Wayanad Landslide: வயநாடு பேரிடர்... நிவாரணம் வழங்கிய சூர்யா, ஜோதிகா, கார்த்தி... மொத்த தொகையே இவ்ளோ தானா..?

Actor Suriya Family gives Relief To Kerala Govt on Wayanad Landslide : கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் இதுவரை 250க்கும் மேற்பட்டோர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். இந்தியாவையே உலுக்கிய இந்த துயரச் சம்பவத்திற்கு நிவாரணமாக சூர்யா, ஜோதிகா, கார்த்தி மூவரும் கேரள அரசுக்கு நிதியுதவி வழங்கியுள்ளனர்.

Aug 1, 2024 - 15:22
Aug 2, 2024 - 10:20
 0
Wayanad Landslide: வயநாடு பேரிடர்... நிவாரணம் வழங்கிய சூர்யா, ஜோதிகா, கார்த்தி... மொத்த தொகையே இவ்ளோ தானா..?
Actor Suriya Family gives Relief To Kerala Govt on Wayanad Landslide

Actor Suriya Family gives Relief To Kerala Govt on Wayanad Landslide : கேரள மாநிலம் வயநாட்டில் பெய்த கனமழை காரணமாக கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. அதில் வயநாடு பகுதிக்குட்பட்ட மேப்பாடி, சூரல்மலை, முண்டகை, அட்டமலை பகுதிகள் மிக கொடூரமாக பாதிக்கப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தமாக ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நிலச்சரிவில் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. வயநாடு நிலச்சரிவில் இதுவரை 280 பேர் உயிரிழந்துள்ளனர், 592 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து மூன்றாவது நாளாக மீட்புப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், இந்தியா முழுவதிலும் இருந்து ஏராளமானோர் கேரளாவிற்கு நேசக்கரம் நீட்டியுள்ளனர்.       

மருத்துவம், உணவு, உடை என தங்களால் முடிந்த உதவிகளை வயநாடு பகுதி மக்களுக்கு அனுப்பி வைத்து வருகின்றனர். அதேபோல், தொழிலதிபர்கள், பிரபலங்கள் ஆகியோரும் நிதியுதவி வழங்கி வருகின்றனர். கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் சென்று ஆய்வு நடத்தியுள்ளார். அதேபோல், பாதிக்கப்பட்ட மக்களையும் அவர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் மக்கள் அனைவரும் தங்களால் இயன்ற உதவிகளை வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கிடுமாறு வேண்டுகோள் விடுத்திருந்தார்.    

மேலும் படிக்க - தாராள நிதி தர பினராயி விஜயன் வேண்டுகோள்

முன்னதாக தமிழ்நாடு அரசு சார்பில், கேரள முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு 5 கோடி ரூபாய் வழங்கப்பட்டது. அதேபோல் அதிமுக சார்பிலும் ஒரு கோடி ரூபாய் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே கோலிவுட்டில் இருந்து நடிகர் சீயான் விக்ரம் 20 லட்சம் ரூபாயை கேரள முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு வழங்கியிருந்தார். அவரைத் தொடர்ந்து சூர்யா, ஜோதிகா, கார்த்தி மூவரும் இணைந்து வயநாடு நிலச்சரிவுக்கு நிவாரணம் வழங்கியுள்ளனர். அதன்படி மொத்தமாக 50 லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

கோலிவுட்டில் சூர்யா, கார்த்தி இருவருமே முன்னணி ஹீரோக்களாக வலம் வருகின்றனர். ஜோதிகாவும் ஒருநேரத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான். ஏற்கனவே அகரம் பவுண்டேசன் மூலம் ஏழை மாணவர்களின் கல்விக்கு நிதியுதவி செய்து வருகின்றனர். அதேபோல், விவசாயிகளுக்கும் சூர்யா, கார்த்தி இருவருமே பல்வேறு உதவி செய்து வருகின்றனர். அதனால் வயநாடு பேரிடருக்கு இவர்கள் நிதி வழங்குவார்கள் என ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்ட ஒன்று தான். இதற்கு முன்னதாக சென்னை கனமழை, பெருவெள்ளம் போன்ற பல பேரிடர்களுக்கும் சூர்யா, கார்த்தி நியுதவி வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

அதேபோல், நடிகை ராஷ்மிகா மந்தனாவும் வயநாடு நிலச்சரிவுக்கு நிதியுதவி வழங்கியுள்ளார். அதன்படி அவர் கேரள முதலமைச்சர் நிவாரண நிதிக்கு 10 லட்சம் வழங்கியுள்ளார். கோலிவுட், டோலிவுட், பாலிவுட் என பான் இந்தியா நடிகையாக வலம் வருகிறார் ராஷ்மிகா மந்தனா. இவர்களைத் தொடர்ந்து இன்னும் பல திரை பிரபலங்கள் வயநாடு பேரிடருக்கு நிதியுதவி வழங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow