தமிழக கேரள எல்லையில் அமைந்துள்ளது மங்கலதேவி கண்ணகி கோவிலில் ஆண்டு தோறும் சித்ரா பௌர்ணமி அன்று மங்கலதேவி கண்ணகி கோவில் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த திருவிழாவிற்கு இரண்டு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பார்கள் என்பதால், அதற்கான முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
சித்திரை முழு நிலவு விழா
கண்ணகி கோவிலுக்கு செல்வதற்கு தமிழக பகுதயான பளியன்குடி வழியாக மலைப்பாதையில் 6 கிமீ தொலைவு நடைபயணமாக செல்லவேண்டும். கேரள வழியாக குமுளியில் இருந்து ஜீப் மூலம் 12 கிமீ பயணம் செய்யவேண்டும். தமிழகம் மற்றும் கேரளத்தின் பல்வேறு பகுதியில் இருந்து பல்லாயிரக்கண்கான பக்தர்கள் கலந்துகொள்ளும் இத்திருவிழா ஏற்பாடுகளை தமிழக மற்றும் கேரள அதிகாரிகளால் இணைந்து நடத்தப்படுவது வழக்கமாக உள்ளது.
ஆலோசனை கூட்டம்
இந்த வருடம் மே மாதம் 12 ஆம் தேதி திருவிழா நடைபெறுவதை தொடர்ந்து, கேரள மாநிலம் இடுக்கி மாவட்ட ஆட்சியர் விக்னேஸ்வரி மற்றும் தேனி மாவட்ட ஆட்சியர் ரஞ்சித் சிங் ஆகியோர் தலைமையில் சித்திரை முழுநிலவு திருவிழாவிற்கான ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம், கேரள மாநிலம் தேக்கடியில் உள்ள ராஜீவ் காந்தி அரங்கத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் காவல்துறை கண்காணிப்பாளர்கள், கண்ணகி அறக்கட்டளை நிர்வாகிகள்,
இடுக்கி மற்றும் தேனிமாவட்டத்தை சேர்ந்த வருவாய் அலுவலர்கள், காவல் கண்காணிப்பாளர், வன அலுவலர்கள், போக்குவரத்துதுறை, உள்ளிட்ட இரு மாநில அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.
பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை
கண்ணகி கோவில் பகுதி அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ளது. இதன் காரணமாக வனவளம் பாதிக்காதவாறு பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு செல்ல தடை செய்யப்பட்டுள்ளது. பக்தர்களுக்கு தண்ணீர்,சாலை வசதி கழிப்பிட வசதிகள் மற்றும் மலைப்பாதையில் ஏரிவரும் பக்தர்களுக்கு மருத்துவம்,சாப்பாடு உள்ளிட்ட அனைத்து வசதிகள் மற்றும் பாதுகாப்பு, பஸ் வசதிகள் செய்வது குறித்தும் விவாதிக்கப்பட்டு அனைத்து வசதிகள் செய்ய மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ஏற்பாடு செய்வது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
இக்கூட்டத்தில் கண்ணகி அறக்கட்டளை சார்பாக கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு அதிகப்படியான உணவு ஏற்பாடு செய்ய வேண்டும் கோவிலுக்கு செல்லும் ஜீப் களுக்கு வழங்கப்படும் அனுமதிச் சீட்டினை அதிகப்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. தொடர்ந்து இரு மாநில அதிகாரிகளும் சித்ரா பவுர்ணமி திருவிழா குறித்து ஆலோசனை மேற்கொண்டனர் .
மாவட்ட ஆட்சியர்கள்
பின் செய்தியாளர்களிடம் தேனி மாவட்ட ஆட்சியர் ரஞ்சித்சிங் மற்றும் இடுக்கி மாவட்ட ஆட்சியர் விக்னேஸ்வரி ஆகியோர் தேக்கடியில் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய அவர்கள், சித்ரா பௌர்ணமி அன்று கண்ணகி கோவிலில் நடைபெறும் திருவிழாவினை பாதுகாப்பான முறையில் சிறப்பாக நடத்தித் தர வேண்டும் என இரு மாநில அதிகாரிகள் இணைந்து இக்கோட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு குடிநீர் உணவு சுகாதார வசதிகள் உள்ளிட்டவை செய்து தருவதற்கு அதிகாரிகள் அனைவரும் ஒத்துழைத்து சீரிய முறையில் ஏற்பாடுகள் செய்ய வேண்டும் எனவும் பக்தர்கள் வனப்பகுதிக்குள் வந்து செல்லும் வகையில் இந்த கோவில் அமைந்துள்ளதால் பக்தர்கள் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை உள்ளே கொண்டு செல்லக்கூடாது. வனவிலங்குகளிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அதே நேரத்தில் வனவிலங்குகளுக்கு தொந்தரவு ஏற்படாத வகையில் நடந்து கொள்வது உள்ளிட்டவைகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
தமிழ்நாடு
கண்ணகி கோவில் சித்திரை முழு நிலவு விழா.. 2 மாநில மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் ஆலோசனை!
கேரள மாநிலம் தேக்கடியில், கண்ணகிகோவில் சித்திரை முழு நிலவு விழாவிற்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது . இதில் தேனி மாவட்ட ஆட்சியர் மற்றும் இடுக்கி மாவட்ட ஆட்சியர் பங்கேற்றனர்.