலவுகளால் சேமிப்பு குறையும். வியாபாரத்தில் பணம் கொடுக்கல் வாங்கல் சுமாராக இருக்கும். திருமண சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். 

துலாம்

இன்று வீட்டில் சுபசெலவுகள் ஏற்படும். எடுக்கும் புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினர் ஆதரவாக இருப்பார்கள். வேலையில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். தொழிலில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள். வெளியூர் பயணங்களால் அனுகூலப்பலன் கிட்டும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும்.

விருச்சிகம்

இன்று உங்களுக்கு உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். திருமண சுபமுயற்சிகளில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். வீட்டில் பெண்கள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். பொன் பொருள் வாங்கி மகிழ்வீர்கள். நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு சந்தோஷத்தை தரும். கடன்கள் குறையும்.

தனுசு

இன்று குடும்பத்தில் பிள்ளைகளால் மருத்துவ செலவுகள் ஏற்படும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உறவினர்களிடம் மாறுபட்ட கருத்துகள் தோன்றும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கலாம். வேலை செய்யும் இடத்தில் உடனிருப்பவர்களை அனுசரித்து சென்றால் பிரச்சினைகள் குறையும்.

மகரம்

இன்று குடும்பத்தில் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படும். சுபகாரிய முயற்சிகளில் தடைகள் உண்டாகும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் பெரிய தொகையை பிறரை நம்பி கடன் கொடுப்பதோ வாங்குவதோ தவிர்ப்பது நல்லது. வாகனங்களில் செல்லும் பொழுது கவனம் தேவை.

கும்பம்

இன்று எந்த ஒரு காரியத்தையும் துணிச்சலோடு செய்து அதில் வெற்றியும் காண்பீர்கள். குடும்பத்தில் பிள்ளைகளால் பெருமை சேரும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் உழைப்பிற்கேற்ற ஊதிய உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். நவீன பொருட்கள் வாங்க அனுகூலமான நாளாகும்.

மீனம்

இன்று புதிய தொழில் தொடங்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். சிலருக்கு வெளியூர் பயணம் செல்ல நேரிடும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் புதிய நபரின் அறிமுகம் கிடைக்கும். இதுவரை வராத பழைய பாக்கிகள் வசூலாகும்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow