தமிழக வெற்றிக் கழகம் முதல் மாநாடு.. சேலத்தை விஜய் தேர்வு செய்வது ஏன்?.. சென்டிமெண்ட் கை கொடுக்குமா?

Actor Vijay's Tamilaga Vettri Kazhagam Manadu in Salem : தமிழ்நாட்டில் மதுரை அல்லது திருச்சியில் அரசியல் கட்சிகள் மாநாடு நடத்துவது வழக்கம். நடிகர் விஜய் தமது கட்சியின் முதல் மாநாட்டை சேலத்தில் நடத்துவது தொடர்பாக ஆலோசித்து வருகிறார்.

Jul 30, 2024 - 05:30
Aug 1, 2024 - 11:49
 0
தமிழக வெற்றிக் கழகம் முதல் மாநாடு.. சேலத்தை  விஜய் தேர்வு செய்வது ஏன்?.. சென்டிமெண்ட் கை கொடுக்குமா?
Actor Vijay's Tamilaga Vettri Kazhagam Manadu in Salem

Actor Vijay's Tamilaga Vettri Kazhagam Manadu in Salem : தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டை சேலத்தில் விஜய் நடத்துவது ஏன் என்பது விவாதப்பொருளாகியுள்ளது. மறைந்த தலைவர்களான ஜெயலலிதா, விஜயகாந்துக்கு சேலம் மாநாடு பெரும் வெற்றி கொடுத்ததால் சேலத்திலேயே முதல் மாநாட்டை நடத்தலாம் என நடிகர் விஜய் சென்டிமெண்ட் ஆக முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சினிமாவில் பிசியாக இருக்கும் போதே அரசியலில் இறங்கியுள்ளார் நடிகர் விஜய். கடந்த ஆண்டு மாணவ மாணவிகளுக்கு பரிசளித்து பாராட்டிய விஜய் கடந்த பிப்ரவரி மாதம்  தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கி உள்ளார். பொதுவாக அரசியல் கட்சிகள் தொடங்குவதற்கு முன்னர் பிரம்மாண்ட மாநாடு நடத்தி கட்சி பெயர், கொடி, கொள்கைகள், நிர்வாகிகள் அறிவிக்கப்படுவது வழக்கம். நடிகர் விஜய் கட்சி 'லெட்டர்' பேடில் கட்சியை தொடங்கிவிட்டதாக அறிவித்தார். 

தமிழக வெற்றி கழகம் என கட்சி பெயரை அறிவித்தார் விஜய். இது விவாதப் பொருளானதால் தமிழக வெற்றிக் கழகம் என மாற்றி இருந்தார்.  2026 சட்டசபை தேர்தல்தான் இலக்கு என்பது நடிகர் விஜய்யின் திட்டம். உறுப்பினர் சேர்க்கையை தொடங்கியது கூட புதுமையாக இருந்தது. 

2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் யாருக்கும் ஆதரவு கொடுக்காத விஜய் அடுத்த சட்டசபைத் தேர்தலுக்கு சைலண்ட் ஆக தயாராகி வருகிறார். தமிழ்நாட்டில் திமுக உள்ளிட்ட கட்சிகள் 2026 சட்டசபை தேர்தலுக்கான பணிகளைத் தொடங்கிவிட்ட நிலையில் நடிகர் விஜய்யும் தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாட்டை நடத்துவதற்கு தயாராகி வருகிறார். 

 தமிழ்நாட்டில் மதுரை அல்லது திருச்சியில் அரசியல் கட்சிகள் மாநாடு நடத்துவது வழக்கம். நடிகர் விஜய் தமது கட்சியின் முதல் மாநாட்டை சேலத்தில் நடத்துவது தொடர்பாக ஆலோசித்து வருகிறார். சேலம் நாழிக்கல்பட்டியில் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் இது தொடர்பான ஆய்வுகளை நடத்தி இருந்தார்.

அரசியல் மாநாட்டினை மதுரையில் நடத்தாமல் சேலத்தில் நடத்துவது ஏன் என்று தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் பலரும் யோசித்து வருகின்றனர். அதற்கும் ஒரு ராசி சென்டிமெண்ட் வைத்துள்ளாராம் விஜய். கடந்த 2014ஆம் ஆண்டு லோக்சபா தேர்தல் பிரசாரத்தை ஜெயலலிதா சேலத்தில்தான் தொடங்கினார். அந்த தேர்தலில் 37 தொகுதிகளில் அதிமுக வென்றது. தேமுதிக தலைவர் விஜயகாந்த் சேலத்தில் மாநாடு நடத்திய பின்னர்தான் எதிர்க்கட்சித் தலைவரானார். 

திமுக இளைஞரணி செயலாளர் ஆக உதயநிதி ஸ்டாலின் பதவியேற்ற பிறகு கின்னஸ் சாதனை படைத்த இளைஞரணி மாநாடும் சேலத்தில்தான் நடந்தது. இதனை எல்லாம் கவனத்தில் கொண்டுதான் நடிகர் விஜய் சேலத்தில் முதல் மாநாட்டை நடத்த திட்டமிடுகிறார் என்கின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow