Silapathikaram Conference 2024 : சிட்னியில் 3வது அனைத்துலக சிலப்பதிகார மாநாடு.. தமிழின் முதல் காப்பியத்திற்கு சிறப்பு

Sydney International Silapathikaram Conference 2024 in Australia : தமிழின் முதற் காப்பியமாகப் போற்றப்படும் சிலப்பதிகாரத்திற்கு அனைத்துலக நிலையில் 3வது சிலப்பதிகார மாநாடு ஆஸ்திரேலியா தலைநகரான சிட்னியில் 2024 நவம்பர் 30 மற்றும் டிசம்பர் 1 ஆகிய இரு நாட்கள் நடைபெறுகிறது

Aug 14, 2024 - 09:55
Aug 15, 2024 - 09:59
 0
Silapathikaram Conference 2024 : சிட்னியில் 3வது அனைத்துலக சிலப்பதிகார மாநாடு.. தமிழின் முதல் காப்பியத்திற்கு சிறப்பு
Sydney Third International Silappathikaram Conference 2024 in Australia

Sydney International Silapathikaram Conference 2024 in Australia : ஆஸ்திரேலியா தலைநகரான சிட்னியில் 2024 நவம்பர் 30,டிசம்பர் 1  ஆகிய இரு நாட்கள் மூன்றாவது சர்வதேச சிலப்பதிகார மாநாடு நடைபெறுகிறது. இம்மாநாட்டை சிட்னி கலை இலக்கிய மன்றத்தின் தலைவர் டாக்டர் இரத்தின மகேந்திரன் தலைமையேற்று நடத்துகிறார். 

தமிழ் மொழியின் மகத்தான இலக்கியக் கருவூலம் சிலப்பதிகாரம். இதனை இயற்றியவர் இளங்கோவடிகள். தமிழரின் முதல் காப்பியம், முத்தமிழ் காப்பியம், தமிழரின் கலாசாரத்தை உலகிற்கு கொண்டுவந்துள்ள தமிழரின் வரலாற்றுக் காப்பியமாகும் சிலப்பதிகாரத்திற்கு சிட்னியில் சிறப்பு சேர்க்கும் வகையில் அனைத்துலக மாநாடு நடத்தப்பட்டு வருகிறது.

இளங்கோவடிகள் வேந்தர் குலத்திற் பிறந்தவர், உயர் கல்வி பெற்று வளர்ந்தவர். கணியன் கூறியபடி அரசாளும் திருப்பொறி வாய்ந்தவர், காதலை வெறுத்தோ  கடமைக்கு அஞ்சியோ இவர் துறவு மேற்கொள்ளவில்லை. மூத்தவன் ஆளும் அரச மரபு பிறழக்கூடாது என்பதற்காகவே துறவு மேற்கொண்டார். 

இளங்கோவடிகள் இயற்றிய சிலப்பதிகாரம்  உலக மக்கள் அனைவருக்கும் குடிமக்கள் காப்பியமாக விளங்கும் காப்பியமாக அமைந்துள்ளது. சமய நல்லிணக்கத்தைப் போற்றவும் நல்லறத்தை வலியுறுத்தவும் தமிழும் தமிழினமும் உலகப் புகழ் பெறக் காரணமான சிலப்பதிகாரம் இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழும் இயைந்த காப்பியமாகின்றது. தமிழக்துத் தமிழர்களை மட்டுமல்லாது உலகத் தமிழர்களை ஒருங்கிணைத்த இளங்கோ அடிகளிற்கு சிட்னியில் சிலை நிறுவப்பட்டுள்ளது. 

ஆஸ்திரேலியா தலைநகரான சிட்னியில் 2024 நவம்பர் 30,டிசம்பர் 1  ஆகிய இரு நாட்கள் மூன்றாவது சர்வதேச சிலப்பதிகார மாநாடு நடைபெறுகிறது. இம்மாநாட்டை சிட்னி கலை இலக்கிய மன்றத்தின் தலைவர் டாக்டர் இரத்தின மகேந்திரன் தலைமையேற்று நடத்துகிறார். 

உலக அளவில் தமிழறிஞர் களும் பேராசிரியர்களும் ஆய்வாளர்களும் பங்கேற்கின்றனர். மாநாட்டின் ஒருங்கிணைப்பாளர்களான முனைவர் மோ. பாட்டழகன்,முனைவர் மா. பத்மபிரியா மாநாட்டு க்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். மாநாட்டில் பங்கேற்க விரும்புகிறவர்கள் +91 9380417307, +91 9486862263 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்''

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow