TN School TextBooks Price Hike : 'இலாப நோக்கமில்லை'.. பள்ளி பாடப்புத்தகங்கள் விலை உயர்வுக்கு அன்பில் மகேஷ் விளக்கம்!

Minister Anbil Mahesh Poyyamozhi on TN School TextBooks Price Hike : ''ஒவ்வொரு ஆண்டும் பாடப்புத்தகங்கள் தயாரிப்பதற்கான உற்பத்தி பொருட்களான காகிதம் மற்றும் மேல் அட்டைகளின் கொள்முதல் விலை கணிசமாக உயர்ந்து வருகிறது. 2018ம் ஆண்டோடு ஒப்பிடும்போது காகிதம் விலை 63 சதவிகிதமும், மேல் அட்டை விலை 33 சதவிகிதமும். மற்றும் அச்சுக்கூலி 21 சதவிகிதமும் உயர்ந்துள்ளது'' என்று அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.

Aug 14, 2024 - 23:24
Aug 15, 2024 - 15:24
 0
TN School TextBooks Price Hike : 'இலாப நோக்கமில்லை'.. பள்ளி பாடப்புத்தகங்கள் விலை உயர்வுக்கு அன்பில் மகேஷ் விளக்கம்!
Minister Anbil Mahesh Poyyamozhi on TN School TextBooks Price Hike

Minister Anbil Mahesh Poyyamozhi on TN School TextBooks Price Hike : தமிழ்நாட்டில் அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசு விலையில்லா பாடப்புத்தகங்களை வழங்கி வருகிறது. அதே வேளையில் தனியார் பள்ளிகளுக்கு குறைந்த விலையில் பாடப்புத்தகங்களை தமிழ்நாடு அரசு வழங்கி வருகிறது.

தனியார் பள்ளிகளுக்கு வழங்கப்படும் பாடப்புத்தகங்களின் விலை, புத்தகங்களின் அடிப்படையில் ரூ.30 முதல் ரூ.90 வரை விலை உயர்த்தப்பட்டுள்ளதாக தகவல் பரவியது. பாடப்புத்தகங்களின் விலை உயர்த்தப்பட்டதற்கு எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

இந்நிலையில், பாடப்புத்தகங்களின் விலை உயர்த்தப்பட்டது ஏன்? என்பது குறித்து தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், ''தமிழ்நாட்டிலுள்ள அரசுப்பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவியர்களுக்கு விலையில்லாப் பாடநூல்கள் வழங்கப்பட்டு வருகிறது. தனியார்ப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு நியாயமான விலையில் பாடநூல்கள் வழங்கப்பட்டு வருகிறது. 

முந்தைய ஆட்சிக்காலத்தில் 2015 -16ம் கல்வியாண்டில் அதிகபட்சமாக 370 சதவிகிதமும், 2018 - 19ம் கல்வியாண்டில் அதிகபட்சமாக 466 சதவிகிதமும் பாடநூல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. குறிப்பாக 11ம் வகுப்பு புவியியல் பாடப்புத்தகம் 466 சதவிகிதம், 11 ஆம் வகுப்பு வணிகவியல் பாடப்புத்தகம் 325 சதவிகிதம், 11ம் வகுப்பு அரசியல் அறிவியல் பாடப்புத்தகம் 300 சதவிகிதம் எனப் பாடநூல்கள் விலை அதிகபட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல் 2013 - 14 ஆம் கல்வியாண்டிலும் பாடநூல்கள் விலை உயர்த்தப்பட்டுள்ளது. எனவே, மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை காகிதம், மேல் அட்டை மற்றும் அச்சுக்கூலி ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு பாடப்புத்தகத்தின் விலை உயர்த்தப்படுவது என்பது வழக்கமான நடைமுறையாகும்.

ஒவ்வொரு ஆண்டும் பாடப்புத்தகங்கள் தயாரிப்பதற்கான உற்பத்தி பொருட்களான காகிதம் மற்றும் மேல் அட்டைகளின் கொள்முதல் விலை கணிசமாக உயர்ந்து வருகிறது. 2018ம் ஆண்டோடு ஒப்பிடும்போது காகிதம் விலை 63 சதவிகிதமும், மேல் அட்டை விலை 33 சதவிகிதமும். மற்றும் அச்சுக்கூலி 21 சதவிகிதமும் உயர்ந்துள்ளது. எனவே அந்த விலையேற்றங்களை ஈடுகட்டும் வகையிலேயே பள்ளி பாடநூல்களின் விலை 6 ஆண்டுகளுக்குப் பின்னர் தற்போது தான் உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த விலை உயர்வு இலாப நோக்கத்திற்காக உயர்த்தப்படவில்லை. பாடப்புத்தகத்தின் மேல் அட்டை, காகிதம் மற்றும் அச்சுக்கூலி உள்ளிட்டவைகளின் விலை உயர்வின் காரணமாக பாடபுத்தகம் தயாரிப்பதற்கு ஆகும் செலவினை ஈடுகட்டுவதற்காக மட்டுமே மேற்கொள்ளப்படுகிறது. தமிழ்நாட்டிலுள்ள அரசுப்பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் ஏழை, எளிய குடும்பத்தைச் சார்ந்த மாணவ மாணவியர்களுக்கு விலையில்லாப் பாடநூல்கள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. 

மேலும் போட்டித்தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு உதவிடும் வகையில் சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகம், மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகம், மாவட்ட நூலகங்கள் மற்றும் அறிவு சார் மையங்களுக்குத் தேவையான அளவு பள்ளி பாடநூல்கள் வழங்கப்பட்டுள்ளது. இவ்வரசு என்றுமே மாணவர்களின் நலன் நாடும் அரசாகவே செயல்படும்'' என்று அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow