Actor Prashanth About Support to Vijay Political Party : ஒருகாலத்தில் டோலிவுட்டின் டாப் ஸ்டாராக வலம் வந்த பிரசாந்த், நடுவில் சில ஆண்டுகள் ஃபீல்ட் அவுட்டில் இருந்தார். இந்நிலையில், நீண்ட இடைவேளைக்குப் பின்னர் மீண்டும் அந்தகன் மூலம் கம்பேக் கொடுக்க்கவுள்ள பிரசாந்த், இன்னொரு பக்கம் விஜய்யுடனும் நடித்து வருகிறார். வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் கோட் படத்தில், பிரசாந்துக்கும் முக்கியமான கேரக்டர் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால், அந்தகன், கோட் என அடுத்தடுத்து மாஸ் காட்டவுள்ளார் பிரசாந்த்.
5 ஆண்டுகளாக பல தடைகளை சந்தித்த அந்தகன், ஒருவழியாக ரிலீஸுக்கு ரெடியாகிவிட்டது. அதன்படி முதலில் ஆகஸ்ட் 15ம் தேதி அந்தகன் வெளியாகவிருந்த நிலையில், பின்னர் 9ம் தேதிக்கு மாற்றப்பட்டது. இதனையடுத்து அந்தகன் ரிலீஸை முன்னிட்டு இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார் பிரசாந்த். அதிலும் கொஞ்சம் ஓவர் டோஸ்ஸாக போக, ஹெல்மேட் இல்லாமல் பைக் ஓட்டி சர்ச்சையிலும் சிக்கினார். அதாவது யூடியூப் சேனலுக்கு ஒன்றுக்கு பேட்டிக் கொடுத்த பிரசாந்த், நிகழ்ச்சித் தொகுப்பாளருடன் ஹெல்மேட் அணியாமல் பைக்கில் சென்றபடி கலந்துரையாடினார்.
இந்த வீடியோ வைரலான நிலையில், சென்னை போக்குவரத்து காவல்துறை பிரசாந்துக்கு 2000 ரூபாய் அபராதம் விதித்தது. அதோடு இந்தச் சம்பவம் குறித்தும் விளக்கம் கொடுத்தார் பிரசாந்த். இதற்கு முன்பு ஹெல்மேட்டின் அவசியம் பற்றி பலமுறை விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளேன். விழிப்புணர்வு பேரணிகளில் கூட கலந்துகொண்டது உண்டு. ஆனால், இது எதிர்பாராமல் நடந்த சம்பவம், வேண்டுமென்றே செய்யவில்லை என சமாளித்தார். அதோடு இதனையும் ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தும் தருணமாகவே பார்ப்பதாகக் கூறியிருந்தார்.
மேலும் படிக்க - வசமாக சிக்கிய யூடியூபர் இர்ஃபான்
அதேபோல் விஜய்யின் அரசியல் பயணம் குறித்து பேசிய பிரசாந்த், “அவர் அரசியலுக்கு வருவது நல்ல விசயம் தான். யார் நல்லது செய்தாலும் அவர்களுக்கு சப்போர்ட் செய்வேன். விஜய் நல்லது செய்கிறாரா இல்லையா என்பதை நீங்கள் தான் சொல்ல வேண்டும்” என்றார். ஆகமொத்தம் பிரசாந்தின் ஓட்டு விஜய்க்கு தான் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்னொரு பக்கம் பிரசாந்துக்கும் அரசியல் ஆசை இருப்பதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்தாண்டு ஆரம்பத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை பெய்தபோது, நேரில் சென்று நிவாரணப் பொருட்கள் வழங்கியிருந்தார் பிரசாந்த்.
இன்னொரு பக்கம் பிரசாந்தின் கேரியர் குறித்து அவரது தந்தை தியாகராஜன் பேசியதும் வைரலாகி வருகிறது. அதாவது பிரசாந்தின் ஜாதகத்தில் சுக்கிர திசை ஆரம்பித்துள்ளது. இதனால் பிரசாந்த் மீண்டும் சினிமாவில் பெரிய ரவுண்ட் வருவார் என நம்பிக்கையாக தெரிவித்துள்ளார். அதன்படி, பிரசாந்த் தற்போது 3 புதிய படங்களில் கமிட்டாகியுள்ளதாக சொல்லப்படுகிறது.