YouTuber Irfan Driving Bike Without Helmet : முன்பெல்லாம் சினிமா, கிரிக்கெட், அரசியல் போன்ற துறைகளில் வலம் வருபவர்கள் தான் மக்களிடம் பிரபலமாகி வந்தனர். ஆனால், இப்போதெல்லாம் நிலைமை தலை கீழாகி விட்டது. சமூக வலைத்தளங்களின் விஸ்வரூப வளர்ச்சியால், யூடியூப், ஃபேஸ்புக், டிவிட்டர், இன்ஸ்டா போன்ற சோஷியல் மீடியாக்கள் மூலம் ஏராளாமானோர் பிரபலமாகிவிட்டனர். அப்படி ஃபுட் ரிவீயூ செய்து யூடியூப் மூலம் வெளிச்சத்துக்கு வந்தவர் இர்ஃபான். சென்னையில் உள்ள சந்து பொந்துகளில் எல்லாம் உள்ள ஹோட்டல்களில் தேடிச் சென்று அங்குள்ள ஸ்பெஷல் உணவுகளை சாப்பிட்டு விமர்சனம் செய்வார். அப்படியே உலகம் முழுவதும் ட்ராவல் செய்யத் தொடங்கிய இர்ஃபானுக்கு, சினிமா பிரபலங்கள், அரசியல்வாதிகளும் இண்டர்வீயூ கொடுக்கத் தொடங்கினர்.
சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், எம்பி கனிமொழி உள்ளிட்ட பலரையும் இர்ஃபான் நேர்காணல் செய்துள்ளார். இப்படியாக நாளுக்கு நாள் பிரபலமாகிக் கொண்டே சென்ற இர்ஃபான், ஒருகட்டத்தில் சர்ச்சைகளிலும் சிக்கத் தொடங்கினார். கடந்தாண்டு இர்ஃபானின் கார் மோதி மூதாட்டி ஒருவர் உயிரிழந்தது, தனது மனைவியின் கருவில் உள்ள சிசுவின் பாலினத்தை அறிவித்தது என அடுக்கடுக்காக பல சிக்கல்களில் மாட்டினார் இர்ஃபான். சமீபத்தில் கூட சக யூடியூபரான பிரியாணி மேன், இர்ஃபான் குறித்து பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.
இந்நிலையில், சென்னை போலீஸார் யூடியூபர் இர்ஃபானுக்கு அபராதம்(Irfan Fine) விதித்துள்ளது. சில தினங்களுக்கு முன்னர் விலையுயர்ந்த பைக்கை இர்ஃபான் ஓட்டிய வீடியோ வேகமாக பரவியது. அதில், இர்ஃபான் ஹெல்மெட் அணியவில்லை. அதேபோல், அந்த பைக்கின் நம்பர் பிளேட்டும் சரியாக இல்லை என சொல்லப்படுகிறது. இதனையடுத்து இர்ஃபானின் வீடியோவை சென்னை காவல்துறைக்கு டேக் செய்த நெட்டிசன் ஒருவர், “டூவீலர் விதிகள் சாமானியருக்கு மட்டுமா... ஒரு பிரபல YouTuber இர்ஃபான் இதுபோல் விதிமுறைகள் மீறும்போது நடவடிக்கைகள் இருக்காதா.. இல்லை நடவடிக்கை எடுத்து பொதுமக்களுக்கு தெரியப்படுத்தலாமே” என பதிவிட்டுள்ளார்.
இதனையடுத்து, இர்ஃபானின்(Irfan)இந்த செயலுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ள சென்னை போக்குவரத்து போலீஸார், ஹெல்மேட் அணியாதது, நம்பர் பிளேட் சரியில்லாமல் இருந்தது என இரண்டிற்கும் சேர்த்து 1,500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. முன்னதாக அந்தகன் பட ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் நடிகர் பிரசாந்த் ஹெல்மேட் அணியாமல் பைக் ஓட்டியதாக சர்ச்சையில் சிக்கினார். இதனையடுத்து பிரசாந்துக்கும் நிகழ்ச்சி தொகுப்பாளருக்கும் மொத்தம் 2000 ரூபாய் அபராதம் விதித்தது சென்னை போக்குவரத்து காவல்துறை. அதன்பின்னர் இந்தச் சம்பவம் குறித்து பிரசாந்த் விளக்கம் கொடுத்தது தனி கதை.
மேலும் படிக்க - அந்த சீன் எனக்கே தெரியாது
ஏற்கனவே யூடியூபர் இர்ஃபானின்(YouTuber Irfan) கார் விபத்து சர்ச்சையில், அவர் ஆளுங்கட்சியினருக்கு நெருக்கமானவர் என்பதால் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில், இப்போது ஹெல்மேட் அணியாமல் பைக் டிரைவ் செய்து சர்ச்சையில் சிக்கியுள்ளார் இர்ஃபான்.
இர்ஃபானுக்கு அபராதம் விதித்த சென்னை போக்குவரத்து காவல்துறை..!#kumudam | #kumudamnews24x7 | #kumudamnews| #chennaitraffic| @ChennaiTraffic | @irfansviewX | #viral | #Trending | #YouTuber | #RoadSafety | #SafetyFirst | #viralvideo | pic.twitter.com/rZbxyB55O1
— KumudamNews (@kumudamNews24x7) August 3, 2024