Rahu Ketu Peyarchi Palan 2024 : ராகு கேது பெயர்ச்சி பலன்.. கோடீஸ்வர யோகம் தரும் ராகு.. விபரீத ராஜயோகம் யாருக்கு?

Rahu Ketu Peyarchi Palan 2024 Predictions in Tamil : குருவின் வீடான மீன ராசியில் ராகு பயணம் செய்கிறார். கேது பகவான் புதன் வீட்டில் அமர்ந்துள்ளார். ஆட்சி பெற்ற குரு போலவும் ஆட்சி பெற்ற புதன் போலவும் பயணம் செய்யும் ராகு கேதுவினால் விபரீத ராஜயோகம் யாருக்கு கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

Aug 24, 2024 - 17:33
Aug 24, 2024 - 17:43
 0
Rahu Ketu Peyarchi Palan 2024 : ராகு கேது பெயர்ச்சி பலன்.. கோடீஸ்வர யோகம் தரும் ராகு.. விபரீத ராஜயோகம் யாருக்கு?
rahu ketu peyarchi palan 2024 tamil rahu travels

Rahu Ketu Peyarchi Palan 2024 Predictions in Tamil : மீன ராசியில் பயணம் செய்யும் ராகு குரு பகவானைப் போலவும் கன்னி ராசியில் பயணம் செய்யும் கேது பகவான் புதன் பகவானைப் போலவும் செயல்படுகின்றனர். பண வரவையும் கொடுத்து செலவு செய்ய வைப்பார் ராகு. மன சஞ்சலம் கொடுத்து கஷ்டப்படுத்துவார் கேது. ஆட்சி பெற்ற கிரகங்கள் போல பயணம் செய்யும் ராகு கேதுவினால் மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம்,சிம்மம், கன்னி ராசிகளில் பிறந்தவர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடி வருமா? என்று பார்க்கலாம். 

மேஷம்:

விரைய ஸ்தானத்தில் ராகுவும் ருண ரோக சத்ரு ஸ்தானத்தில் கேதுவும் பயணம் செய்கிறார்.  உடல் நல பாதிப்பினால் மருத்துவ செலவுகள் அதிகரித்து வந்தது.மனதில் இருந்த எதிர்மறை எண்ணங்கள் விலகும். மன உளைச்சல் நீங்கும். உங்களுக்கு இருந்த கெட்ட பெயர் நீங்கும். தொழிலில் கொடுத்த கடன்கள் வசூலாகும். பிரிந்திருந்த கணவன் மனைவி ஓன்று சேருவர். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். புது வீடு, வாகனம் வாங்கும் யோகம் தேடி வரும். வீட்டில் சந்தோஷமும் மன மகிழ்ச்சியும் அதிகரிக்கும். உங்கள் தொழில் வியாபாரத்தில் பணத்தை யோசித்து முதலீடு செய்யுங்கள். 

ரிஷபம்:

லாப ஸ்தானதில் பயணம் செய்யும் ராகுபகவான் பண வரவை அதிகரிப்பார். மனதில் தைரியத்தையும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும்.  குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் உருவாகும்.  கணவன் மனைவிக்குள் மகிழ்ச்சியும் நிம்மதியும் அதிகரிக்கும். பிள்ளைகளால் வீட்டில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பெண்களுக்கு  பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். 

மிதுனம்:

பத்தாம் வீடான தொழில் ஸ்தானத்தில் பயணம் செய்யும் ராகு பதவி தருவார். வேலை தேடுபவர்களுக்கு அவரவர் தகுதிக்கேற்ற வேலை கிடைக்கும். பண வரவு அதிகரிக்கும். ஒரு சிலருக்கு அரசியல் தொடர்புகள் ஏற்படும்.  தம்பதியருக்குள் இணக்கம் அதிகரிக்கும். உங்கள் வாழ்க்கை தரமே மாற போகிறது. தொழில் செய்பவர்கள் தங்கள் இலக்கை அடைய கடுமையாக உழைக்க வேண்டி வரும். சமூகத்தில் உங்களின் அந்தஸ்து உயரும். வேலையில் சிலருக்கு இடமாற்றம் ஏற்படும். 

கடகம்:

பாக்ய ஸ்தானத்தில் பயணம் செய்யும் ராகு பண வருமானத்தை அதிகரிப்பார். பல வழிகளில் இருந்தும் பண மழை கொட்டும்.பொருளாதார தடைகளை  நீக்குவார். கணவன் மனைவி உறவுக்குள் மகிழ்ச்சி அதிகரிக்கும்.இழந்த செல்வங்களை திரும்ப பெறுவீர்கள். பூர்வீக சொத்துக்கள் உங்களை தேடி வரும்.  வேலையில் பதவி உயர்வு கிடைக்கும். உறவினர்கள் மத்தியில் பெரும் மதிப்பு அதிகரிக்கும்.

சிம்மம்:

சூரியனை ராசி அதிபதியாகக் கொண்ட சிம்ம ராசிக்காரர்களுக்கு ராகுவின் பயணம் கோடீஸ்வர யோகத்தை தரப்போகிறது. உங்களுடைய வீட்டில் திருமணம் சுபகாரியம் நடக்கும். கோர்ட் வம்பு வழக்கு சாதகமாகும். இடமாற்றம்,ஊர்மாற்றம் நேரலாம். சொல்லும் செயலும் வெற்றி பெறும். விபரீத ராஜயோகத்தால் எதிர்ப்பாராத பணம் பொன் பொருள் சேர்க்கை ஏற்படும்.

கன்னி:

புதன் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட கன்னி ராசிக்காரர்களுக்கு  பதவியில் முன்னேற்றம் வரும். வருமானம் திருப்தி தரும்.   ராகு 7ஆம் வீடான களத்திர ஸ்தானத்தில் பயணம் செய்வதால் கஷ்டங்கள் நீங்கி இனி தலை நிமிரலாம். ராகுவின் பயணம் மற்றும் பார்வையால் கணவன் மனைவி இடையே இருந்த பிரச்சினைகள் நீங்கி ஓன்று சேரலாம். உங்கள் ராசியில் கேது பயணம் செய்வதால் வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும்.மன நிம்மதியும் மகிழ்ச்சியும் அதிகரிக்கும்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow