Lyricist Na Muthukumar : பறவையே எங்கு இருக்கிறாய்..? நினைவில் நின்ற நா. முத்துக்குமாரின் 10 பாடல்கள்!

Lyricist Na Muthukumar Memorial Day 2024 : தமிழ் சினிமா ரசிகர்களை தனது வரிகளால் கட்டிப்போட்டவர் பாடலாசிரியர் நா.முத்துக்குமார். சந்தோஷம், சோகம், அழுகை, காதல் தோல்வி, காதல் வெற்றி, டீனேஜ், யூத், ஒரு தலை காதல், இரு தலை காதல், திருமனத்திற்கு பிறகான காதல், நட்பு என எந்த ஜானராக இருந்தாலும் இளசுகள் முதல் பெருசுகள் வரை மனதை கரைய வைக்கும் அளவிற்கு அவரது பாடல் வரிகள் அமைந்திருக்கும். இப்படிப்பட்ட பெருமைக்கு சொந்தக்காரரான நா.முத்துக்குமாரின் 8வது நினைவு தினம் இன்று.

Aug 14, 2024 - 11:58
Aug 15, 2024 - 09:59
 0
Lyricist Na Muthukumar : பறவையே எங்கு இருக்கிறாய்..? நினைவில் நின்ற நா. முத்துக்குமாரின் 10 பாடல்கள்!
நினைவில் நின்ற நா. முத்துக்குமாரின் 10 பாடல்கள்

Lyricist Na Muthukumar Memorial Day 2024 : காஞ்சிபுரத்தில் பிறந்து தமிழ் இலக்கியத்தில் பட்டம் பெற்ற நா.முத்துக்குமார் சினிமா கனவுகளுடன் சென்னைக்கு வந்தார். அப்போது அவரை அள்ளி அனைத்துக்கொண்டவர்தான் திரைப்பட இயக்குநரும் ஒளிப்பதிவாளருமான பாலு மகேந்திரா. அவரின் உதவியாளராக இணைந்த நா.முத்துக்குமார், பின்னாளில் பாடல்களை எழுதத் தொடங்கி சிறந்த பாடலாசிரியராக உருவெடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

யுவன் ஷங்கர் ராஜா - நா.முத்துக்குமார்(Na Muthukumar) காம்போவுக்கு உலகெங்கிலும் அத்தனை ரசிகர்கள் இருப்பதில் ஆச்சரியமில்லை. யுவனின் மெலோடி இசையில் நா.முத்துக்குமாரின் பாடல் வரிகளைக் கேட்பது புல்லாங்குழலிற்குள் நதி நீர் பாய்வது போன்ற சுகத்தை கொடுக்கும் என்பதிலும் ஆச்சரியமில்லை. இதைத் தவிர ஏ.ஆர்.ரஹ்மான் - நா.முத்துக்குமார், இளையராஜா - நா.முத்துக்குமார், ஜி.வி.பிரகாஷ் - நா.முத்துக்குமார் உள்ளிட்ட காம்போக்களும் சிறந்ததுதான் என்பதையும் மறுக்க முடியாது. 

இப்படிப்பட்ட பாடலாசிரியரின் மறக்க முடியாத, மறுக்க முடியாத, ரசிக்காமல் இருக்க முடியாத டாப் 10 பாடல்களை தற்போது பார்க்கலாம்! 

1. புதுப்பேட்டை (2005) - ‘ஒரு நாளில்’

“போர் களத்தில் பிறந்து விட்டோம் வந்தவை போனவை வருத்தம் இல்லை
காட்டினிலே வாழ்கின்றோம் முட்களின் வலி ஒன்றும் மரணம் இல்லை
இருட்டினிலே நீ நடக்கையிலே உன் நிழலும் உன்னை விட்டு விலகி விடும்
நீ மட்டும் தான் இந்த உலகத்திலே உனக்கு துணை என்று விளங்கி விடும்.....“

தனிமையில் தவிக்கும்போது வாழ்க்கையின் நிதர்சனமான உண்மையையும் அர்த்தத்தையும் இந்த பாடல் நமக்கு உணர்த்துகிறது. 

2. சைவம் (2014) - “அழகே அழகே” 

“மழை மட்டுமா அழகு சுடும்  வெயில் கூட ஒரு அழகு
மலர் மட்டுமா அழகு விழும் இலை கூட ஒரு அழகு
புன்னகை வீசிடும் பார்வைகள் அழகு
வார்த்தைகள் தீர்கையில் மௌனங்கள் அழகு
நன்மைக்கு சொல்லிடும் பொய்களும் அழகு
உண்மையில் அதுதான் மெய்யாய் அழகு....”

இதுதான் அழகு, அதுதான் அழகு என்றில்லாமல் இவ்வுலகில் இருக்கும் ஒவ்வொன்றிலும் ஒரு அழகு இருப்பதை நாம் ரசிக்க மறக்கிறோம் என்பதை இப்பாடல் வரிகள் நமக்கு சுட்டிக்காட்டுகிறது.

3. தங்க மீன்கள் (2015) - “ஆனந்த யாழை”

“இரு நெஞ்சம் இணைந்து பேசிட
உலகில் பாஷைகள் எதுவும் தேவையில்லை
சிறு புல்லில் உறங்கும் பனியில்
தெரியும் மழையின் அழகோ தாங்கவில்லை

உந்தன் கைகள் பிடித்து போகும் வழி
அது போதவில்லை இன்னும் வேண்டுமடி
இந்த மண்ணில் இதுபோல் யாருமிங்கே
எங்கும் வாழவில்லை என்று தோன்றுதடி” 

அப்பாக்களுக்கு தங்களது மகள்கள் எப்போதுமே தேவதைகள்தான். அதே போல் மகள்களுக்கு தங்களது அப்பாக்கள் முதல் ஹீரோக்கள்தான். “மகள்களை பெற்ற அப்பாவுக்கு மட்டும் தான் தெரியும் முத்தம் காமத்தில் சேர்ந்ததில்லை என்று...”

 

4. காதல் கொண்டேன் (2003) - “நெஞ்சோடு கலந்திடு” 

“காலங்கள் ஓடும்
இது கதையாகி போகும்
என் கண்ணீர் துளியின்
ஈரம் வாழும் தாயாக
நீதான் தலை கோத
வந்தாலும் மடிமீது
மீண்டும் ஜனனம் வேண்டும்

என் வாழ்க்கை
நீ இங்கு தந்தது அடி உன்
நாட்கள் தானே இங்கு
வாழ்வது காதல் இல்லை
இது காமம் இல்லை இந்த
உறவுக்கு உலகத்தில் பெயரில்லை...”

இது காதல்தானா அல்லது நட்பா என்ற குழப்பம் நமது வாழ்வில் ஒரு முறையாவது வந்திருக்கும். ஒரு ஆண் - பெண்ணின் நட்பின் எல்லை எதுவரை என்பதை இப்பாடல் வரிகள் நமக்கு அழகாகக் கூறுகிறது.

 

5.   கேடி பில்லா கில்லாடி ரங்கா (2013) - “தெய்வங்கள் எல்லாம்”

“கண்டிப்பிலும் தண்டிப்பிலும் கொதித்திடும் உன் முகம்…
காய்ச்சல் வந்து படுக்கையில் துடிப்பதும் உன் முகம்…
அம்பாரியாய் ஏற்றிக் கொண்டு அன்று சென்ற ஊர்வலம்…
தகப்பனின் அணைப்பிலே கிடந்ததும் ஓர் சுகம்...”

அப்பா - மகளுக்கு ஒரு செண்டிமெண்ட் இருப்பதைப்போல் அப்பா - மகனுக்கும் ஒரு சொல்லப்படாத செண்டிமெண்ட் இருக்கிறது. அதனை இப்பாடல் வரிகள் மூலம் கொடுத்து ஒவ்வொரு மகனையும் கண்கலங்க வைத்தவர் நா.முத்துக்குமார். 

6.  தாண்டவம் (2012) - “ஒரு பாதி கதவு” 

“ஓ… இடி இடித்தும் மழை அடித்தும் அசையாமல் நின்றிருந்தோம்...
ஓ… இன்றேனோ நம் மூச்சும் மென் காற்றில் இணைந்து விட்டோம்...
இதயம் ஒன்றாகி போனதே.. கதவே இல்லாமல் ஆனதே..
இனிமேல் நம் வீட்டிலே.. பூங்காற்று தான் தினம் வீசுமே...”

பெற்றோர்களால் பார்த்து திருமணம் செய்துகொண்ட இருவர் மத்தியில் காதல் எப்படி மலர்கிறது என்பதையும் எவ்வாறு அவர்களுக்கு நடுவில் ஒரு புரிதல் உண்டாகிறது என்பதையும் காதல் ததும்பத் ததும்பக் கூறியிருப்பார் நா.முத்துக்குமார்(Na Muthukumar Songs). 

7. 7/ஜி ரெயின்போ காலனி (2004) - “நினைத்து நினைத்து”

“உள்ளங்கையில் வெப்பம் சேர்க்கும் விரல்கள் இன்று எங்கே...
தோளில் சாய்ந்து கதைகள் பேச முகமும் இல்லை இங்கே..
முதல் கனவு முடிந்திடும் முன்னமே...
தூக்கம் கலைந்ததே...”

லவ் ஃபெயிலியரான ஒவ்வொருவரும் ரிப்பீட் மோடில் போட்டு, தனது காதலனையோ அல்லது காதலியையோ நினைத்து கேட்டு அழுத பாடல் என்றால் அது நிச்சயம் இதுவாதத்தான் இருக்கும். 

8. கற்றது தமிழ் (2007) - “பறவையே எங்கு இருக்கிறாய்” 

“இந்த நிகழ்காலம் இப்படியே தான் தொடராதா...
என் தனியான பயணங்கள் இன்றுடன் முடியாதா...
முதல் முறை வாழப் பிடிக்குதே...
முதல் முறை வெளிச்சம் பிறக்குதே...
முதல் முறை முறிந்த கிளை ஒன்று பூக்குதே...” 

யுவன் இசையில், இளையராஜா குரலில், நா.முத்துக்குமார்(Na Muthukumar Lyrics) வரிகளில் உருவான இந்தப் பாடலைக் கேட்டு கண்ணீர் சிந்தாதவர் இருக்கவே முடியாது. ஒரே நேரத்துல் சந்தோஷத்தையும் சோகத்தையும் தரக்கூடிய இந்த பாடல், பலரின் Play List-ல் முதல் இடத்தில் இருக்கிறது.

 

9. ரன் (2002) - “தேரடி வீதியில்” 

“கோயிலுக்குள்ள காதல சொல்லு செருப்பு இருக்காது தெரிஞ்சுக்கோ...
பார்ட்டிய பொண்ண லவ்வு பண்ணா எட்டு போடணும் தெரிஞ்சுக்கோ...
கேரியர் இல்லாத சைக்கிள் தான்டா காதலுக்கு ஏத்தது
தெரிஞ்சுக்கோ...
காதலும் கூட காத்தாடி போலே நூலு விடணும் தெரிஞ்சுக்கோ...” 

டீனேஜ் மற்றும் யூத் ஆண்கள் முதன்முதலாக காதலிக்கலாம் என நினைக்கும்போது அவர்களுக்கு இந்த பாடல் மூலம் அட்வைஸ் கொடுத்திருப்பார் நா.முத்துக்குமார்(Na Muthukumar). 

10. ஆதலால் காதல் செய்வீர் (2013) - “ஆராரோ பாட இங்கு”

“கடவுளின் உருவம் எதுவென மழலை சிரிப்பிலே அறிய வைக்கின்றாய்...
சேற்றிலே வளர்ந்த தாமரை மலரைப் போலவே நீ தோன்றினாய்...
பூமியிது புனிதமில்லை ஆயிரம் அசுத்தங்கள் உள்ளது...
தீயிலுமே நீந்தி வர நீ இன்று கற்றுக்கொள் நல்லது..”

யுவன் இசையமைத்து பாடிய இப்பாடலைக் கேட்டு கண்ணீர் சிந்தாதவர் யாருமே இருக்கமுடியாத அளவுக்கு, தனது வரிகளால் நெஞ்சை புளிய வைத்தவர் நா.முத்துக்குமார். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow