Aadi Amavasai 2024 : ஆடி அமாவாசை.. ராமேஸ்வரம், குமரியில் குவிந்த மக்கள்.. புனித நீராடி தர்ப்பணம் அளித்து வழிபாடு

Aadi Amavasai 2024 Tharpanam in Kanniyakumari : ஆடி அமாவாசையை முன்னிட்டு ரமேஸ்வரத்தில் மறைந்த நம்முடைய முன்னோர்களுக்கு தர்ப்பணம் தர ஏராளமானோர் குவிந்துள்ளனர். கன்னியாகுமரி முக்கடல் சங்கமம் மற்றும் குழித்துறை தாமிரபரணி ஆறு ஆகிய இடங்களில் நாளை பலி தர்ப்பணம் நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

Aug 3, 2024 - 11:44
Aug 3, 2024 - 15:05
 0
Aadi Amavasai 2024 : ஆடி அமாவாசை.. ராமேஸ்வரம், குமரியில் குவிந்த மக்கள்.. புனித நீராடி தர்ப்பணம் அளித்து வழிபாடு
Aadi Amavasai 2024 Tharpanam in Kanniyakumari

Aadi Amavasai 2024 Tharpanam in Kanniyakumari : தட்சிணாயன புண்ணிய காலத்தின் முதல் அமாவாசை தினத்தில் நமது முன்னோர்கள் பித்ரு லோகத்தில் இருந்து தமது சந்ததியரை காண கிளம்புவார்கள். மகாளய அமாவாசை நாளில் 14 நாட்கள் நம்முடன் வந்து தங்கியிருப்பார்கள்.தை அமாவாசை நாளில் இந்த பூ உலகத்தை விட்டு பித்ரு லோகத்திற்கு கிளம்பி செல்வார்கள். இந்த மூன்று அமாவாசை நாட்களிலும் தர்ப்பணம் கொடுத்து நமது முன்னோர்களை வழிபட வேண்டும்.

ஆறு, கடல் உள்ளிட்ட நீர்நிலைகளில் ஆடி அமாவாசை நாளில் தர்ப்பை புல்லை வைத்து, அதில் பித்ருக்களை ஆவாஹனம் செய்து எள்ளும், நீரும் தண்ணீரில் வாரி இறைத்து தர்ப்பணம் செய்கின்றனர். எள்ளும் தண்ணீரும் இறைத்து முன்னோர்களை வழிபட்டால் நமது முன்னோர்களின் ஆசி கிடைக்கும் 

முன்னோர்களுக்கு ராமேஸ்வரத்தில் தர்ப்பணம் கொடுத்து வழிபடுவார்கள். ஆடிப்பெருக்கு தினமான இன்று காலை முதலே ஏராளமானோர் அக்னி தீர்த்தக்கடலில் புனித நீராடி மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர். இன்று பிற்பகல் முதல் அமாவாசை திதி தொடங்குவதால்  ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக்கடலில் ஏராளமானோர் புனித நீராடிவிட்டு 22 தீர்த்தங்களில் நீராடி பல மணி நேரம் காத்திருந்து ராமநாதசுவாமியை வழிபட்டனர். 

ஆடி அமாவாசையை (Aadi Amavasai) முன்னிட்டு ராமநாதசுவாமிக்கு அக்னி தீர்க்கக்கடலில் தீர்த்தவாரி நடைபெற உள்ளது. ஏராளமானோர் ராமேஸ்வரத்தில் குவிந்துள்ளதால் எங்கும் மனித தலைகளாக காணப்படுகிறது. 

கன்னியாகுமரி முக்கடல் சங்கமம், குழித்துறை தாமிரபரணி ஆறு, திற்பரப்பு அருவி பகுதிகள், கணபதிபுரம் அருகே ஆயிரங்கால் பொழிமுகம் கடல் பகுதி உள்ளிட்ட இடங்களில் பலி தர்ப்பணம் நிகழ்ச்சிகள் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. கன்னியாகுமரியில் முக்கடல் சங்கமம் பகுதியில் அதிகாலை முதல் பக்தர்கள் திரண்டு கடலில் புனித நீராடி, கடற்கரையில் பலி தர்ப்பணம் செய்கின்றனர். இதற்காக புரோகிதர்களும் ஏராளமானோர் கன்னியாகுமரியில் குவிய தொடங்கி உள்ளனர். பலிகர்ம பூஜை செய்த பின்னர் பலிகர்ம பொருட்களுடன் கடலில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்கின்றனர். பின்னர்  கடற்கரையில் உள்ள பரசுராமர், விநாயகர் மற்றும் பகவதி அம்மன் சன்னதிகளில் தரிசனம் செய்துவிட்டு வீடுகளுக்கு திரும்பி செல்கின்றனர். 

இதனையொட்டி கன்னியாகுமரி கடற்கரை பகுதிகள், படித்துறைகள் சுத்தப்படுத்தப்பட்டுள்ளது.குழித்துறை நகராட்சி சார்பில் இதற்கு தேவையான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. குழித்துறை தாமிரபரணி ஆற்றின் கரையில் நடைபெறும் பலி தர்ப்பண நிகழ்ச்சியில் கேரள மாநில பகுதிகளான பாறசாலை, நெய்யாற்றின்கரை பகுதிகளை சேர்ந்தவர்களும் வருகை தருவது வழக்கம். ஆண்களை போன்று பெண்களும் இங்கு பலி தர்ப்பண சடங்குகளில் பங்கேற்கின்றனர். முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளிக்க குவிந்துள்ளதால் கன்னியாகுமரி கடற்கரை முழுவதும் மனித தலைகளாக காணப்படுகிறது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow