Tirumala Upcoming Events 2024 : பிரம்மோற்சவத்திற்கு தயாராகும் ஏழுமலையான் கோவில்.. பக்தர்களுக்கு திருப்பதி தேவஸ்தனம் குட்நியூஸ்

TTD J Syamala Rao About Upcoming Events 2024 in Tirumala : திருமலை திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களின் வசதிகளுக்காக பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. தரிசன டிக்கெட்டுகள் அதிகரிப்பு முதல் அன்னதானம் வழங்குவது வரை பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

Aug 3, 2024 - 14:28
Aug 3, 2024 - 15:03
 0
Tirumala Upcoming Events 2024 : பிரம்மோற்சவத்திற்கு தயாராகும் ஏழுமலையான் கோவில்.. பக்தர்களுக்கு  திருப்பதி தேவஸ்தனம் குட்நியூஸ்
Tirumala Upcoming Events 2024

TTD J Syamala Rao About Upcoming Events 2024 in Tirumala : திருமலை ஏழுமலையான் கோவிலில் அக்டோபர் மாதம் பிரம்மோற்சவ விழா நடைபெற உள்ளதாகவும் அதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருவதாகவும் திருப்பதி தேவஸ்தான செயல் அதிகாரி ஷியாமளா ராவ் கூறியுள்ளார். வாரத்திற்கு 1.05 லட்சம் வழங்கப்பட்டு வந்த SSD டோக்கன்கள், தற்போது பக்தர்கள் வரிசையில் காத்திருக்கும் நேரத்தை குறைக்கும் வகையில் 1.47 லட்சம் வழங்கப்படுவதாகவும் ஷியாமளா ராவ் கூறினார்.

திருமலை ஏழுமலையானை தரிசனம் செய்வதற்கு தினசரியும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். பல மணி நேரம் காத்திருக்கும் பக்தர்களுக்கு சில நிமிடங்கள் மட்டுமே தரிசனம் கிடைத்தாலும் பிறவிப்பயனை அடைகின்றனர் பக்தர்கள். இந்த ஆலயத்தில் ஆண்டு தோறும் நடைபெறும் பிரம்மோற்சவ விழா பிரசித்தி பெற்றது. 10 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் பங்கேற்க நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள்.

இந்த ஆண்டிற்கான பிரம்மோற்சவ விழா அக்டோபர் மாதம் நடைபெற உள்ளது. இதற்காக செய்யப்படும் ஏற்பாடுகள் குறித்து திருமலை அன்னமய்யா கட்டிடத்தில் நடைபெற்ற டயல் யுவர் EO நிகழ்ச்சி மூலம் திருப்பதி தேவஸ்தான செயல் அதிகாரி ஷியாமளா ராவ் பக்தர்களிடம் பேசினார். அப்போது பக்தர்களின் வசதிக்காக தேவஸ்தான நிர்வாகம் மேற்கொண்டுள்ள பல முக்கிய முடிவுகளை தெரிவித்தார். அதன்படி, இந்த ஆண்டு அக்டோபர் 4 ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை நடைபெறவுள்ள வருடாந்திர பிரம்மோற்சவத்திற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. பிரம்மோற்சவப் பணிகளை செப்டம்பர் மாத இறுதிக்குள் முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 

திருமலையில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு வழங்கப்படும் அன்ன பிரசாதத்தின் சுவையை அதிகரிக்க, சமையல் அறையில் உயர் ரக அரிசி மற்றும் நவீன இயந்திரங்கள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. திருமலையில் குடிநீர், உணவு மற்றும் அவற்றின் மூலப்பொருட்களை சோதனை செய்ய எஃப்எஸ்எஸ்ஏஐ அமைப்பின் கீழ் அதிநவீன ஆய்வுக்கூடம் அமைக்கப்பட்டு வருகிறது.

வரிசையில் காத்திருக்கும் பக்தர்களுக்கும் வைகுண்டம் காம்ப்ளக்ஸில் காத்திருக்கும் பக்தர்களுக்கும் குடிநீர், பால், அன்ன பிரசாதம், சுகாதார மேலாண்மை போன்றவை சிரமமின்றி வழங்கப்படுவதை உறுதி செய்யும் பொறுப்பு சில அதிகாரிகளுக்கு பிரத்யேகமாக ஒதுக்கப்பட்டுள்ளது.திருமலையில் பக்தர்களின் வசதிக்காக, வரிசையில் உள்ள ஆறு இடங்களில் அன்னதானம் வழங்க சிறப்பு கவுன்டர்கள் மற்றும் கூடுதல் கழிப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளன. 

திருமலையில் பக்தர்களுக்கு சுத்தமான, சுவையான உணவுகளை நியாயமான விலையில் வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. ஏழுமலையான் பக்தர்களுக்கு மலிவு விலையில் சுத்தமான, ஆரோக்கியமான, சுவையான உணவை வழங்குவதே TTDயின் நோக்கம். திருமலை ஸ்ரீவாரி லட்டு பிரசாதங்கள் தரம் மற்றும் சுவையுடன் வழங்க, தரமான மூலப்பொருட்கள் மற்றும் நெய் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஷியாமளா ராவ் தெரிவித்தார்.

திருப்பதி ஏழுமலையான் பக்தர்களுக்குத் தேவைப்படும் தங்குமிடம், தரிசனம், ஆர்ஜிதசேவை டிக்கெட் போன்றவற்றில் முறைகேடு செய்யும் புரோக்கர்கள் கண்டுபிடிக்கப்பட்டு, அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

 திருப்பதி ஏழுமலையான் பக்தர்களின் வசதிக்காக திருமலை ஸ்ரீவாரி ஸ்ரீவாணி தரிசன டிக்கெட்டுகள் குறைக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ளார். ஸ்ரீவாணி அறக்கட்டளையில் ஆஃப்லைனில் ஒரு நாளைக்கு 1000 வழங்கப்படும் என்றும் ஜூலை 22 முதல் ஆஃப்லைனில் ஒரு நாளைக்கு 1000 ஸ்ரீவாணி தரிசன டிக்கெட்டுகள் மட்டுமே வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும் கூறினார்.

சாதாரண பக்தர்களின் தரிசன நேரத்தை அதிகரிக்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ஷியாமளா ராவ் தெரிவித்தார். ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு நன்கொடை வழங்கும் பக்தர்களுக்கு 900 டிக்கெட்டுகள் திருமலை கோகுலம் ரெஸ்ட் ஹவுஸிலும், மீதமுள்ள 100 டிக்கெட்டுகள் விமான நிலையத்தில் உள்ள தற்போதைய முன்பதிவு கவுன்டரிலும் வழங்கப்படுகிறது என்பதை ஷியாமளா ராவ் நினைவுப்படுத்தினார்.

திருப்பதி தேவஸ்தானத்தின் IT அமைப்பு மேலும் பலப்படுத்தப்பட்டு, சேவைகள், தரிசனம், தங்குமிடம் போன்றவற்றின் முன்பதிவில் உள்ள பிழைகளை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஷியாமளா ராவ் தெரிவித்துள்ளார். மேலும் முன்பு வாரத்திற்கு 1.05 லட்சம் வழங்கப்பட்டு வந்த SSD டோக்கன்கள், தற்போது பக்தர்கள் வரிசையில் காத்திருக்கும் நேரத்தை குறைக்கும் வகையில் 1.47 லட்சம் வழங்கப்படுவதாகவும் ஷியாமளா ராவ் கூறினார். இவற்றை மேலும் அதிகரிக்கப்பதற்கான வாய்ப்புகளை ஆராய்ந்து வருவதாகவும் கூறிய ஷியாமளா ராவ், SSD டோக்கன்கள் உள்ள பக்தர்கள் குறிப்பிட்ட நேரத்தில் தரிசனத்திற்கு வர வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow