VidaaMuyarchi: தீரா சாதனைகளும் ஆறா ரணங்களும்... அஜித்தின் 32 ஆண்டுகள்... விடாமுயற்சி ஸ்பெஷல் போஸ்டர்

VidaaMuyarchi Team Special Poster on 32 Years Of Ajith Kumar : அஜித்தின் 32 ஆண்டுகால திரையுல பயணத்தை கொண்டாடும் விதமாக விடாமுயற்சி படக்குழு வெளியிட்டுள்ள ஸ்பெஷல் போஸ்டர் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Aug 3, 2024 - 11:33
Aug 3, 2024 - 12:36
 0
VidaaMuyarchi: தீரா சாதனைகளும் ஆறா ரணங்களும்... அஜித்தின் 32 ஆண்டுகள்... விடாமுயற்சி ஸ்பெஷல் போஸ்டர்
VidaaMuyarchi Team Special Poster on 32 Years Of Ajith Kumar

VidaaMuyarchi Team Special Poster on 32 Years Of Ajith Kumar : கோலிவுட் மாஸ் ஹீரோவான அஜித் சினிமாவில் அறிமுகமாகி 32 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். தெலுங்கில் பிரேம புஸ்தகம், தமிழில் அமராவதி படங்கள் மூலம் ஹீரோவாக என்ட்ரியான அஜித், இதுவரை 61 படங்களில் நடித்துள்ளார். அஜித்தின் 62வது படமாக விடாமுயற்சி உருவாகியுள்ளது. மகிழ் திருமேனி இயக்கியுள்ள இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. அஜித்துடன் த்ரிஷா, அர்ஜுன், ஆரவ் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். கடந்தாண்டு தொடங்கிய விடாமுயற்சி ஷூட்டிங், சில தினங்களுக்கு முன்னர் தான் முடிவுக்கு வந்தது.   

இதனிடையே விடாமுயற்சி ஷூட்டிங் ட்ராப் ஆகிவிட்டதாக தகவல்கள் வெளியானதால், இப்படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டது. அஜித்(Ajith), ஆரவ் இருவரும் நடித்த கார் சேஸிங் மேக்கிங் வீடியோவான அது மிகப்பெரிய அளவில் ட்ரெண்டாகி, படத்துக்கு பப்ளிசிட்டியாக அமைந்தது. அந்தக் காட்சியில் அஜித்தும் ஆரவ்வும் கார் விபத்தில் சிக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. அதன்பின்னர் அஜித்தின் ஃபர்ஸ்ட் லுக், செகண்ட் லுக், அஜித் – த்ரிஷா இருவரது போஸ்டர், ஆக்ஷன் கிங் அர்ஜுன் போஸ்டர் ஆகியவை அடுத்தடுத்து வெளியாகின.    

இந்நிலையில், அஜித் சினிமாவில்(32 Years Of Ajith) அறிமுகமாகி 32 ஆண்டுகளை கடந்ததை கொண்டாடும் விதமாக, அடுத்து ஒரு சிறப்புப் போஸ்டரை விடாமுயற்சி படக்குழு வெளியிட்டுள்ளது. பிளாக் & ஒயிட் கலரில் வெளியாகியுள்ள இந்தப் போஸ்டரில், முகத்தில் ரத்தம் வடிந்தபடி ஆக்ரோஷமாக போஸ் கொடுத்துள்ளார் அஜித். அதோடு, “32 ஆண்டுகள் தீரா சாதனைகளும்... ஆறா ரணங்களும் யாவையும் எதிர்கொண்டு வெல்லும் விடாமுயற்சி” என்ற கேப்ஷன் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும்,’விடமுயற்சி திருவினையாக்கும்’ #32YearsOfAjithKumar #32YearsOfGlory என்ற ஹேஷ்டேக்களில் இந்த போஸ்டரை ஷேர் செய்துள்ளது.

இதனையடுத்து விடாமுயற்சி படத்தின் ஸ்பெஷல் போஸ்டரை அஜித் ரசிகர்கள் தங்களது சமூக வலைத்தள பக்கங்களில் வைரலாக்கி வருகின்றனர். அஜித்தின் விடாமுயற்சி தீபாவளிக்கு வெளியாகும் என தகவல்கள் வெளியான நிலையில், அதுபற்றிய அபிஸியல் அப்டேட்டுக்காக ரசிகர்கள் காத்திருந்தனர். ஆனால், ஒரேயொரு போஸ்டரை மட்டும் வெளியிட்டு ரசிகர்களை ஏமாற்றியுள்ளது விடாமுயற்சி படக்குழு. அதேநேரம் இன்று மாலை விஜய்யின் கோட் படத்தில் இருந்து மூன்றாவது பாடல் வெளியாகிறது. அதற்குப் போட்டியாக தான் இந்த ஸ்பெஷல் போஸ்டர் வெளியாகியுள்ளதா என்றும் கேள்வி எழுந்துள்ளது.

மேலும் படிக்க - மகாராஜா இயக்குநர் நித்திலனுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ரஜினி

விஜய்யும் அஜித்தும் ரியல் லைஃபில் நண்பர்களாக இருந்தாலும், சினிமாவில் இப்போதும் எதிரும் புதிருமாகவே வலம் வருகின்றனர். விஜய்யின் படங்கள் பற்றிய அப்டேட் எப்போதெல்லாம் சமூக வலைத்தளங்களில் வைரலாகிறதோ, அப்போதெல்லாம் எதார்ச்சையாக அஜித்தின் போட்டோ அல்லது வீடியோவும் ட்ரெண்டாகி வருவது குறிப்பிடத்தக்கது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow