சிரஞ்சீவி அஸ்வத்தாமன்.. துரியோதனன் பட்ட சந்தேகம்.. சாபம் கொடுத்த கிருஷ்ணர்.. புராண கதை

கல்கி 2898 திரைப்படத்தில் தனது விஸ்வரூபத்தை காட்டியிருப்பார் அஸ்வத்தாமன் யார் இந்த அஸ்வத்தாமன் இவருக்கு சாகா வரம் கிடைத்தது எப்படி என்று பார்க்கலாம். அஸ்வத்தாமன் மீது துரியோதனன் பட்ட சந்தேகம் காரணமாகவே குருச்ஷேத்திர போரில் கவுரவர்கள் அழிந்து போகும் நிலை ஏற்பட்டு விட்டது.

Aug 8, 2024 - 12:23
 0
சிரஞ்சீவி அஸ்வத்தாமன்.. துரியோதனன் பட்ட சந்தேகம்.. சாபம் கொடுத்த கிருஷ்ணர்.. புராண கதை
ashwathama purana story

சென்னை: கல்கி 2898 திரைப்படம் வந்த பிறகு அஸ்வத்தாமன் பற்றிய தேடல்களும் அதிகரித்துள்ளது.அஸ்வத்தாமா என்பவர் பாண்டவர்கள் மற்றும் கௌரவர்களுக்கு ஆசிரியாக விளங்கிய துரோணாச்சாரியாரின் புதல்வர். துரோணாச்சாரியாருக்கும் அவருடைய மனைவியான கிரிபிக்கு பிறந்தவர் தான் அஸ்வத்தாமா. அவரின் பிறப்பு முதலே, அவருடைய நெற்றியில் ஒரு ரத்தினக்கல் பதிக்கப்பட்டிருந்தது. அவருடைய சக்திகள் அனைத்திற்கும் இந்த கல்லே காரணம்.சாகா வரம் பெற்ற சிரஞ்சீவியான அஸ்வஸ்தாமன் இன்றைக்கும் பூமியில் இருப்பதாக நம்பப்படுகிறது.

அஸ்வத்தாமன் மீது துரியோதனன் பட்ட சந்தேகம் போரில் கவுரவர்கள் அழிந்து போகும் நிலை ஏற்பட்டு விட்டது. பாண்டவர்கள் கவுரவர்கள் இடையே ஏற்பட்ட பங்காளி சண்டையில் சற்றும் தொடர்பில்லாத பலரும் மரணமடைந்தனர். துரோகமும் வஞ்சகமும் சூழ்ச்சியும் மகாபாரத்தில் பல கிளை கதைகளை உருவாக்கியுள்ளது. அதுசரி சந்தேகம் எப்படி துரியோதனனைச் சேர்ந்த கவுரவர்களின் வாழ்க்கையில் சாவுமணி அடித்தது என்று பார்க்கலாம். 

கவுரவர்களுக்கும், பாண்டவர்களுக்கும் யுத்தம் நடக்கப் போவது உறுதியாகிவிட்டது. இதை நன்கு அறிந்த கிருஷ்ண பரமாத்மா, துரியோதனிடம் சமாதான துாது சென்றான். யுத்தம் வந்தால், கவுரவர்கள் பக்கம், பீஷ்மர், துரோணர், அவர் மகன் அஸ்வத்தாமன், கர்ணன் என பல மாபெரும் வீரர்கள் சண்டையிடுவார்கள் என கிருஷ்ண பரமாத்மாவுக்கு தெரியும்.அதிலும், அஸ்வத்தாமன் சாகா வரம் பெற்றவன். சீரஞ்சீவியான அவன், துரியோதனன் பக்கம் சேனாதிபதியாக களம் இறங்கினால், பாண்டவர்களால் எப்படி வெற்றி பெற முடியும் என, பரமாத்மா ஆலோசித்தான்.


அஸ்தினாபுரத்துக்கு சென்ற பரமாத்மா, திருதராஷ்டிரன், துரியோதனன், கர்ணன், பீஷ்மர், என பலரையும் சந்தித்து வணக்கம் தெரிவித்தான்.
அஸ்வத்தாமனை பார்த்த கண்ணன், அவனை தனியாக அழைத்தான், இதை துரியோதனன் பார்த்துக் கொண்டிருந்தான்.அஸ்வத்தாமனிடம் நலம் விசாரித்த கிருஷ்ணன், தன் விரலில் இருந்த மோதிரத்தை நழுவ விட்டான். அது பூமியில் விழுந்தது. அதை குனிந்து எடுத்தான் அஸ்வத்தாமன். கிருஷ்ணனிடம் மோதிரத்தை தர போன அஸ்வத்தாமனிடம், வானத்தை காட்டி கிருஷ்ணன் பேசினான். அதை துரியோதனன் பார்ப்பான் என்று கிருஷ்ணருக்கு தெரியும்.  அஸ்வத்தமானும் வானத்தை பார்த்தான் பின்னர் கிருஷ்ணனின் விரலில் அந்த மோதிரத்தை அணிவித்தான் அஸ்வத்தாமன்.

இதை பார்த்த துரியோதனன், 'நான் கவுரவர்கள் பக்கம் இருந்நதாலும், பாண்டவர்களுக்கு ஆதரவாகவே செயல்படுவேன். இது இந்த பூமி மற்றும் வானத்தின் மீது சத்தியம்' என, கிருஷ்ணனிடம், அஸ்வத்தாமன் கூறியதாக, துரியோதனன் கருதினான். இந்த சந்தேகத்தால், அவனை கடைசிவரை சேனாதிபதியாக, துரியோதனன் நியமிக்கவில்லை. கிருஷ்ணர் எதிர்பார்த்ததும் அதைத்தான். 


குருஷேத்திர போரின் ஐந்தாம் நாளில் குரு துரோணர் பாண்டவ படைகளை நிர்மூலம் செய்துகொண்டிருந்தபோது ,அசுவத்தாமா எனும் இவரது மகன் உயிரோடிருந்தபோதே இறந்ததாக பொருள்படும்படி  "அசுவத்தாமா ஹத:" என்று சொல்லி பின்னர் கடைசியில் "குஞ்ஜர" எனும் வார்த்தையைச் சேர்த்தார் தர்மர்.  கடைசி வார்த்தை காதில் விழாதபடி கிருஷ்ணர் பாஞ்சசன்யத்தை முழக்க,  மகன் இறந்ததாக நினைத்து மனம் நொந்து போன துரோணர் வில்லை கீழே போட்டுவிட்டார். இதனால் தர்மனும் சத்தியத்திலிருந்து தவறினான். 

அந்த சமயத்தில்  பீமன்,  துரோணரை பார்த்து  "பிராமணராகிய நீங்கள் குலத்தொழிலை விட்டு போர் புரிய வந்ததால் அரசர்களின் அழிவுக்குக் காரணமாகிவிட்டீர்கள்.  நீங்கள் இந்தப் பாப வாழ்க்கையில் ஈடுபட நேர்ந்தது சாபக்கேடு" என்று துரோணரைக் குற்றம் சாட்டினான்.  ஆயுதங்கள் இல்லாத துரோணரை திரௌபதியின் சகோதரர் திரிஷ்டத்யும்னனாக பிறப்பெடுத்த ஏகலைவனால் கொல்லப்பட்டார். போருக்குப் பின்னர், துரோணர் மகன் அசுவத்தாமாவால், திரிஷ்டத்யும்னன் கொல்லப்பட்டார்.

17ம் நாள் யுத்தத்தில், துரியோதனன் பீமனால் தாக்கப்பட்டு, கால்கள் தொடைகள் உடைந்து, யுத்தகளத்தில் இருந்தான், அப்போது, அவனை அஸ்வத்தாமன் சந்தித்தான். 'நான் சிரஞ்சீவி வரம் பெற்றவன்; என்னை சேனாதிபதியாக நியமித்திருந்தால், யுத்தத்தின் முடிவு மாறியிருக்கும்' என்றான் அஸ்வத்தாமன்.
அதற்கு துரியோதனன், 'நீதான், பாண்டவர்களுக்கு ஆதரவாக இருப்பேன் என கிருஷ்ணனிடம் சத்தியம் செய்து கொடுத்தாயே' என, கேட்டான்.யார் சத்தியம் செய்தது' என, கேட்ட அஸ்வத்தாமனிடம், கிருஷ்ணன் துாது வந்த போது நடந்த சம்பவத்தை தெரிவித்தான் துரியோதனன். இதை கேட்ட அஸ்வத்தமான் விரக்தியில் சிரித்தான். 'கிருஷ்ணனின் விரலில் இருந்த மோதிரம் கீழே விழுந்தது. அதை தான் எடுத்து கொடுத்தேன். சத்தியம் எதுவும் செய்யவில்லை. என் மீது சந்தேகப்பட்டு, உன் தோல்வியை தேடி கொண்டாய். அப்போதே இது பற்றி என்னிடம் கேட்டிருந்தால், நடந்தது தெரிந்திருக்கும். இதுவும், அந்த கிருஷ்ணனின் விளையாட்டுதான்' என்றான் அஸ்வத்தாமன். 

மகாபாரத போரின் கடைசி இரவின் போது, பாண்டவர்களை கொல்வதாக நினைத்து, திரௌபதியின் ஐந்து புதல்வர்களையும் கொன்றார். பின்னர் பாண்டவர்களை கொல்ல, சக்தி வாய்ந்த ஆயுதமான பிரம்மாஸ்திரத்தை பயன்படுத்தினார். ஆனால் சக்தி வாய்ந்த அந்த ஆயுதத்தை பயன்படுத்த வேண்டாம் என வியாச முனிவர் அவரை தடுத்து நிறுத்தினார். ஆனால் அந்த ஆயுதத்தை எப்படி பயன்படுத்தாமல் திரும்பி அழைப்பது என அஸ்வத்தாமாவிற்கு தெரியவில்லை. அதனால் உத்தாராவின் கருவில் இருந்த அபிமன்யுவின்  குழந்தையை கொல்ல அதை அவர் ஏவினார். இதனால் பாண்டவர்களின் பரம்பரை அழிந்தது விடும் எனவும் நினைத்தார்.

அஸ்வத்தாமாவின் இந்த குணத்தை கண்டு கோபமடைந்த கிருஷ்ணர், தன் பாவத்தை சுமக்கும் விதமாக,  கலியுகம் முடியும் காலம் வரை இந்த பூமியை அஸ்வத்தாமா வலம் வர வேண்டும் என்ற சாபத்தை அளித்தார். எப்போதுமே அவர் யாருடைய அன்பையும் பெற முடியாது. அதே போல் யாராலும் அவர் வரவேற்கப்பட மாட்டார். தன் நெற்றியில் உள்ள ரத்தினக்கல்லை திருப்பி கொடுக்கும் படியும் கிருஷ்ணர் கூறினார். அதனால் தன் நெற்றியில் ஏற்பட போகும் புண் என்றும் ஆறாது என்றும் சாபமளித்தார். அதனால் தான் மோட்சத்தை தேடி இன்னமும் அஸ்வத்தாமா இந்த உலகத்தில் சுற்றி திரிகிறார் என நம்பப்படுகிறது.அஸ்வத்தாமாவை பார்க்க வேண்டும் என்று நினைப்பவர்கள் அவர் எப்படி இருப்பார் அவரது சக்தி என்ன என்று கல்கி 2898 படத்தினை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow