புரட்டாசி மாத ராசி பலன் 2024: வீடு தேடி வரும் அதிர்ஷ்ட தேவதை.. மாளவியா யோகம் யாருக்கு?

புரட்டாசி மாதத்தில் சூரியன் கன்னி ராசியில் கேது உடன் பயணம் செய்யப்போகிறார். நவ கிரகங்களின் சஞ்சாரத்தினால் சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம் ராசிகளில் பிறந்தவர்களுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

Sep 9, 2024 - 11:03
 0
புரட்டாசி மாத ராசி பலன் 2024:  வீடு தேடி வரும் அதிர்ஷ்ட தேவதை.. மாளவியா யோகம் யாருக்கு?
puratasi matha rasi palan 2024

சென்னை: புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதம். இந்த மாதம் புண்ணியம் நிறைந்த மாதம் இந்த மாதத்தில் சூரியன் ஆறாவது வீடான கன்னி ராசியில் கேது உடன் பயணம் செய்வார். கூடவே புதனும் இணையப்போகிறார். இந்த மாதம் முழுக்க விரத நாட்கள்தான். முன்னோர்களை வணங்கும் மாதம். அம்மனுக்காக நவராத்திரி பண்டிகை கொண்டாடும் மாதம். சிம்மம் முதல் விருச்சிகம் வரை 4 ராசிக்காரர்களுக்கும் புரட்டாசி மாதம் எப்படி உள்ளது என்னென்ன பலன்கள் கிடைக்கும் பரிகாரம் என்ன செய்யலாம் என்று பார்க்கலாம்.

சிம்மம் 

சூரியனை ராசி அதிபதியாகக் கொண்ட சிம்ம ராசிக்காரர்களே, இந்த மாதம் உங்களுடைய ராசி நாதன் குடும்ப ஸ்தானத்தில் ஆட்சி உச்சம் பெற்ற புதனுடன் இணைந்து பயணம் செய்வதால் நிறைய தன லாபம் கிடைக்கும். புகழ் செல்வம் செல்வாக்கு தேடி வரப்போகிறது. குடும்பத்தில் மகிழ்ச்சியும் ஒற்றுமையும் அதிகரிக்கும். உங்க பேச்சிற்கு மதிப்பு கூடும் என்றாலும் ஒவ்வொரு சொல்லையும் யோசித்து பேசுவது நல்லது. கணவன் மனைவி இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். அப்பாவின் மூலம் நன்மைகள் அதிகரிக்கும். அப்பா வழி சொத்துக்கள் கிடைக்கும். அரசு வேலை செய்பவர்களுக்கு பதவி உயர்வும் இடமாற்றமும் ஏற்படும். அரசு வேலைக்காக தேர்வு எழுதியவர்களுக்கு நல்ல செய்திகள் தேடி வரும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். வருமானம் கூடும் வங்கி சேமிப்பு உயரும். உடன் பிறந்தவர்களின் உதவி கிடைக்கும். அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருப்பது அவசியம்.

கன்னி

புதன் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட கன்னி ராசியில் பிறந்த ராசிக்காரர்களுக்கு இந்த புரட்டாசி மாதம் உங்களுக்கு அற்புதங்கள் நிகழப்போகிறது காரணம் உங்க ராசிநாதன் புதன் உங்க ராசியில் ஆட்சி பெற்று சூரியனோடு இணைந்திருக்கிறார். வேலை செய்பவர்களுக்கு பணி நிரந்தரம் ஏற்படும். புரமோசன் சம்பள உயர்வு கிடைக்கும். அரசு துறையில் வேலை செய்பவர்களுக்கு இடமாற்றமும்  பதவி உயர்வும் கிடைக்கும். உங்களின் சுறுசுறுப்பும் உற்சாகமும் அதிகரிக்கும். குடும்பத்தில் ஒற்றுமை மேலோங்கும். கல்வித்துறையில் வேலை செய்பவர்களுக்கு நன்மைகள் அதிகரிக்கும். மாணவர்களுக்கு முன்னேற்றம் கிடைக்கும். பெண்களுக்கு நகை ஆடை ஆபரண சேர்க்கை ஏற்படும். சனிக்கிழமை விரதம் இருந்து பெருமாள் கோவிலுக்கு சென்று துளசி மாலை கொடுத்து வணங்கலாம் நன்மைகள் நடைபெறும். 

துலாம் 

புரட்டாசி மாதம் துலாம் ராசிக்காரர்களுக்கு அற்புதமான மாதம். ராசி நாதன் சுக்கிரன் உங்கள் ராசியில் ஆட்சி பெற்று பயணம் செய்வது சிறப்பு. மாளவியா யோகம் கைகூடி வரப்போகிறது. சூரியனும் புதனும் விரைய ஸ்தானத்தில் இருக்கிறார். ஆட்சி உச்சம் பெற்ற புதனால் விபரீத ராஜயோகம் கைகூடி வரப்போகிறது.  வேலை தொழிலில் புதிய மாற்றங்கள் ஏற்படும். அலுவலகத்தில் உயரதிகாரிகள் சொல்வதை கேட்டு நடந்து கொண்டால் நன்மைகள் நடைபெறும். வருமானம் இருமடங்காகும். எந்த அளவிற்கு பணவருமானம் வருகிறதோ அதே போல சுப செலவுகளும் வரும். வீட்டில் மகிழ்ச்சிகரமான சம்பவங்கள் நிறைய நடைபெறும். பணத்தை சுப காரியத்திற்காக அதிகம் செலவு செய்யுங்கள். இல்லத்தரசிகளுக்கு நகை, ஆடை ஆபரண சேர்க்கை ஏற்படும். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு பதவியில் உயர்வு கிடைக்கும். சுய தொழில் செய்பவர்களுக்கு லாபம் அதிகரிக்கும். 

விருச்சிகம்

செவ்வாயை ராசி அதிபதியாகக் கொண்ட விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு புரட்டாசி மாதம் புரட்சிகரமான மாற்றங்கள் ஏற்படும். லாப ஸ்தானத்தில் சூரியன், புதன் சஞ்சரிப்பதால் உங்களுக்கு ராஜ யோகம் கைகூடி வரப்போகிறது. புகழ், செல்வம், செல்வாக்கு கூடும். வேலையில் உற்சாகம் அதிகரிக்கும். தொழிலில் லாபம் கூடும். அரசு வேலைக்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். அப்பா வழி சொத்துக்கள் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களால் லாபம் அதிகரிக்கும். மருத்துவ செலவுகள் குறையும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும்.  சுப நிகழ்ச்சிகள் அதிகம் நடைபெறும். பொன் பொருள் சேர்க்கை ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் குதூகலமும் அதிகரிக்கும். புரட்டாசி மாதத்தில் புதுவித யோகம் தேடி வரப்போகிறது. விபரீத ராஜயோகம் கைகூடி வரப்போகிறது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow