TN Cabinet Meeting : தமிழக அமைச்சரவை கூட்டம்.. முதல்வர் ஸ்டாலின் எடுக்கப்போகும் முடிவு.. எகிறும் எதிர்பார்ப்பு

Tamil Nadu Cabinet Meeting Today by CM Stalin in Chennai : தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று (ஆகஸ்ட் 13) முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ளது. உலக முதலீட்டாளர் மாநாட்டின் தொடர்ச்சியாக முதலீடுகளை ஈர்க்க அமெரிக்க செல்ல உள்ள நிலையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது.

Aug 13, 2024 - 08:04
Aug 13, 2024 - 11:19
 0
TN Cabinet Meeting : தமிழக அமைச்சரவை கூட்டம்.. முதல்வர் ஸ்டாலின் எடுக்கப்போகும் முடிவு.. எகிறும் எதிர்பார்ப்பு
tamil nadu cabinet meeting today

Tamil Nadu Cabinet Meeting Today by CM Stalin in Chennai : தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் இன்னும் சில நாட்களில் அமெரிக்கா செல்ல உள்ள பரபரப்பான சூழ்நிலையில் அமைச்சரவைக் கூட்டம் இன்று கூடுகிறது. அமைச்சரவைக்கூட்டத்தில் எடுக்கப்போகும் முடிவுகள் குறித்து அரசியல் வட்டாரங்களில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. துணை முதல்வர் பதவி உதயநிதிக்கு கிடைக்குமா? அமைச்சரவையில் மாற்றம் இருக்குமா என்பது பற்றிய அறிவிப்பும் வெளியாக வாய்ப்புள்ளதாக தலைமைச்செயலக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

சென்னையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற உலக முதலீட்டாளர் மாநாட்டின் தொடர்ச்சியாக தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வரும் 27ஆம் தேதி அமெரிக்கா செல்ல உள்ளார். 

அமெரிக்காவில்  கூகுள் நிறுவன செயல் அதிகாரி சுந்தர் பிச்சை உட்பட பல்வேறு தொழில் அதிபர்களை சந்திப்பதோடு அமெரிக்கா வாழ் தமிழர்களையும் சந்திக்க திட்டமிட்டுள்ளார். அத்துடன், அங்குள்ள முக்கிய நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் துவங்கும் வகையில் பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்து ஆக உள்ளதாக தெரிகிறது.

இந்நிலையில், தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் தலைமைச் செயலகத்தில் இன்று காலை 11.00 மணிக்கு நடைபெற உள்ளது. அமைச்சரவையில் விவாதிக்கப்படும் பொருள் குறித்த குறிப்பு தனியே அனுப்பி வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிதாக தமிழகத்தில் தொழில் துவங்கும் நிறுவனங்களுக்கு, விரிவாக்கம் செய்ய உள்ள பெரு நிறுவனங்களுக்கும் அமைச்சரவை ஒப்புதல் வழங்க வேண்டும். முதல்வர் வெளிநாடு செல்லும்போது, அமைச்சரவையின் ஒப்புதல் பெற வேண்டியது வழக்கமான நடைமுறையாக உள்ளதால், இந்தமுறையும் முதல்வரின் பயணத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளிக்கப்பட உள்ளதாக தெரிகிறது. மேலும், பல்வேறு முக்கிய தொழில் நிறுவனங்கள், திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

அதேபோல, அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்படுவதாக சமீப நாட்களாகவே செய்திகள் வெளியாகி வருகின்றன. அதை உறுதிப்படுத்தும் வகையில்  தமிழக அமைச்சர்களும் பேசி வருகின்றனர். துணை முதல்வர் கோரிக்கை வலுத்து வருவதால் முதல்வர் ஸ்டாலின் மனதும் கனிந்து இது குறித்த அறிவிப்பு வெளியாகும் என்ற எதிர்பார்க்கப்படுகிறது. 

அதே போல தமிழ்நாடு அமைச்சரவையில் சில அமைச்சர்கள் மாற்றம் செய்யப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. எனவே இந்த விவகாரம் குறித்தும் அமைச்சரவையில் பேசப்பட உள்ளதாக தெரிகிறது. எது எப்படியோ முதல்வர் ஸ்டாலின் அமெரிக்கா செல்லும் முன்பாக அதிரடி மாற்றங்களை அமைச்சரவையில் ஏற்படுத்தி விட்டு செல்வார் என்ற எதிர்பார்ப்புகள் எகிறியுள்ளன. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow