August 2 OTT Release Movies List : தமிழில் இந்த வாரம் (ஆகஸ்ட் 2) ரயில் திரைப்படம் ஓடிடியில் வெளியாகிறது. எழுத்தாளர் பாஸ்கர் சக்தி இயக்கத்தில் வடக்கன் என உருவான இத்திரைப்படம், பின்னர் ரயில் என்ற பெயரில் ரிலீஸனாது. ஜூன் 21ம் தேதி திரையரங்குகளில் வெளியான ரயில் படத்துக்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தன. இத்திரைப்படம் வடமாநிலத் தொழிலாளர்கள் வேலைக்காக அதிகளவில் தமிழ்நாட்டை நோக்கி வருவதால் ஏற்படும் சிக்கல்களையும் தீர்வையும் பற்றி பேசுகிறது. இந்நிலையில், ரயில் திரைப்படம் ஆஹா தமிழ் ஓடிடியில் நாளை முதல் ஸ்ட்ரீமிங் ஆகிறது.
த்ரிஷா முதன்முறையாக நடித்துள்ள பிருந்தா வெப் சீரிஸும் இந்த வாரம் ஓடிடியில் வெளியாகிறது. 20 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் டாப் ஹீரோயினாக வலம் வருகிறார் த்ரிஷா. இதுவரை படங்களில் மட்டுமே நடித்து வந்த த்ரிஷா, இப்போது வெப் சீரிஸிலும் களமிறங்கியுள்ளார். அதன்படி, அவர் நடித்துள்ள பிருந்தா வெப் சீரிஸ், நாளை முதல் சோனி லிவ் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீமிங் ஆகிறது. த்ரிஷாவுடன் இந்திரஜித் சுகுமாரன், ஜெயபிரகாஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த வெப் சீரிஸை தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் மொழிகளில் பார்க்கலாம். த்ரிஷா போலீஸ் ஆபிஸராக நடித்து பிருந்த வெப் சீரிஸ், சைக்கோ த்ரில்லர் ஜானரில் உருவாகியுள்ளது.
மலையாளத்தில் நடன்ன சம்பவம் (Nadanna Sambhavam) என்ற திரைப்படம் சிம்பிளி சவுத் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. பிஜு மேனன், சுராஜ் வெஞ்சாரமூடு, லிஜோமோல் ஜோஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்தை விஷ்ணு நாராயண் இயக்கியுள்ளார். தெலுங்கில் ரக்ஷானா, தெப்ப சமுத்திரம் (Theppa Samudram) ஆகிய படங்கள் ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகின்றன. இந்த இரண்டு படங்களுமே இன்வஸ்டிகேஷன் திரில்லர் ஜானரில் உருவாகியுள்ளது. அதேபோல், மராத்தி மொழியில் உருவாகியுள்ள ஹோலி மஹாராஜா திரைப்படமும், இந்தியில் துஜ்பே மெயின் ஃபிடா - சீசன் 2 (Tujhpe Main Fida) வெப் சீரிஸும் அமேசான் தளத்தில் வெளியாகின்றன.
மேலும் படிக்க - இந்தியன் 2 ஓடிடி ரிலீஸ் அப்டேட்!
அதேபோல் ஹாலிவுட் ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ட்யூன் 2ம் பாகமும் இந்த வாரம் ஓடிடி ரிலீஸுக்கு ரெடியாகிவிட்டது. மார்ச் 1ம் தேதி திரையரங்குகளில் வெளியான இந்தப் படம் மிகப் பெரிய வெற்றிப் பெற்றது. இப்படத்தின் ஓடிடி ரிலீஸுக்காக ரசிகர்கள் வெயிட்டிங்கில் இருந்தனர். இந்நிலையில், Dune: Part Two ஜியோ சினிமா ஓடிடி தளத்தில் வெளியாகிறது. மேலும், ஹாலிவுட் ரசிகர்களின் இன்னொரு எதிர்பார்ப்பான Kingdom of the Planet of the Apes திரைப்படமும் நாளை டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகிறது.
நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில், மாடர்ன் மாஸ்டர் எஸ்.எஸ்.ராஜமௌலி (Modern Masters SS Rajamouli) என்ற டாக்குமெண்ட்ரி இந்த வாரம் வெளியாகிறது. இது டோலிவுட் இயக்குநர் ராஜமெளலியின் பயோபிக் ப்ளஸ் அவரது சினிமா பயணம் குறித்து உருவாகியுள்ளது. அதேபோல், Mountain Queen என்ற ஆங்கில டாக்குமெண்ட்ரியும் நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகிறது. இதுதவிர Tarot, Border Less Fog, Breaking And Entering ஆகிய படங்களும், The Influencer என்ற கொரியன் வெப் சீரிஸ், A Good Girl's Guide to Murder வெப் சீரிஸ்ஸும் இந்த வாரம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகின்றன.