Indian Bank Jobs 2024 : இந்தியன் வங்கியில் கொட்டி கிடக்கும் வேலைவாய்ப்பு! தமிழர்களுக்கு மட்டும் 160 போஸ்டிங் - முழு விபரம்

Indian Bank Jobs 2024 in Tamil Nadu : மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான இந்தியன் வங்கியில் லோக்கல் பேங்க் ஆபீஸர்ஸ் பணியிடங்களுக்கான விண்ணப்பங்களை அந்த வங்கி வரவேற்றுள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் 300 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Aug 14, 2024 - 10:19
Aug 15, 2024 - 09:59
 0
Indian Bank Jobs 2024 : இந்தியன் வங்கியில் கொட்டி கிடக்கும் வேலைவாய்ப்பு! தமிழர்களுக்கு மட்டும் 160 போஸ்டிங் - முழு விபரம்
Indian Bank Jobs 2024

Indian Bank Jobs 2024 in Tamil Nadu : மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான இந்தியன் வங்கியில் லோக்கல் பேங்க் ஆபீஸர்ஸ் பணியிடங்களுக்கான விண்ணப்பங்களை அந்த வங்கி வரவேற்றுள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் 300 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் ஏராளமான பொதுத்துறை வங்கிகள் செயல்பட்டு வருகிறது. இதற்கான பணியாளர்கள் ஆட்சேர்க்கை ஐபிபிஎஸ் மூலமாகவும், விண்ணப்பங்கள் அடிப்படையில்(Indian Bank Job Online Application) சில நேரடியாகவும் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இந்தியன் வங்கியில்(Indian Bank Vacancy) காலியாக உள்ள லோக்கல் பேங்க் ஆபீஸர்ஸ் JNG ஸ்கேல்-1 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தியன் வங்கி: மத்திய அரசு வேலை வகையில் கீழ் வரும் இந்த பணியில் 300 காலி பணியிடங்கள் இருக்கிறது. 

தமிழ்நாடு, புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திர பிரதேசம், தெலுங்கானா, மகாராஷ்டிரா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் 300 காலிப் பணியிடங்கள் இருக்கிறது. இதில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மட்டும் 160 காலி பணியிடங்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது. 
மொத்தம் 300 காலி பணியிடங்கள் இருக்கும் நிலையில் கல்வி தகுதியாக ஏதாவது ஒரு பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: 

அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பிரிவில் பட்டம் (பட்டப்படிப்பு) இந்தியாவின் அல்லது மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் சமமான தகுதி. விண்ணப்பதாரர் அவர்/அவள் பதிவு செய்யும் நாளில் பட்டதாரி என்பதற்கான செல்லுபடியாகும் மதிப்பெண் சான்றிதழ் / பட்டப்படிப்பு சான்றிதழை வைத்திருக்க வேண்டும் மற்றும் ஆன்லைனில் பதிவு செய்யும் போது பட்டப்படிப்பில் பெற்ற மதிப்பெண்களின் சதவீதத்தைக் குறிப்பிட வேண்டும்.

எஸ்சி, எஸ்டி, ஓபிசி, பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினர், ஜெனரல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் இட ஒதுக்கீடு அடிப்படையில் பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. SC/ST - 5 ஆண்டுகள் ஓபிசி - 3 ஆண்டுகள் PwBD (Gen/ EWS) - 10 ஆண்டுகள் PwBD (SC/ ST) - 15 ஆண்டுகள் PwBD (OBC) - 13 ஆண்டுகள் 

விண்ணப்பிக்கக் கட்டணம்: ST/SC/முன்னாள் ராணவத்தினர் /PWD - ரூ.175/- மற்றவர்களுக்கு - ரூ.1000/. நேர்காணலைத் தொடர்ந்து விண்ணப்பங்களின் குறுகிய பட்டியல் அல்லது எழுத்து / ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும்

இந்தப் பதவிகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். https://ibpsonline.ibps.in/iblbojul24/ என்ற லிங்கில் விண்ணப்ப வேண்டும். வங்கியின் அதிகாரப் பூர்வ அறிவிப்பை பிஎடிப் பைலாக https://www.indianbank.in/wp-content/uploads/2024/08/Detailed-advertisement-on-Recruitment-of-Local-Bank-Officer-2024.pdf என்ற லிங்கை பயன்படுத்து பதிவிறக்கம் செய்து கொள்ளவும். அதனை நன்றாக படித்த பிறகு எல்லாம் சரியாக இருந்தால் ஏற்கனவே கூறிய https://ibpsonline.ibps.in/iblbojul24/ என்ற லிங்கில் விண்ணப்பித்து, கேட்டுக் கொள்ளப்பட்டுள்ள அனைத்து ஆவணங்களையும் அட்டாச் செய்து விண்ணப்பத்தை சமர்பிக்கலாம். 

விண்ணப்பிப்பதற்கான தொடக்க தேதி - 13.08.2024 விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி - 02.09.2024. ஒரு முறை விண்ணப்பித்தால் மீண்டும் அதனை சரி செய்ய முடியாது என்பதை தேர்வர்கள் கவனத்தில் கொள்ளவும்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow