Indian 2 OTT Release : இந்தியன் 2 ஓடிடி ரிலீஸ்... கண்டிஷன் போட்ட நெட்பிளிக்ஸ்... ஷாக்கான லைகா..?
Indian 2 Movie OTT Release Date : கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கிய இந்தியன் 2 திரைப்படம் ஜூலை 12ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்தியன் 2-க்கு ரசிகர்களிடம் எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்காத நிலையில், இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்து புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
Indian 2 Movie OTT Release Date : 1996ல் கமல் – ஷங்கர் கூட்டணியில் வெளியான இந்தியன் திரைப்படம் பிளாக் பஸ்டர் ஹிட் அடித்தது. லஞ்சம், ஊழலை ஒழிக்கும் இந்தியன் தாத்தா கேரக்டரில் கமல்ஹாசன் நடிப்பில் மிரட்டியிருந்தார். ஷங்கரின் மேக்கிங், ஏஆர் ரஹ்மானின் இசை, கமலின் வெரைட்டியான ஆக்டிங் என கோலிவுட்டின் கல்ட் கிளாஸிக் சினிமாவாக ஹிட்டானது இந்தியன். இப்படத்தின் கிளைமேக்ஸில் இந்தியன் தாத்தா வெளிநாடுக்கு தப்பிச் செல்வதைபோல் காட்டியிருந்தார் ஷங்கர். இதனால் இந்தியன் 2 திரைப்படம் எப்போது வரும் என ஆண்டுக்கணக்கில் ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர்.
இதனால், பெரும்பாடுபட்டு பல தடைகளை கடந்து இந்தியன் 2(Indian 2) படத்தை இயக்கினார் ஷங்கர். ஆனால், ஜூலை 12ம் தேதி படம் வெளியான பின்னர், தெரியாமல் இந்தியன் 2ம் பாகத்தை இயக்கிவிட்டோம் என புலம்பும் அளவிற்கு ஆகிவிட்டது ஷங்கரின் நிலைமை. இந்தியன் தாத்தாவுக்கு தற்போது எத்தனை வயது என்பதில் தொடங்கி, வர்ம கலையின் வரலாறு வரை ரசிகர்களின் பொறுமையை ரொம்பவே சோதித்தது இந்தியன் 2. இன்னொரு பக்கம் “தாத்தா வர்றாரு கதற விட போறாரு” என ராக் ஸ்டார் அனிருத்தும் அவர் பங்கிற்கு ரசிகர்களை அலற விட்டார்.
ஒட்டுமொத்தமாக இந்தியன் 2(Indian 2) இந்தாண்டின் பிரம்மாண்டமான டிசாஸ்டர் லிஸ்ட்டில் இணைந்தது. இப்போது வரை பாக்ஸ் ஆபிஸில் 100 கோடி ரூபாய் வசூலை கூட கடக்கவில்லை இந்தியன் 2. இதில் இந்தியன் 3ம் பாகம் அடுத்தாண்டு வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், இந்தியன் 2 படத்தின் ஓடிடி ரிலீஸில் புது சிக்கல் இருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியன் 2 படத்தின் ஓடிடி உரிமையை, தியேட்டர் ரிலீஸுக்கு முன்பே நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றிவிட்டது.
ஆனால், இந்தியன் 2 படத்திற்கு ரசிகர்களிடம் எதிர்பார்த்த வரவேற்பு இல்லாததோடு, பாக்ஸ் ஆபிஸிலும் சொல்லிக்கொள்ளும்படி வசூலிக்கவில்லை. இதனால் ஏற்கனவே பேசிய ஓடிடி உரிமை தொகையை பேரம் பேசி வருகிறதாம் நெட்பிளிக்ஸ். அதாவது இந்தியன் 2 ஓடிடி ரைட்ஸ், முதலில் 130 கோடி ரூபாய்க்கு விலை பேசப்பட்டுள்ளது. இப்போது இதில் பாதி விலைக்கு தான் இந்தியன் 2 ஓடிடி உரிமையை கேட்டுள்ளதாம் நெட்பிளிக்ஸ். ஏற்கனவே நஷ்டத்தில் இருக்கும் லைகாவுக்கு இது பெரும் சோதனையாக அமைந்துள்ளதாக சொல்லப்படுகிறது.
மேலும் படிக்க - வயநாடு பேரிடர்... நிவாரணம் வழங்கிய சூர்யா, ஜோதிகா, கார்த்தி
இதனால் நெட்பிளிக்ஸ் – லைகா இடையே மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேநேரம் நெட்பிளிக்ஸ் உடனான அக்ரிமெண்ட்டில் இருந்து வெளியேறினால், இந்தியன் 2 ஓடிடி உரிமை இன்னும் குறைந்த விலைக்கே விற்பனையாகும் என லைகா நிறுவனம் குழப்பத்தில் உள்ளதாம். இந்த பஞ்சாயத்துகள் எல்லாம் முடிவுக்கு வந்தால், இந்தியன் 2 திரைப்படம் அடுத்த வாரம், ஆகஸ்ட் 9ம் தேதி முதல் நெட்பிளிக்ஸில் வெளியாகும் என சொல்லப்படுகிறது.
What's Your Reaction?