Madurai : ‘ஆபாச புகைப்படத்தை வெளியிடுவோம்’ - லோன் ஆப் மூலம் பெண்ணிற்கு நேர்ந்த சோகம்

Madurai Women Threatened By Mystery Gang : வாங்காத லோனிற்கு பணத்தை செலுத்த கூறி முகத்தை மார்பிங் செய்து வெளியிடுவோம் என பெண்ணை மிரட்டிய கும்பல் மீது மதுரை சைபர் கிரைம் காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

Aug 3, 2024 - 11:37
Aug 3, 2024 - 13:21
 0
Madurai : ‘ஆபாச புகைப்படத்தை வெளியிடுவோம்’ - லோன் ஆப் மூலம் பெண்ணிற்கு நேர்ந்த சோகம்
Madurai Women Threatened By Mystery Gang

Madurai Women Threatened By Mystery Gang : மதுரை மாநகர் திருநகரை சேர்ந்த ராஜேஸ்வரி (பெயர் மாற்றம்) 42 வயது நிரம்பிய பெண் ஒருவர் கடந்த மார்ச் மாதம் KreditBee Loan App என்ற ஆன்லைன் கடன் செயலி மூலம் ரூ.20 ஆயிரம் வாங்கியுள்ளார். அதனை மாதாந்திர அடிப்படையில் முழுவதுமாக லோனை கட்டி முடித்துள்ளார். 

இந்நிலையில் கடந்த 29ஆம் தேதி அப்பெண்ணுக்கு வாட்ஸ் ஆப் எண்ணிற்கு, தெரியாத எண்ணிலிருந்து லோன் வேண்டுமா? என்று BALSAM Credit ஆப் என்ற பெயரில் லிங்க் ஒன்று வந்துள்ளது. அந்த LINK-ஐ கிளிக் செய்துவிட்டு பின்னர் அதனை டெலிட் செய்துள்ளார். இதனையடுத்து சில நிமிடங்களில் இளம்பெண்ணின் வாட்ஸ் ஆப் எண்ணிற்கு BALSAM Credit என்ற பெயரில் இருந்து 3ஆயிரம் வரவு வைக்கப்பட்டுள்ளதாக ஒரு மெசேஜ் வந்துள்ளது.

இதனையடுத்து அந்த பெண் நிர்வகித்து வரும் வங்கி கிளைக்கு சென்று, வங்கி மேலாளரிடம் தன்னுடைய வங்கி கணக்கு குறித்து விவரங்களை கேட்டபோது 3 ஆயிரம் ரூபாய் வரவு வைக்கவில்லை என தெரியவந்துள்ளது. இந்நிலையில், மீண்டும் அந்த வாட்ஸ் ஆப் எண்ணிலிருந்து உங்கள் வங்கி கணக்கிற்கு ரூ.3 ஆயிரம் வரவு வைக்கப்பட்டுள்ளது. உங்கள் கடனை நீங்கள் திருப்பி செலுத்த வேண்டும் என குறுந்தகவல் வந்துள்ளது. மேலும், அந்த எண்ணிலிருந்து மர்ம நபர் தொடர்ச்சியாக தொந்தரவு செய்துள்ளார்.

அதற்கு அந்த பெண்மணி எனக்கு லோன் வரவே இல்லை.? நான் ஏன் தர வேண்டும் என பதிலளித்துள்ளார். ரூ.3 ஆயிரம் பணத்தை உடனே திருப்பி செலுத்தாவிட்டால், உங்களது புகைப்படத்தை மார்பிங் செய்து ஆபாச படமாக மாற்றி அதனை உங்களது குடும்ப உறுப்பினர்களுக்கும், நண்பர்களுக்கு சமூக வலைத்தளங்களிலும் அனுப்பிவிடுவோம் என மிரட்டியுள்ளனர்.
 
தொடர்ச்சியாக, அந்த பெண்ணின் உறவினர் ஒருவருக்கு பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக மார்பிங் செய்து அனுப்பியதோடு மட்டுமல்லாமல், இது போன்று தொடர்ந்து உங்களது உறவினருக்கு அனுப்புவோம் என கூறியுள்ளனர். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவர், செய்வதறியாது பதற்றத்தில் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்து அதற்கான முயற்சியும் மேற்கொண்டுள்ளார்.
 
இதனையடுத்து தனது உறவினரின் உதவியுடன் சைபர் கிரைம் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தனர். புகாரை பெற்றுக்கொண்ட மதுரை இணையவழி குற்றப்பிரிவு காவல்துறையினர் பாதிக்கப்பட்ட பெண்ணின் மன உளைச்சலை போக்குவதற்கான மன நல ஆலோசனைகளை வழங்கினர். 

மதுரை சைபர் கிரைம்(Madurai Cyber Crime Police) காவல் நிலையத்திற்கு நாள்தோறும் இதுபோன்று மொபைல் லோன் ஆஃப் மூலமாக 2-ஆயிரம், 3 ஆயிரம் என குறைந்த தொகையை கடன் வாங்கிவிட்டு இது போன்று மோசடி கும்பல்களில் சிக்கி தவிக்கும் நபர்கள் ஏராளமானவர்கள் தரப்பு புகார்கள் வந்து கொண்டே இருப்பதாகவும், எனவே இது போன்ற போலியான கடன் செயலிகளை யாரும் பயன்படுத்த வேண்டாம் எனவும் அங்கீகாரம் பெற்ற வங்கிகளை மட்டும் பயன்படுத்த வேண்டும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow