பிரபல இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் கடந்த 2009-ஆம் ஆண்டு வெளியான ‘அவதார்’ திரைப்படம் பெரிய ஹிட் அடித்தது. இதையடுத்து, இப்படத்தின் இரண்டாம் பாகமான ‘அவதார்: தி வே ஆஃப் வாட்டர்’ திரைப்படம் கடந்த 2022-ம் ஆண்டு வெளியாகி வசூலில் சாதனை படைத்தது.
தற்போது இதன் மூன்றாம் பாகமான ‘Avatar Fire and Ash' திரைப்படம் வெளியாகவுள்ளது. இதுவரை பார்த்திராத பல பண்டோராவை இதில் பார்ப்பீர்கள். தீவிரமான சாகசத்தையும் முந்தைய பாகத்தை விட அதிகமான உணர்ச்சி வெளிப்பாடுகளையும் இதில் பார்க்க முடியும். விஷுவலாகவும் சிறந்த அனுபவத்தைத் தரும்” என்று இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் தெரிவித்திருந்தார்.
’அவதார் 3’ திரைப்படம் வரும் டிசம்பர் 19-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழுவால் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போகும் என்று பல செய்தியகள் உலா வந்தது. Cinemacon நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ‘அவதார் 3’ படக்குழு வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக டிசம்பர் 19-ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என்று உறுதி செய்தது.
சினிமா
திட்டமிட்டபடி வெளியாகும் ‘அவதார் 3’ திரைப்படம்.. படக்குழு அறிவிப்பு
’அவதார் 3’ திரைப்படம் திட்டமிட்டபடி டிசம்பர் 19-ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு உறுதிப்படுத்தியுள்ளது.