சூரிய பெயர்ச்சி.. கடக ராசிக்கு இடப்பெயர்ச்சியான சூரியன்.. கவனமாக இருக்க வேண்டியது யார்?

Sooriya Peyarchi Palan 2024 : சூரிய பெயர்ச்சியால் மேஷம் முதல் மீனம் வரை சில ராசிக்காரர்களுக்கு மகாலட்சுமி யோகம் தேடி வரப்போகிறது.

Jul 17, 2024 - 10:30
Jul 18, 2024 - 10:22
 0
சூரிய பெயர்ச்சி..  கடக ராசிக்கு இடப்பெயர்ச்சியான சூரியன்.. கவனமாக இருக்க வேண்டியது யார்?
Sooriya Peyarchi Palan 2024

Sooriya Peyarchi Palan 2024 : சூரிய பகவான் மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைந்துள்ளார். தட்சிணாயன புண்ணிய காலம் இன்று முதல் தொடங்குகிறது. கடக சங்கராந்தி காலமான இன்று முதல் சூரியனின் ராசி மாற்றத்தினாலும் கடக ராசியில் கிரகங்களின் கூட்டணியாலும் எந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று பார்க்கலாம். 

மேஷம் :  

வேலையில் புரமோசனும் சம்பள உயர்வும் கிடைக்கும்.  புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பொறுமையும் நிதானமும் தேவைப்படும். ஆடி மாதத்தில் சூரியனுடன்  நான்காம் வீட்டில் புதன், சுக்கிரன் இணைந்து பயணம் செய்வதால்  திடீர் பண வருமானம் குபேர யோகத்தை தரப்போகிறது. 

ரிஷபம்  :   

வேலையில் இட மாற்றம் உண்டாகும், பயணங்களால் நன்மை ஏற்படும்.  தகவல் தொடர்பு சிறப்படையும், மனதில் குதுகலம் உண்டாகும்.    தொழில் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். சுப விரைய செலவுகள் அதிகரிக்கும். 

மிதுனம்  :

வேலை செய்யும் இடத்தில் தேவையற்ற வீண் பேச்சுகளை தவிர்க்கவும், திடீர் என்று பணம் கிடைக்கும். நீண்ட நாட்கள் கிடைக்காமல் பாக்கி இருந்த பணம் வசூலாகும், உங்களின்  வருமானம் அதிகரிக்கும். 
  
கடகம்  :  

குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். பிள்ளைகளின் படிப்பிற்காக கடன் வாங்கும் நிலை உண்டாகும். வேலை தொழிலில் புதிய முன்னேற்றம் ஏற்படும். வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும், உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.  பேசும் வார்த்தைகளில் கவனம் தேவை. கோபத்தை கட்டுப்படுத்தவும். உங்களுடைய ராசியில் சூரியன், சுக்கிரன், புதன் ஆகிய கிரகங்கள் கூடியுள்ளதால் மகாலட்சுமி யோகம் கிடைக்கப்போகிறது. 

சிம்மம்  :  

சூரியன்  உங்கள் ஜென்ம ராசிக்கு  பன்னிரெண்டாமிடத்தில் சூரியன் பயணம் செய்வதால் திடீர் செலவுகள் வந்து போகும்.  ஷேர் மார்க்கெட் முதலீடுகளைத் தவிர்ப்பது நல்லது.   பொழுது போக்கு விஷயங்களில் கவனம் தேவை.  எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும். 

கன்னி  : 

சூரியன்   லாப ஸ்தானத்தில் பயணம் செய்யும் காலத்தில் வருமானம் அதிகரிக்கும். வங்கியில் சேமிப்பு உயரும்.  திருமணம் ஆகாதவர்களுக்கு வரன் நிச்சயமாகும். இந்த மாதத்தில் உங்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகிறது தேடி வரப்போகும் குபேர யோகத்தை அனுபவிக்கத் தயாராகுங்கள்.

துலாம்  :   

புதிய  வேலைக்கு முயற்சிப்பவர்களுக்கு வேலை கிடைக்கும், தொழில் நிலை சிறப்படையும்.  ஷேர் மார்க்கெட் தொழில் சிறப்படையும், வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும் முன்னேற்றம் ஏற்படும்.   பத்தாம் வீடான தொழில் ஸ்தானத்தில் 3 கிரகங்கள் கூட்டணி அமைத்துள்ளதால் குடும்பத்தில் மகிழ்ச்சியும் நிம்மதியும் உண்டாகும். 

விருச்சிகம்  :   

சூரியன்  ஒன்பதாமிடத்தில் பயணம் செய்வதால், வியாபாரம் விருத்தியடையும்.  பாக்ய ஸ்தானத்தில் 3 கிரகங்கள் இணைந்துள்ளதால் மகாலட்சுமி யோகம் தேடி வரப்போகிறது. தடைகளை தாண்டி சுப காரியங்கள் நடைபெறும். ஆடி மாதத்தில் அதிர்ஷ்டம் கை கூடி வரப்போகிறது. 
   
தனுசு :    

சூரியன் சுக்கிரன் புதன் 8ஆம் வீட்டில் கூடியுள்ளதால்  கோபமான பேச்சுகளை தவிர்க்கவும்.  ஷேர் மார்க்கெட் முதலீடுகளில் கவனம் தேவை, யாருக்கும் கடன் கொடுக்க வேண்டாம்.   நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும், லாபம் அதிகரிக்கும்.  மாத பிற்பகுதியில் குடும்பத்தின் வருமானம் அதிகரிக்கும்.

மகரம் :   

சூரியன்  ஏழாமிடத்தில் பயணம் செய்யும் காலத்தில்    சில்லறை வியாபாரம் சிறப்படையும், தாய் மாமனால் நன்மை உண்டாகும். வீட்டிற்குத் தேவையான ஆடம்பரப் பொருட்களை வாங்குவீர்கள்.   சுப விரைய  செலவுகள் அதிகரிக்கும். பணத்தை சேமிக்கப் பழகுங்கள்.

கும்பம் :    

சூரியன்   ஆறாமிடத்தில் இருக்கிறார்  பயணம் செய்வதால் ஷேர் மார்க்கெட் முதலீடுகளை தவிர்க்கவும்.  கணவன் மனைவி இடையே அன்னியோன்னியம் அதிகரிக்கும் விலை உயர்ந்த ஆடை ஆபரணங்களை கவனமாக கையாளவும்.  

மீனம் :   

சூரியன் சுக்கிரன் உடன் இணைந்து பூர்வ புண்ணிய ஸ்தானமான 5ஆம் வீட்டில் பயணம் செய்வதால்  ஷேர் மார்க்கெட் முதலீடுகள் லாபத்தைக் கொடுக்கும்.  எதிர் பாராத இடத்திலிருந்து பணம் கிடைக்கும்.  தொழில் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow