Varalakshmi Viratham 2024 : வரலட்சுமி விரத நாளில் மறந்தும் இந்த தவறு செய்யாதீர்கள்.. என்ன செய்யலாம் என்ன செய்யக்கூடாது

Varalakshmi Viratham 2024 Dos and Donts in Tamil : வரலட்சுமி விரதம் வெள்ளிக்கிழமை ( ஆகஸ்ட் 16) கடைபிடிக்கப்படுகிறது. இந்த விரதத்தின் போது சில தவறுகள் எல்லாம் செய்யாமல் இருந்தாலே முழுபயனும் கிடைக்கும் என்று ஜோதிடர்கள் கூறியுள்ளார்.

Aug 15, 2024 - 06:00
Aug 15, 2024 - 10:14
 0
Varalakshmi Viratham 2024 : வரலட்சுமி விரத நாளில் மறந்தும் இந்த தவறு செய்யாதீர்கள்.. என்ன செய்யலாம் என்ன செய்யக்கூடாது
Varalakshmi Viratham 2024 Dos and Donts in Tamil

Varalakshmi Viratham 2024 Dos and Donts in Tamil :  தீர்க்க சுமங்கலி வரம் தரும் வரலட்சுமி விரதம் வெள்ளிக்கிழமை ( ஆகஸ்ட் 16) கடைபிடிக்கப்படுகிறது. இந்த விரதம் கடைபிடிப்பதால் ஆயுள், ஆரோக்கியம் மட்டுமல்லாது செல்வ வளம் பெருகும் என்பது நம்பிக்கை.  திருமணமான பெண்களும், கன்னிப்பெண்களும் இந்த விரதத்தைக் கடைபிடிக்க வேண்டும். கணவரின் ஆயுள் பலம் வேண்டி சுமங்கலிப்பெண்கள் இந்த விரதத்தை கடைபிடிக்கின்றனர். வரலட்சுமி விரத நாளில் என்ன செய்ய வேண்டும் என்ன செய்யக்கூடாது என்று ஜோதிடர்கள் கூறியுள்ளனர்.

வரலட்சுமி விரதம்: 

ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதத்தில் வரும் பெளர்ணமி தினத்திற்கு முன் வரும் வெள்ளிக்கிழமை வரலட்சுமி விரத(Varalakshmi Viratham) தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. தமிழ்நாட்டில் பெரும்பாலான இந்து சமயத்தை பின்பற்றும் சுமங்கலி பெண்கள் இந்த விரதத்தை மேற்கொள்ள விரும்புவர். அப்படிப்பட்ட மிக முக்கிய விரத நாளான வரலட்சுமி விரதம் வரும் ஆகஸ்ட் 16ஆம் தேதி வெள்ளிக் கிழமை கடைபிடிக்கப்படுகிறது. வெள்ளிக் கிழமை காலை நல்ல நேரம் 9 மணி முதல் 10.30 மணிக்குள் நோன்பு கயிறு கட்டி விரதத்தை தொடங்கலாம்.  கலச பூஜை செய்ய மாலை 4.45 முதல் 5.45 வரை நல்ல நேரமாக உள்ளது. 

மகாலட்சுமிக்கு பிடித்தமானது: 

வரலட்சுமி விரதத்தின் போது வீடு அசுத்தமாக இருக்கக் கூடாது நன்றாக சுத்தமாக இருக்க வேண்டும். சுத்தம்தான் மகாலட்சுமிக்கு பிடித்தமானது. சூரிய உதயத்திற்கு முன்னாள் எழுந்து வாசல் தெளித்து கோலம் போட வேண்டும். உங்க கையால் கோலம் போட்டு மகாலட்சுமியை அழைக்க வேண்டும். வீடு சுத்தமாக இருக்க வேண்டும். வியாழக்கிழமை மாலையே  வீட்டினை சுத்தம் செய்ய வேண்டும்.  

விநாயகர் வழிபாடு:

லட்சுமி பூஜை செய்வதற்கு முன்பாக விநாயகர் வழிபாடு அவசியம் செய்ய வேண்டும். தலைகுளித்து விட்டு தலையை கட்டிக்கொண்டே பூஜை செய்யக்கூடாது   பூஜை செய்பவர்கள் தலையை விரித்துப்போட்டுக்கொண்டு பூஜை செய்யக்கூடாது. தலையில் இருந்து முடி கீழே விழுந்தால் சனி தோஷம் வந்து விடும். தலையை நன்றாக காய வைத்து  பின்னி பூஜை செய்ய அமரவேண்டும். மனதில் பக்தியுடன் சந்தோஷத்துடன் பூஜை செய்ய வேண்டும்.

நோன்புக்கயிறு:

ஒன்பது முடிச்சு இருக்கும் நோன்புக்கயிறு அவசியம். அம்மன் அலங்காரம் செய்த உடன் முடிக்கயிறு தயாரிக்கும் போது 9 முடிச்சுகள் போட்டிருக்க வேண்டும். வெள்ளிக்கிழமை காலைதான் இந்த முடிச்சி போடவேண்டும். வயது மூத்த சுமங்கலிகள் கையால் நோன்புக்கயிறு கட்டிக்கெள்ள வேண்டும்.  

பட்டுத்துணி:

சர்க்கரைப் பொங்கல் பாயசம், தாமரை மலர் அவசியம். பட்டுத்துணியல் அவசியம் அம்மனை அலங்கரிக்க வேண்டும். சரிகை உள்ள துணியால் அலங்கரிக்க வேண்டும். வெள்ளை கறுப்பு நிறத்தில் வஸ்திரம் இருக்கக்கூடாது. மஞ்சள் நிறம், சந்தன நிறத்தில் வஸ்திரம் இருந்தால் அற்புதமானது. கலசத்தில்  ஸ்ரீ வரலட்சுமி நமஹ என்று இருக்க வேண்டும். 

லட்சுமிக்கு நைவேத்தியம்: 

வரலட்சுமி பூஜைக்கு சுமங்கலி பெண்களை அவசியம் அழைப்பது அவசியம். சர்க்கரைப் பொங்கல் பாயாசம் நைவேத்தியம் செய்வது அவசியம். வரலட்சுமி பூஜை செய்பவர்கள் பட்டு வஸ்திரம்தான் அவசியம் அணிய வேண்டும். சரிகை இருப்பது அவசியம். ரவிக்கை துணி கொடுத்து ஆசி பெற வேண்டும். வரலட்சுமி பூஜையை மனநிறைவோடு செய்ய வேண்டும். ஒரு ரூபாய்க்கு கற்பூரம் ஏற்றி வரலட்சுமியை வழிபட்டாலும் லட்சுமி கடாட்சம் கிடைக்கும். மஞ்சள் குங்குமம் பூ வைத்து முடி கயிறு வைத்து பூஜிக்கலாம். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow