Today Rasi Palan : இன்றைய ராசிபலன் ஆகஸ்ட் 17 - சனி பகவான் அருளால் யாருக்கு சங்கடம் தீரும்?

Today Rasi Palan Predictions in Tamil: சனி பகவானின் அருள் நிறைந்த சனிக்கிழமையான இன்றைய தினம் சந்திரன் தனுசு ராசியில் பயணம் செய்கிறார். சந்திரன் பயணத்தாலும் பார்வையாலும் எந்த ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டம் யாரெல்லாம் கவனமாக இருக்க வேண்டும் என்று பார்க்கலாம்.

Aug 17, 2024 - 07:26
Aug 17, 2024 - 10:04
 0
Today Rasi Palan : இன்றைய ராசிபலன் ஆகஸ்ட் 17 - சனி பகவான் அருளால் யாருக்கு சங்கடம் தீரும்?
today rasi palan 2024

Today Rasi Palan Predictions in Tamil : நிகழும் மங்களகரமான குரோதி வருடம் ஆவணி மாதம் 01ஆம் நாள் ஆகஸ்ட் 17ஆம் தேதி சனிக்கிழமை துவாதசி திதி காலை  08.06 மணி வரை அதன் பின் திரயோதசி. பூராடம்  நட்சத்திரம் பிற்பகல் 02.30 மணி வரை அதன் பின் உத்திராடம் நட்சத்திரம். சந்திரன் பயணத்தால் மேஷம் மீனம் வரை 12 ராசிகளில் பிறந்தவர்களுக்கு என்ன பலன்(Rasi Palan) கிடைக்கும் என்று பார்க்கலாம். ஆவணி முதல் நாளான இன்றைய தினம் விஷ்ணுபதி புண்ணியகாலம்.  சனிப்பிரதோஷமான இன்றைய தினம் எந்த ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டம்?கவனமாக இருக்க வேண்டியது யார் என்று பார்க்கலாம். 

மேஷம் ராசிபலன் :

மேஷ ராசிக்காரர்களுக்கு(Mesham Rasi Palan) இன்றைய தினம் உங்கள் ராசிக்கு ஒன்பதாம் வீட்டில் சந்திரன் சஞ்சரிக்கிறார். குடும்பம் குதூகலமாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடன் இன்று நிகழும் ஒரு சம்பவம் என்றைக்கும் மறக்கமுடியாத நினைவுகளாக அமைந்து விடும்.  திருமணம் சம்பந்தமான சுபமுயற்சிகளில் அனுகூலமான முடிவுகள் கிடைக்கும். உத்தியோகம் தொடர்பாக சிலருக்கு வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்புகள் அமையும். தந்தைவழி உறவுகளினால் அலைச்சல்கள் ஏற்படும். வாகனப் பயணங்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். 

ரிஷபம் ராசிபலன் :

ரிஷப ராசிக்காரர்களே.(Rishabam Rasi Palan) இன்றைய தினம் உங்கள் ராசிக்கு எட்டாம் வீட்டில் சந்திரன் அமர்ந்து உள்ளார். இன்றைய தினம் சந்திராஷ்டமம் நீடிப்பதால் கவனமாக இருக்கவும். தேவையற்ற விசயங்களில் தலையிட வேண்டாம். மன அமைதிக்காக ஆலய தரிசனம் செய்யலாம். குடும்ப பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான புதிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள். சிந்தனைகள் மேம்படும். பணியில் அலைச்சல்கள் அதிகரிக்கும். திட்டமிட்ட முயற்சிகளில் பல பிரச்சினைகள் வரும் கவனம் தேவை. 

மிதுனம் ராசிபலன் :

ராசிக்கு(Mthunam Rasi Palan) ஏழாம் வீட்டில் சந்திரன் அமர்ந்து உள்ளார்.  காதல் நினைவுகள் உங்களுக்கு உற்சாகமூட்டும். கணவன் மனைவி இடையே சின்னச் சின்ன பிரச்சினைகள் வரலாம் விட்டுக்கொடுத்து போவது நல்லது. உங்களின் உடல்நிலையும், பொருளாதார சூழ்நிலையும் சுமாராகவே இருக்கும். உங்கள் நலனிலும் பிள்ளைகளின் ஆரோக்கியத்திலும் அக்கறை காட்டவும். வீட்டில் அமைதியும், மகிழ்ச்சியும் பெருகும். ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிப்பை அதிகப்படுத்தவும்.

கடகம் ராசிபலன் :

ராசிக்கு(Kadagam Rasi Palan) ஆறாம் வீடான ருண ரோக சத்ரு ஸ்தானத்தில் சந்திரன் சஞ்சரிக்கிறார். கடன் பிரச்சினைகள் தீரும். நோய்கள் வெளிப்படும் மருத்துவ செலவுகள் செய்வீர்கள். வேலையில் பளு கூடினாலும் உற்சாகமாக செயல்படுவீர்கள். பொருளாதார சூழ்நிலை நன்றாக இருக்கும். தொழில் சார்ந்த முதலீடுகளில் நிதானமாக செயல்படுவது நல்லது.  சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் தொடர்பான செய்திகள் வரும்.

சிம்மம் ராசிபலன் :

ராசிக்கு(Simmam Rasi Palan) ஐந்தாம் வீடான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சந்திரன் அமர்ந்து உள்ளதால் உடல் நலமும் பொருளாதார நிலையும்  நன்றாக இருக்கும். மனதையும், உடலையும் உற்சாகப்படுத்த குடும்பத்தினருடன் உங்களின் இனிமையான நேரத்தை செலவிடுங்கள். உங்களின் நட்பு வட்டம் விரிவடையும். பொன் பொருட்சேர்க்கை அதிகரிக்கும். பயணங்களில் இருந்த இன்னல்கள் நீங்கும். குடும்பத்தில் உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். சாமர்த்தியமான பேச்சால் அனைவராலும் பாராட்டப்படுவீர்கள். 

கன்னி ராசிபலன் :

உங்களுடைய ராசிக்கு(Kanni Rasi Palan) நான்காம் வீடான சுக ஸ்தானத்தில் சந்திரன் சஞ்சரிக்கிறார் இன்றைக்கு பொருளாதார நிலை சுமாராக இருக்கும் வர வேண்டிய பணம் கிடைக்க காலதாமதமாகும். திட்டமிட்ட காரியங்கள் அனுகூலமான பலனை தரும். உங்களின் புதுவிதமான முயற்சிகளால் மதிப்பும், மரியாதையும் கிடைக்கப் பெறுவீர்கள். வீண் பயத்தை தவிர்ப்பது நல்லது. சிக்கலான சில விஷயங்களை சாதுர்யமாக பேசி முடித்து விடுவீர்கள். அம்மாவின் உடல் நலனில்  அக்கறை காட்டுங்கள்.  காதல் வாழ்க்கை உங்களுக்கு வெற்றியைத் தரும். மண வாழ்க்கை மகிழ்ச்சியை ஏற்படுத்தும். 

துலாம் ராசிபலன் :

ராசிக்கு(Thulam Rasi Palan) முன்றாம் இடமான முயற்சி ஸ்தானத்தில் சந்திரன் சஞ்சரிக்கிறார். உங்களின் சொல்வாக்கும், செல்வாக்கும் அதிகரிக்கும். உங்களின் மன வாழ்க்கையில் மகிழ்ச்சிகரமான நாளாக அமையும். இன்றைய மாலைப்பொழுதை உங்களின் வாழ்க்கைத்துணையுடன் இனிமையானதாக மாற்றுங்கள். தைரியத்துடன் புதிய காரியங்களை செய்வீர்கள். பணிபுரியும் இடங்களில் புத்துணர்ச்சியுடன் செயல்படுவீர்கள்.  வீண் செலவை குறைத்து சேமிப்பை அதிகரிப்பீர்கள். எண்ணிய செயலில் காரிய வெற்றி கிடைக்கும். எந்தவொரு செயலையும் செய்யும் முன்பு சிந்தித்துச் செயல்படவும். கொடுக்கல், வாங்கலில் கவனம் வேண்டும். சொத்து சார்ந்த செயல்களில் நிதானம் தேவை.

விருச்சிகம் ராசிபலன் :

ராசிக்கு(Viruchigam Rasi Palan) இரண்டாம் வீடான குடும்ப தன ஸ்தானத்தில் சந்திரன் சஞ்சரிக்கிறார். உங்களுடைய பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். பணம் கொடுக்கல், வாங்கலில் கவனம் வேண்டும். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல் உணர்வு உண்டாகும்.  சொத்து சார்ந்த செயல்களில் நிதானம் தேவை. பிறருக்கு உதவுவதில் ஆர்வம் அதிகரிக்கும். மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு உண்டாகும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். இன்றைக்கு சந்தோஷமான நாளாக அமையும். 

தனுசு ராசிபலன் :

உங்கள் ராசிக்குள்(Dhanushu Rasi Palan) சந்திரன் சஞ்சரிப்பதால் இன்றைக்கு செல்வாக்கு அதிகரிக்கும். மனதில் சஞ்சலம் இருந்தாலும் அலுவலகத்தில் உற்சாகமாக வேலை செய்வீர்கள். குடும்பமும் மணவாழ்க்கையும் இன்றைக்கு சீராக இருக்கும்.  புதிய வாய்ப்புகள் கிடைக்கும். எதிர்பாராத பயணங்கள் உண்டாகும். மனைவியின் ஆசைகளை நிறைவேற்றுவீர்கள். நண்பர்களின் மூலம் பொருளாதாரம் மேன்மை அடையும். உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி கிடைக்கும்.  தொழில் சம்பந்தமான போட்டிகள் அதிகரிக்கும். செய்யும் வேலைகளில் கவனத்துடன் ஈடுபடவும். பேச்சில் கவனம் தேவை. அலைச்சல் அதிகரிக்கும். 
 
மகரம் ராசிபலன் :

ராசிக்கு(Magaram Rasi Palan) 12ஆம் வீடான விரைய ஸ்தானத்தில் சந்திரன் சஞ்சரிப்பதால் இன்றைக்கு பணவரவு அதிகமாக இருந்தாலும் சுப விரைய செலவுகள் ஏற்படும். இன்றைக்கு இன்பகரமான நாளாக அமையும். பிள்ளைகளின் செயல்பாடுகளில் கவனம் தேவை. குடும்பத்தினருடன் வெளியூர் பயணங்கள் செல்வீர்கள். பொருளாதார நிலை நன்றாக இருக்கும். திடீர் விரைய செலவுகள் வரும். தொழில் தொடர்பான செயல்களில் சாதகமான பலன்கள் கிடைக்கும். வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள்.

கும்பம் ராசிபலன் :

ராசிக்கு(Kumbam Rasi Palan) லாப ஸ்தானமான 11ஆம் வீட்டில் லாப ஸ்தானத்தில் சந்திரன் சஞ்சரிக்கிறார். பணவரவு தாராளமாக இருக்கும். மூத்த சகோதரர்களின் உதவி கிடைக்கும்.  உடல் நலமும், பொருளாதார நலமும் சுமாராகவே இருக்கும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். நினைத்த காரியங்களில் இருந்த மறைமுக எதிர்ப்புகளை முறியடிப்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் குறையும். புதிய சொத்துக்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும்.

மேலும் படிக்க : தீர்க்க சுமங்கலி பாக்கியம், குழந்தை பாக்கியம் வழங்கும் வரலட்சுமி விரதம்!

மீனம் ராசிபலன் :

ராசிக்கு(Meenam Rasi Palan) பத்தாம் வீட்டில் தொழில் ஸ்தானத்தில் சந்திரன் சஞ்சரிக்கிறார். நெருங்கிய நண்பர்களிடம்  இருந்த மனக்கசப்புகள் நீங்கும். வேலை செய்யும் இடத்தில் உயரதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். காதல் துணையுடன் சிறு ஊடல் ஏற்படும், பேச்சில் கவனம் தேவை. முக்கியமான செயல்களில் நிதானமாக செயல்படுவது நல்லது. உழைப்பிற்கேற்ற பலன் கிடைப்பதில் காலதாமதமாகும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் தேவையற்ற வாக்குவாதங்களால் கருத்து வேறுபாடுகள் தோன்றலாம். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் தோன்றி மறையும். திடீர் மருத்துவ செலவுகள் வரலாம் கவனம் தேவை. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow