Chennai To Madurai : சுதந்திர தின விடுமுறை.. விண்ணை எட்டிய விமான கட்டணம்.. சென்னை டூ மதுரை எவ்வளவு தெரியுமா?

Chennai To Madurai Flight Ticket Price Hike on August 15 : சுதந்திர தின தொடர் விடுமுறை சொந்த ஊர்களுக்கு அதிக அளவில் பயணிகள் செல்வதால் சென்னையில் இருந்து தூத்துக்குடி, மதுரை, திருச்சி, கோவை, சேலம் ஆகிய இடங்களுக்கு விமான டிக்கெட் கட்டணங்கள் பல மடங்கு உயர்ந்துள்ளது.

Aug 14, 2024 - 10:57
Aug 15, 2024 - 09:59
 0
Chennai To Madurai : சுதந்திர தின விடுமுறை.. விண்ணை எட்டிய விமான கட்டணம்.. சென்னை டூ மதுரை எவ்வளவு தெரியுமா?
Chennai To Madurai Flight Ticket Price Hike on August 15

Chennai To Madurai Flight Ticket Price Hike on August 15 : சுதந்திர தினத்தை முன்னிட்டு 4 நாட்கள் தொடர் விடுமுறை வருவதால் சென்னையில் இருந்து சொந்த ஊர் செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து, தூத்துக்குடி, மதுரை, திருச்சி, கோவை, சேலம் ஆகிய இடங்களுக்கு செல்லும் விமானங்களில் பயணிகள் கூட்டம் அதிக அளவில் இருக்கின்றது.  இதை பயன்படுத்தி விமான டிக்கெட் கட்டணங்களும் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. 

இந்தியா நாட்டின் 78வது சுதந்திர தின விழா கோலாகலமாக நாளை கொண்டாடப்பட உள்ளது. இதனால் நாளை வியாழக்கிழமை நாடு முழுவதும் அரசு விடுமுறை. மறுநாள் வெள்ளிக்கிழமை ஒரு நாள் மட்டும் விடுமுறை எடுத்தால் தொடர்  சனி, ஞாயிறு விடுமுறைகள் வந்துவிடுகிறது. இதை அடுத்து தொடர் விடுமுறையாக 4 நாட்கள் விடுமுறை கிடைத்ததால், சென்னை நகரில் வசிக்கும் பெரும்பான்மையான மக்கள், தங்களுடைய சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு செல்ல தொடங்கி உள்ளனர். 

இவ்வாறு செல்பவர்கள் ரயில், பேருந்துகளில் சென்றால் 4 நாட்கள் விடுமுறையில் 2 நாட்கள் பயணத்திலே கழிந்து விடும் என்பதால் ஒன்றரை மணி நேரம் பயணமான விமான பயணத்தை தேர்ந்தெடுத்து பயணம் செய்கின்றனர். 

இதை அடுத்து சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து, தூத்துக்குடி, மதுரை, திருச்சி, கோவை, சேலம் ஆகிய இடங்களுக்கு செல்லும் விமானங்களில் பயணிகள் கூட்டம் அதிக அளவில் இருக்கின்றது. 

இந்த விமானங்களில் பயணிகள் கூட்டம் அதிக அளவில் இருப்பதன் காரணமாக வழக்கம் போல் விமான டிக்கெட் கட்டணங்களும் பல மடங்கு உயர்ந்துள்ளன. 

சென்னை- தூத்துக்குடி  வழக்கமான கட்டணம் ரூ.4,301. ஆனால் இன்று நாளை கட்டணம்,ரூ.10,796

அதைப்போல் சென்னை- மதுரை கட்டணம் ரூ.4,063. இன்றும் நாளையும் கட்டணம் ரூ.11,716

சென்னை- திருச்சி  கட்டணம் ரூ.2,382. ஆனால் இன்றும் நாளையும் கட்டணம் ரூ.7,192

சென்னை- கோவை  கட்டணம் ரூ. 3,369. இன்று நாளை ரூ.5,349

சென்னை- சேலம்  கட்டணம் ரூ.2,715. இன்று நாளை கட்டணம் ரூ.8,277

சுதந்திர தின விழா தொடர் விடுமுறை(August 15 Holiday) காரணமாக, சென்னையில் இருந்து தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் விமானங்களில் கட்டணங்கள்(Flight Ticket Fare), இதை போல் பல மடங்கு உயர்ந்துள்ளது. ஆனால் கட்டண உயர்வை பற்றி கவலைப்படாமல், விடுமுறையை சொந்த ஊரில் கழிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில், பயணிகள் போட்டி போட்டுக் கொண்டு, விமானங்களில் பயணம் செய்கின்றனர். 

அதே நேரத்தில் தமிழ்நாட்டில் உள்ள நகரங்களுக்கு செல்லும் விமான கட்டணங்கள் இதைப்போல் பல மடங்கு உயர்ந்தாலும், வெளி மாநிலங்களான பெங்களூர், ஐதராபாத், விஜயவாடா, கொச்சி, டெல்லி, மும்பை, கொல்கத்தா உள்ளிட்ட நகரங்களுக்கான விமான கட்டணங்கள் உயரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow