Varalakshmi Viratham 2024 : தீர்க்க சுமங்கலி பாக்கியம், குழந்தை பாக்கியம் வழங்கும் வரலட்சுமி விரதம்!

Varalakshmi Viratham 2024 : இன்று (ஆகஸ்ட் 16) வரலட்சுமி விரதத்தை முன்னிட்டு பெண்கள் பூஜை செய்தால் வீடுகளில் ஐஸ்வர்யமும் மாங்கல்ய பலமும் கூடும் என சாஸ்திரங்கள் கூறுகின்றன.

Aug 16, 2024 - 12:44
Aug 16, 2024 - 12:58
 0
Varalakshmi Viratham 2024 : தீர்க்க சுமங்கலி பாக்கியம், குழந்தை பாக்கியம் வழங்கும் வரலட்சுமி விரதம்!
வரலட்சுமி விரதம் 2024

Varalakshmi Viratham 2024 : வரலட்சுமி விரதம் அன்று மகாலட்சிமியை வரவேற்று பூஜை செய்வதன் மூலம் வீடுகளில் ஐஸ்வர்யமும் மாங்கல்ய பலமும் கூடும் என்பது ஐதீகம். அந்த வகையில் இன்று (ஆகஸ்ட் 16) வரலட்சுமி விரதம் அனுசரிக்கப்படுகிறது. இன்று இல்லம் தேடி வரும் மகாலட்சுமியை வரவேற்று மனம் குளிரும் வகையில் பூஜை செய்யவேண்டும் என சாஸ்திரங்கள் கூறுகின்றன. வரலட்சுமி விரதம் இருப்பவர்கள் கலசம் வைத்து அதில் வரலட்சுமியை ஆவாகனம் செய்து, அன்னைக்கு பிடித்தமான நைவேத்யங்களை படைத்து பூஜை செய்வது சிறப்பு.

வரலட்சுமி விரத பூஜை(Varalakshmi Viratham Poojai) செய்யும் போது, சுமங்கலிப் பெண்கள் நோன்பு சரடை வைத்து பூஜை செய்து, பூஜை முடிந்ததும் அந்த சரடை தங்கள் கணவன் கையால் கட்டிக்கொள்ள வேண்டும். இப்படிச் செய்வதால் அவர்களுக்கு தீர்க்க சுமங்கலி பாக்கியம் கிட்டும் என்பது நம்பிக்கை. திருமணம் ஆகாத பெண்கள், தங்களுக்கு நல்ல கணவர், இல்வாழ்க்கை அமைய வேண்டி வரலட்சுமியை வழிபட்டால் மனதுக்கு பிடித்த வாழ்க்கை நிச்சயம் அமையும் எனக் கூறப்படுகிறது. 

சாஸ்திர முறைப்படி விரதமிருந்து பூஜை செய்ய விரும்பினால், விக்னேஸ்வர பூஜை தொடங்கி, சங்கல்பம், கலச பூஜை, பிராணப்ரதிஷ்டை, தியானம், அங்க பூஜை, லட்சுமி அஷ்டோத்திரம், தோரக்ரந்தி பூஜை, பிரார்த்தனை, ஆரத்தி உள்ளிட்ட பூஜைகளை அன்னையை மனதார வேண்டி செய்ய வேண்டும். 

செல்வம் என்றால் அது பணம் மட்டும் இல்லை. நமது வாழ்வுக்கு தேவையான தைரியம், ஞானம், குழந்தை, திருமணம், வேலை, கல்வி, மன நிறைவு, மன நிம்மதி, ஆரோக்கியம், குறைவில்லாத உணவு உள்ளிட்டவை பெற வேண்டும் என்றால் அதற்கு அன்னையின் அருள் வேண்டும். மகாலட்சுமியை தனலட்சுமி, தான்ய லட்சுமி, தைரிய லட்சுமி, ஜெயலட்சுமி, வீரலட்சுமி, சந்தான லட்சுமி, கஜலட்சுமி, வித்யாலட்சுமி என்ற அஷ்ட லட்சுமிகளாக வழிபடுகிறோம். இந்த 8 லட்சுமிகளையும் மனதார வேண்டி பூஜித்தால் மெற்கண்ட அனைத்து செல்வங்களும் உங்களது இல்லம் தேடி வரும்.

மேலும் படிக்க : வரலட்சுமி விரதம் புராண கதை

வரலட்சுமி விரத பூஜை செய்யும் போது, சுமங்கலிப் பெண்கள் நோன்பு சரடை வைத்து பூஜை செய்து, பூஜை முடிந்ததும் அந்த சரடை தங்கள் கணவன் கையால் கட்டிக்கொள்ள வேண்டும். இப்படிச் செய்வதால் அவர்களுக்கு தீர்க்க சுமங்கலி பாக்கியம் கிட்டும் என்பது நம்பிக்கை. திருமணம் ஆகாத பெண்கள், தங்களுக்கு நல்ல கணவர், இல்வாழ்க்கை அமைய வேண்டி வரலட்சுமியை வழிபட்டால் மனதுக்கு பிடித்த வாழ்க்கை நிச்சயம் அமையும் எனக் கூறப்படுகிறது. 

சாஸ்திர முறைப்படி விரதமிருந்து பூஜை செய்ய விரும்பினால், விக்னேஸ்வர பூஜை தொடங்கி, சங்கல்பம், கலச பூஜை, பிராணப்ரதிஷ்டை, தியானம், அங்க பூஜை, லட்சுமி அஷ்டோத்திரம், தோரக்ரந்தி பூஜை, பிரார்த்தனை, ஆரத்தி உள்ளிட்ட பூஜைகளை அன்னையை மனதார வேண்டி செய்ய வேண்டும். மகாலட்சுமியை தனலட்சுமி, தான்ய லட்சுமி, தைரிய லட்சுமி, ஜெயலட்சுமி, வீரலட்சுமி, சந்தான லட்சுமி, கஜலட்சுமி, வித்யாலட்சுமி என்ற அஷ்ட லட்சுமிகளாக வழிபடுகிறோம். வரலட்சுமி விரதம் அன்று இந்த எட்டு லட்சுமிகளையும் மனதார வேண்டி பூஜித்தால் மேற்கண்ட அனைத்து செல்வமும் உங்களது வாழ்வில் கிட்டும்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow