Fahadh Faasil Networth: ஃபஹத் பாசில் சொத்து மதிப்பு எத்தனை கோடின்னு தெரியுமா..? HBD Fa Fa

மலையாள நடிகர் ஃபஹத் பாசில் இன்று தனது 42வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு அவருக்கு ரசிகர்களும் திரை பிரபலங்களும் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், ஃபஹத் பாசிலின் சொத்து மதிப்பு, அவர் வாங்கும் சம்பளம் பற்றிய விவரங்களை இப்போது பார்க்கலாம்.

Aug 8, 2024 - 12:36
Aug 8, 2024 - 12:39
 0
Fahadh Faasil Networth: ஃபஹத் பாசில் சொத்து மதிப்பு எத்தனை கோடின்னு தெரியுமா..? HBD Fa Fa
Fahadh Faasil Networth

சென்னை: இயக்குநர் பாசிலின் மகனாக திரையுலகில் அறிமுகமான ஃபஹத் பாசிலுக்கு, ஆரம்பமே பெரும் தலை வலியாக போனது. ஹீரோவாக தனது பயணத்தைத் தொடங்கிய ஃபஹத் பாசிலை, நடிக்கவே தெரியவில்லை, இவரெல்லாம் ஒரு நடிகனா என அவர் காது படவே கடுமையாக விமர்சித்தினர். இதனால் ஒருகட்டத்தில் நடிப்பதை நிறுத்திவிட்டு, அமெரிக்கா பறந்தார் ஃபஹத். அங்கு சினிமா குறித்தும், நடிப்பது பற்றியும் படித்துவிட்டு இந்தியா ரிட்டர்ன் ஆனார். அதன்பின்னர் தான் யார்..? எப்பேற்பட்ட கலைஞன் என்பதை ஃபிரேம் பை பிரேம்-ஆக வெளிகாட்டத் தொடங்கினார் ஃபஹத் பாசில்.

ஆம்! ஹீரோவாக ஃபஹத் பாசிலின் செகண்ட் ரவுன்ட் தாறுமாறாக இருந்தது. ஃபஹத்தின் காது பட ட்ரோல் செய்த இயக்குநர்களும் தயாரிப்பாளர்களும், அவர் வீட்டு வாசலில் கால் கடுக்க கால்ஷீட்டுக்காக காத்திருந்தனர். தோல்விகளையும் விமர்சனங்களையும் பக்குவமாக கையாண்ட ஃபஹத் பாசில், பின்னர் அதனை மிக நேர்த்தியாக அறுவடை செய்தார். இதுதான் ஃபஹத் பாசிலின் சிறந்த நடிப்பு என சொல்ல முடியாத அளவுக்கு, தான் நடித்த ஒவ்வொரு படத்திலும் தனது முத்திரையை அழுத்தமாக பதிவு செய்தார்.

கேரள கஃபே, 22 ஃபீமேல் கோட்டயம், டைமண்ட் நெக்லேஸ், அமென், அன்னயும் ரசூலும், பெங்களூர் டேய்ஸ், மகேஷிண்ட பிரதிகாரம், டேக் ஆஃப், தொண்டிமுதலும் திருக்ஷாயிஷமும், கும்பளங்கி நைட்ஸ், ட்ரான்ஸ், ஜோஜி, மாலிக், மலையான்குஞ்சு, ஆவேசம், தமிழில் விக்ரம், மாமன்னன், தெலுங்கில் புஷ்பா 2 என இப்படியாக சொல்லிக்கொண்டே போகலாம். ஃபஹத் பாசிலின் நடிப்பில் அவரது கண்கள் செய்யும் மாய வித்தைகளுக்கு மயங்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. எந்தளவிற்கு நடிப்புக்காக விமர்சிக்கப்பட்டாரோ, அதைவிட அதிகமாக இப்போது மகா நடிகனாக வலம் வருகிறார் ஃபஹத்.

இதனால் ஃபஹத் பாசிலுக்கு பல மொழிகளில் இருந்தும் படங்களில் நடிக்க வாய்ப்புகள் தேடிச் செல்கின்றன. சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் வேட்டையனில் நடித்துள்ள ஃபஹத் பாசில், அடுத்து வடிவேலு கூட்டணியில் மாரீசன் என்ற படத்திலும் கமிட்டாகியுள்ளார். இன்னொரு பக்கம் புஷ்பா இரண்டாம் பாகத்தில் ஃபஹத் பாசிலின் மிரட்டல் தரமாக இருக்கும் என டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இன்று அவரது பிறந்தநாளை முன்னிட்டு வேட்டையன் படக்குழு சிறப்பு போஸ்டரையும் வெளியிட்டு அசத்தியுள்ளது.

இந்நிலையில், ஃபஹத் பாசில் ஒரு படத்துக்கு அதன் பட்ஜெட்டை பொறுத்து தான் சம்பளம் வாங்குகிறாராம். மலையாளத்தில் பெரும்பாலும் மினிமம் பட்ஜெட்டில் தான் படங்கள் எடுக்கப்படுகின்றன. அதனால் மல்லுவுட்டில் ஒரு படத்துக்கு 3 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்குவதாக சொல்லப்படுகிறது. ஆரம்ப காலங்களில் மலையாளத்தில் 70 லட்சம் தான் சம்பளமாக வாங்கியுள்ளார் ஃபஹத். அதேபோல், புஷ்பா படத்திற்காக 8 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியுள்ளாராம் ஃபஹத். ரஜினியின் வேட்டையன் படத்துக்கு 5 கோடி ரூபாய் சம்பளம் என சொல்லப்படுகிறது.

மேலும் படிக்க - நாக சைதன்யா - சோபிதா துலிபலா நிச்சயதார்த்தம்

அதன்படி ஒரு வருடத்துக்கு 4 முதல் 5 படங்களில் நடிக்கும் ஃபஹத் பாசில், 30 கோடி ரூபாய் வரை வருமானம் ஈட்டுகிறாராம். இதுதவிர படங்கள் தயாரிப்பதன் மூலமும் லாபம் பார்க்கிறார் ஃபஹத் பாசில். இந்தாண்டு அவரது தயாரிப்பில் வெளியான பிரேமலு, ஆவேசம் இரண்டு படங்களுமே சூப்பர் ஹிட் அடித்தன. அதோடு 100 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்தன. இதனடிப்படையில் ஃபஹத் பாசிலின் ஆண்டு வருமானம் 100 கோடி ரூபாய் வரை இருக்கலாம் என கூறப்படுகிறது.

மேலும், கொச்சி, சென்னை, பெங்களூரு, துபாய் ஆகிய இடங்களில் ஃபஹத் பாசிலுக்கு சொந்தமாக வீடுகளும் பிளாட்களும் உள்ளன. அதேபோல், தீவிர கார் பிரியரான ஃபஹத் பாசில், தனது காதல் மனைவி நஸ்ரியா நஸிம்க்கு அடிக்கடி சொகுசு கார்களை அன்பளிப்பாக வழங்கி வருகிறார். ஃபஹத் பாசிலிடம் 2.65 கோடி ரூபாய் மதிப்புடைய Porsche 911 Carrera S ரக கார் உள்ளது. அதேபோல் 70 லட்சம் மதிப்பிலான மெர்சிடிஸ் பென்ஸ் இ கிளாஸ், 2.35 கோடி மதிப்பிலான Range Rover Vogue, Audi, BMW, Mini Cooper, Volvo உள்ளிட்ட பல சொகுசு கார்களை வாங்கியுள்ளார் ஃபஹத் பாசில். அதன்படி, ஃபஹத் பாசிலின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு 200 முதல் 250 கோடி ரூபாய் வரை இருக்கும் எனக் கூறப்படுகிறது.   

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow