சனி பெயர்ச்சி பலன் 2024: ஏழரை சனி பாதிப்பா?... சனி தோஷம் நீங்க ஈஸி பரிகாரம்

Sani Peyarchi Palan 2024 : நவகிரகங்களில் சனி பகவானின் பார்வைக்கு பயப்படாதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள். சனியின் பிடியில் நாம் சிக்கியிருக்கிறோம் என்பதை சில அறிகுறிகள் மூலம் உணர்ந்து கொள்ளலாம்.

Jul 18, 2024 - 09:28
Jul 19, 2024 - 10:07
 0
சனி பெயர்ச்சி பலன் 2024: ஏழரை சனி பாதிப்பா?...  சனி தோஷம் நீங்க ஈஸி பரிகாரம்
Sani Peyarchi Palan 2024

Sani Peyarchi Palan 2024 : நவகிரகங்களில் சனியால் கிடைக்கும் பலன்கள் எந்த அளவிற்கு அதிகமானதோ அதே போல பாதிப்புகளும் அதிகம் இருக்கும் என்பதால்தான் பலரும் பயப்படுகின்றனர். விரைய சனி, ஜென்ம சனி, பாத சனி என ஏழரை ஆண்டுகாலம் படுத்தி எடுத்து பல படிப்பினைகளை கற்றுக்கொடுத்து விடுவார். சிலருக்கு சனியின் பாதிப்பு(Saturn Effect) பற்றி தெரியாது. நமக்கு ஏழரை நடக்குதோ என்று அவர்களாகவே நினைத்துக்கொள்வார்கள். சனிபகவானின்(Sani Bhagavan) பிடியில் நாம் சிக்கியிருக்கிறோம் என்பதை சில அறிகுறிகளை வைத்தே அறிந்து கொள்ளலாம். 

காகங்கள் உணர்த்தும் அறிகுறி:

சனிபகவான் வாகனமான காகம்(Crows Vehicle of Shani Bhagavan), சனியின் வசிப்பிடங்களாக கருதப்படும் இடங்களை நாம் கடக்க நேரிடும் போது சில பாதிப்புகள் ஏற்படும் அதை வைத்தே நமக்கு சனியால் சில சங்கடங்கள் வரப்போகிறது என்பதை அறியலாம். காகம் ஒருவரை விடாமல் துரத்தும். சாதாரணமாக செல்லும் போதே எச்சம் போடும். சிலரை தலையில் உடம்பில் கொத்தும் அப்போது கோச்சாரப்படி சனி நமக்கும் சங்கடமான நிலையில் இருக்கிறார் என்பதை உணர்ந்து கொள்ளலாம். அதற்கான பரிகாரம் செய்தால் போதும் பாதிப்புகள் படிப்படியாக குறையும். 

அழுக்கு சோம்பேறிகள்:

சனியின் பிடியில் இருப்பவர்கள் சோம்பேறிகளாக இருப்பார்கள். லேட்டாக எழுந்திருப்பார்கள். அசுத்தமானவர்களாக இருப்பார்கள். சுத்தமாக இருக்கமாட்டார்கள். பல் கூட விளக்காமல் காபி குடிப்பார்கள். அடிக்கடி விழுந்து எலும்பில் அடிபடுவார்கள். இவர்கள் எல்லாம் சனியின் பிடியில் சிக்கியிருப்பவர்கள். 

குப்பை தொட்டிகள்: 

நம் வீட்டு முன்பு திடீரென குப்பைத் தொட்டி முளைக்கும். குப்பை லாரியில் இருக்கும் குப்பை திடீரென உங்கள் மீது விழும். தெரியாமல் மலத்தை மிதித்து விடுவீர்கள். சிலருக்கு ரயிலில் பயணம் செய்யும் போது பாத்ரூம் அருகில் சீட் கிடைக்கும். மூக்கை பிடித்தவாறே பயணிக்க வேண்டியிருக்கும். ஏழரை சனி காலத்தில் ஏற்படும் பாதிப்புகள் நீங்க பரிகாரம் உள்ளது.

காகத்திற்கு எள் சாதம்

சனிக்கிழமை(Non Veg on Saturday) அசைவ உணவு கண்டிப்பாக சாப்பிடக் கூடாது.  தினமும் காகத்திற்கு எள் கலந்த சாதம் வைக்கவும். சனிக்கிழமை தோறும் பகவானுக்கு இரும்பு அகல் விளக்கில் நல்லெண்ணையில் தீபம் ஏற்றி வழிபடவும். கருங்குவளை மலர்களால் சனி பகவானுக்கு அர்ச்சனை செய்து வரலாம்.  வன்னி மர இலைகளை மாலைகளாகத் தொடுத்து சிவபெருமானுக்கு சனிக்கிழமை தோறும் சாற்றி வணங்கி வழிபடவும். சனிக்கிழமை தோறும் நல்லெண்ணை குளியல் செய்தால் கெடுதல் குறையும். விநாயகர் கோவிலுக்கு சென்று வழிபடலாம். 


சனி தோஷம் நீங்க பரிகாரம்: 

பச்சரிசியை ஒரு கையில் அள்ளி அதை நன்கு பொடி செய்து சூரிய நமஸ்காரம் செய்துவிட்டு விநாகரை வணங்க வேண்டும். பிறகு விநாயகரை மூன்று சுற்று சுற்ற வேண்டும். அப்போது கையில் உள்ள அரிசியை போட வேண்டும். அதை எறும்புகள் தூக்கி செல்லும். அப்படி தூக்கி சென்றால் நமது பாவங்களில் பெரும்பாலனவை நம்மை விட்டு போய்விடும். வன்னி மரத்தடி விநாயகர் கோவில் என்றால் அது இன்னமும் சிறப்பானது. ஏழரை சனி காலத்தில் இதனை மறக்காமல் செய்ய வேண்டும்.

பச்சரிசி பரிகாரம்:

பச்சரிசி மாவை எறும்புகள் தமது மழைக்காலத்துக்காக சேமித்து வைத்து கொள்ளூம். இரண்டரை ஆண்டுகளுக்கு எறும்புக்கு அந்த உணவு போதும். இதை முப்பத்துமுக்கோடி தேவர்கள் பார்த்து கொண்டிருப்பார்கள்.  அடிக்கடி பச்சரிசி மாவை எறும்புக்கு உணவாக போட வேண்டும். ஒரு எறும்பு சாப்பிட்டால் 108 ஏழைகள் சாப்பிட்டதற்கு சமம். இதன் மூலம் இந்த பரிகாரத்தின் மகத்துவத்தை உணர்ந்து கொள்ளலாம். இந்த பரிகாரத்தை அடிக்கடி செய்தால் சனிபகவான் தொல்லையில் இருந்து தப்பிக்கலாம்.

கால பைரவர் :

அனுமாரை வழிபட சனி பகவானால் ஏற்படும் தொல்லைகள் குறையும். ஞாயிற்றுக்கிழமை மாலை ராகு கால வேளையில் கால பைரவரை வணங்கலாம்.  தேய்விறை அஷ்டமி நாளில் கால பைரவரை வணங்கலாம். அனாதை இல்லங்கள், முதியோர் இல்லங்களுக்கு உதவிகளைச் செய்யலாம். தினமும் ராம நாமம் ஜெபித்து வந்தால் சனிபகவானின் தொல்லையிலிருந்து தப்பிக்கலாம்.

ஊனமுற்றவர்களுக்கு உதவி:

ஏழை மாணவர்களின் கல்வி கட்டணம், படிப்பு செலவுக்கு உதவலாம். சனி பிரதோஷ வழிபாடு செய்வது சிறந்தது. அன்னதானத்திற்கு உதவி செய்யலாம்.சித்தர்களின் பீடங்கள், ஜீவ சமாதி பீடங்களுக்கு சென்று வணங்கி வழிபடலாம்.  உடல் ஊனமுற்றவர்களுக்கு, விதவைகளுக்கு உதவி செய்யுங்கள் சனியால் ஏற்பட்ட தோஷங்கள் நீங்கும். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow