ஐ.பி.எல் 2025 டி20 கிரிக்கெட் தொடர் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 10 அணிகள் பங்கேற்கும் இந்த ஐபிஎல் தொடர் இந்தியா முழுவதும் உள்ள முக்கிய மைதானங்களில் 16-வது லீக் போட்டி ஏக்னா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற மும்பை பணி பவுலிங்கை தேர்வு செய்தது.
ப்ளேயிங் லெவன் வீரர்கள்
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்: ஐடன் மார்க்ரம், மிட்செல் மார்ஷ், நிக்கோலஸ் பூரன், ரிஷப் பண்ட் (கேப்டன்/வி. கீப்பர்), ஆயுஷ் படோனி, டேவிட் மில்லர், அப்துல் சமத், ஷர்துல் தாக்கூர், திக்வேஷ் சிங் ரதி, ஆகாஷ் தீப், அவேஷ் கான்.
மும்பை இந்தியன்ஸ்:
வில் ஜாக்ஸ், ரியான் ரிக்கல்டன் (விக்கெட் கீப்பர்) , சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா (கேப்டன்), நமன் திர், ராஜ் பாவா, மிட்செல் சான்ட்னர், டிரென்ட் போல்ட், அஷ்வனி குமார், தீபக் சாஹர், விக்னேஷ் புதூர்.
நேருக்கு நேர்
ஐ.பி.எல் தொடரில் இதுவரை லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய இரண்டு அணிகளும் 6 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. அதிகபட்சமாக 6 போட்டிகளில் 5-ல் லக்னோவும், 1 போட்டியில் மும்பை அணியும் வெற்றிபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
களமிறங்காத ரோகித்
இன்றையப்போட்டியில் முழங்காலில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக ரோகித் ஷர்மா களமிறங்கவில்லை என்று கேப்டன் ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார். கொல்கத்தா அணியுடனான போட்டியில், ரோகித் ஷர்மா இம்பேக்ட் ப்ளேயராக களமிறங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
விளையாட்டு
MI vs LSG: டாஸ்வென்ற மும்பை பவுலிங் தேர்வு.. காயத்தினால் களமிறங்காத ரோகித்!
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் லக்னோ-மும்பை அணிகள் மோதுகின்றன. நடப்பு தொடரில் மூன்று போட்டியில் விளையாடியுள்ள லக்னோ மற்றும் மும்பை ஆகிய இரண்டு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றிபெற்ற நிலையில், இந்தப்போட்டி முக்கியமான போட்டியாக கருதப்படுகிறது.