Devi Sri Prasad Net Worth : டோலிவுட் ராக் ஸ்டார்… இளையராஜா சிஷ்யன்… தேவிஸ்ரீ பிரசாத்தின் சொத்து மதிப்பு
Music Director Rockstar Devi Sri Prasad Net Worth : டோலிவுட் ராக்ஸ்டார் தேவி ஸ்ரீ பிரசாத் இன்று தனது 44வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனையடுத்து பிரபலங்கள் பலரும் அவருக்கு வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், அவரது சம்பளம், சொத்து மதிப்பு பற்றிய விவரங்கள் வெளியாகியுள்ளன.
Music Director Rockstar Devi Sri Prasad Net Worth : தெலுங்கு திரையுலகில் ராக்ஸ்டாராக வலம் வருபவர் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத். பாட்ஷா பட ரஜினி ஸ்டைலில் இவருக்கு இன்னொரு பெயரும் உண்டு, அது DSP! தேவி ஸ்ரீ பிரசாத் என்ற பெயரை சுருக்கமாக DSP என அழைப்பதுண்டு. இவரது தந்தை சத்யமூர்த்தி தெலுங்கு சினிமாவில் பிரபல திரைக்கதை ஆசிரியர் என்பது. அதனால் இளம் வயதிலேயே சினிமா பிரபலங்களின் அறிமுகம் கிடைக்க, இசையில் ஆர்வம் கொண்ட தேவி ஸ்ரீ பிரசாத்துக்கு இசையமைப்பாளராகும் வாய்ப்பு கிடைத்தது.
அதன்படி 1999ம் ஆண்டு ‘தேவி’ என்ற படத்திற்கு இசையமைத்ததன் மூலம், கந்தம் ஸ்ரீபிரசாத் என்ற இயற்பெயரில் இருந்து தேவி ஸ்ரீ பிரசாத்தாக(Devi Sri Prasad) மாறினார். அப்போது முதல் தேவி ஸ்ரீ பிரசாத் என்ற பெயரில் இசையமைத்து வரும் DSP, கோலிவுட்டிலும் மாஸ் காட்டி வருகிறார். ஆறு, மாயாவி, கந்தசாமி, குட்டி, மழை, சச்சின், திருப்பாச்சி, புலி, வில்லு, சந்தோஷ் சுப்ரமணியம், சாமி 2, சிங்கம், வீரம், மன்மதன் அம்பு உள்ளிட்ட மேலும் சில தமிழ்ப் படங்களுக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.
அதன்பின்னர் டோலிவுட் பக்கமே பிஸியாகிவிட்ட தேவி ஸ்ரீ பிரசாத் (Devi Sri Prasad), தற்போது அஜித்தின் குட் பேட் அக்லி, சூர்யாவின் கங்குவா, தனுஷின் குபேரா படங்களுக்கு மியூசிக் கம்போஸ் செய்து வருவது குறிப்பிடத்தக்கது. தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் வெளியான அல்லு அர்ஜுனின் புஷ்பா பட பாடல்கள் பான் இந்தியா அளவில் சூப்பர் ஹிட் அடித்தன. அதற்காக அவர் முதல் தேசிய விருது வென்றதும் குறிப்பிடத்தக்கது. அதேபோல், இளையராஜாவின் வெறித்தனமான ரசிகனான தேவி ஸ்ரீ பிரசாத் (Devi Sri Prasad), இசைஞானியின் இசை நிகழ்ச்சிகள் எங்கு நடந்தாலும், அதில் முதல் ஆளாக கலந்துகொள்வார்.
அதைவிட முக்கியமாக ஒரு நிகழ்ச்சி ஒன்றில் தேவி ஸ்ரீ பிரசாத்(Devi Sri Prasad) தான் அடுத்த இளையராஜா என கமல்ஹாசன் சொன்னது, இசைஞானி ரசிகர்களை தூக்கிவாரிப் போட்டது. அந்தளவுக்கு தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசை மீது விமர்சனங்களும். ஆனாலும், இளைஞர்களுக்கான உற்சாக டானிக்காக வலம் வரும் தேவி ஸ்ரீ பிரசாத், இதுவரை திருமணம் செய்துகொள்ளாமல் முரட்டு சிங்கிளாக வாழ்ந்து வருகிறார். நடிகை ஷர்மியுடன் காதல் என பல ஹீரோயின்களுடன் இவரைப் பற்றி கிசுகிசுக்கள் வந்துள்ளன. ஆனாலு, அதற்கெல்லாம் அசராதவர் இந்த DSP.
மேலும் படிக்க - இந்த வாரம் ஓடிடி ரிலீஸ் அப்டேட்
இந்நிலையில், தேவி ஸ்ரீ பிரசாத் ஒரு படத்திற்காக 4 முதல் 5 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்குவதாக சொல்லப்படுகிறது. இதன்மூலம் ஒரு ஆண்டுக்கு 20 கோடி ரூபாய் வரை வருமானம் ஈடுகிறாராம் டோலிவுட் ராக்ஸ்டார்(Tollywood Rockstar). அதேபோல் ஐதராபாத், விசாகப்பட்டினம், சென்னை, பெங்களூரு ஆகிய இடங்களில் சொகுசு வீடுகளும், பிளாட்களும் வாங்கிப் போட்டுள்ளார். கார்களின் மீதும் அதிகம் ஆர்வமுள்ள தேவிஸ்ரீ பிரசாத், Range Rover, BMW M5, Benz GLE Class, Audi Q5, Thar Jeep என விதவிதமான கார்களை சொந்தமாக வைத்துள்ளார்.
Happy Birthday Devi Sri Prasad..!#Kumudamnews | #kumudam | #Kumudamnews24x7 | #DeviSriPrasad | #MusicLovers | #musicdirector | @ThisIsDSP | #Tollywood | #kollywoodcinema | #CelebrityNews | #celebritycrush | #TamilCinema |#HappyBirthdayDSP | #CinemaUpdate | #DSP | pic.twitter.com/ZaNt5W03bh — KumudamNews (@kumudamNews24x7) August 2, 2024
இதையெல்லாம் சேர்த்து தேவிஸ்ரீ பிரசாத்தின்(Devi Sri Prasad Net Worth) மொத்த சொத்து மதிப்பு 250 முதல் 300 கோடிகளுக்கும் மேல் இருக்கும் என டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுவரை 100 படங்களுக்கும் மேல் இசையமைத்துள்ள தேவி ஸ்ரீ பிரசாத்தின் புதிய ஸ்டுடியோவிற்கு, சமீபத்தில் இளையராஜா சென்றிருந்த்து குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?