Actor Vijay Political Party : ”விஜய் அரசியலுக்கு வரலாம்..ஆனா திமுகவை அசைக்க முடியாது” - அமைச்சர் ரகுபதி

Law Minister Raghupathi on Actor Vijay Political Party : நடிகர் விஜய் உள்ளிட்ட எத்தனை பேர் வேண்டுமானாலும் அரசியல் கட்சி தொடங்கலாம். அது வரவேற்கத்தக்கது. ஆனால் திமுக என்ற பழம்பெரும் கட்சியை யாராலும் அசைத்து பார்க்க முடியாது என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

Aug 25, 2024 - 12:44
Aug 25, 2024 - 12:59
 0
Actor Vijay Political Party : ”விஜய் அரசியலுக்கு வரலாம்..ஆனா திமுகவை அசைக்க முடியாது” - அமைச்சர் ரகுபதி
minister ragupathy on the left, Vijay on the right

நடிகர் விஜய் உள்ளிட்ட எத்தனை பேர் வேண்டுமானாலும் அரசியல் கட்சி தொடங்கலாம். அது வரவேற்கத்தக்கது. ஆனால் திமுக என்ற பழம்பெரும் கட்சியை யாராலும் அசைத்து பார்க்க முடியாது என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

Law Minister Raghupathi on Actor Vijay Political Party : புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், கால்நடை வளர்ப்போர் பயன்படும் வகையில் 8 புதிய கால்நடை அவசர ஊர்தி வாகனத்திற்கான சாவியையும் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் வாகனங்களையும் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மாவட்ட ஆட்சியர் அருணா வழங்கினர்.

 இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, நடிகர் விஜய் உள்ளிட்ட எத்தனை பேர் வேண்டுமானாலும் அரசியல் கட்சி தொடங்கலாம். அது வரவேற்கத்தக்கது. எல்லோரும் அரசியலுக்கு வந்தாலும் நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். ஆனால் திமுக என்ற பழம்பெரும் கட்சியை பல ஆண்டுகளாக நாங்கள் நடத்தி வருகிறோம். அதை யாராலும் அசைத்து பார்க்க முடியாது. மக்களுக்கு செய்த நலத்திட்டங்களின் காரணமாக மீண்டும் நாங்கள் ஆட்சிக்கு வருவதை யாரும் தடுக்க முடியாது” என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், “கிருஷ்ணகிரி விவகாரத்தில் வெவ்வேறு சம்பவங்களை முடிச்சு போட்டு இப்போது ஒன்றாக சேர்க்க பார்க்கின்றனர். அது வேறு சம்பவம் இது வேறு சம்பவம். இதில் ஆளுங்கட்சி எதுவும் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. ஒருவர் மருத்துவமனையில் இறந்துள்ளார் அவர் கைதாவதற்கு முன்பதாகவே விஷம் சாப்பிட்டதாக குறிப்புகள் உள்ளன. எனவே அவரை மருத்துவமனையில் சேர்த்து உள்ளனர் அதன் பின்பு அவர் இறந்துள்ளார்.

இன்னொருவர் ஸ்கூட்டர் விபத்தில் உயிரிழந்துள்ளார. இரண்டும் வெவ்வேறு சம்பவங்கள். ஆனால் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பதால் முடிச்சு போட்டு பார்க்கிறார்கள். இது மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுவதற்கு சமம்.

எங்களைப் பொறுத்தவரையில்  யார் தவறு செய்திருந்தாலும் அவர்களை தண்டிக்கக்கூடிய முதல் தலைவர் ஸ்டாலின்தான். எங்கள் கட்சியில் குற்றவாளிகளுக்கு இடம் கிடையாது. அப்படி இருந்தால் அவர்கள் மீது உரிய நடவடிக்கை உடனே எடுக்க கூடிய இயக்கம் திமுக” என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க: Vijay Sethupathi : 'அற்புதமான அனுபவம் கிடைக்கும்’.. வாழைக்காக உருகிய விஜய் சேதுபதி... 

மேலும் பல நாட்களாக அமைச்சரவையில் மாற்றம் ஏற்படும் என பேசப்பட்டு வரும் நிலையில் அதுகுறித்தும் பதிலளித்துள்ளார் அமைச்சர் ரகுபதி. வெளியில் சிலர்  அமைச்சரவை மாற்றம் என்பது குறித்து எல்லாம் பேசி வருகின்றனர். இதற்கெல்லாம்,  நாங்கள் பொறுப்பாக முடியாது. கற்பனைகளுக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியம் எங்களுக்கு கிடையாது என அவர் தெரிவித்துள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow