ஐபிஎல் 2025

CSK vs DC: தொடர் தோல்வியிலிருந்து மீளுமா சென்னை? டெல்லியுடன் இன்று மோதல்!

ஐபிஎல் 2025 டி20 கிரிக்கெட் தொடரின் இன்றையப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதுகின்றன. தொடர் தோல்விகளுக்கு பிறகு சிஎஸ்கே அணி டெல்லி அணியை எதிர்கொள்கிறது.

CSK vs DC: தொடர் தோல்வியிலிருந்து மீளுமா சென்னை? டெல்லியுடன் இன்று மோதல்!
டெல்லி கேப்பிடல்ஸ் - சென்னை சூப்பர்கிங்ஸ்

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் 10 அணிகள் பங்கேற்று இந்தியாவில் உள்ள முக்கிய மைதானங்களில் போட்டிகள் நடைபெற்று வருகிறது. நடப்பு தொடரின் முதல் போட்டி மார்ச் 22 ஆம் தேதி கொல்கத்தாவில் கோலாகலமாக தொடங்கியது. விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் இன்று 17-வது லீக் போட்டி நடைபெற உள்ளது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

தொடர் தோல்வியில் சிஎஸ்கே

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மும்பை அணியுடனான முதல் போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. அதன் பிறகு சென்னையில் நடைபெற்ற போட்டியில், ஆர்சிபி அணியுடனான போட்டியில் 50 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. பின்னர் கவுகாத்தியில் நடைபெற்ற ராஜஸ்தான் அணியுடனான போட்டியில் 6 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி தோல்வியை தழுவியது. அதனால், இன்றையப் போட்டியில் டெல்லி அணியுடனான போட்டியில் வெற்றிபெற வேண்டும் என்ற கட்டாயத்தில் சென்னை அணி உள்ளது.

அதிரடி காட்டும் டெல்லி

அக்‌ஷர் பட்டேல் தலைமையிலான டெல்லி அணி, நடப்பு தொடரில் 2 போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில், இரண்டிலும் வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளது. பேட்டிங் மற்றும் பவுலிங் இரண்டிலும் சமபலம் வாய்ந்த டெல்லி அணி இன்றையப்போட்டியில் சென்னை அணியை அதன் சொந்த மண்ணில் எதிர்கொள்கிறது.

நேருக்கு நேர்

ஐபிஎல் தொடரில் இதுவரை சிஎஸ்கே மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் இதுவரை 30 போட்டிகளில் விளையாடியுள்ளது. அதில் சென்னை 19 போடிகளிலும், டெல்லி 11 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. 2010 ஆம் ஆண்டிற்கு பிறகு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் டெல்லி அணி வெற்றிபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், கடந்த போட்டியில் 17 வருடத்திற்கு பிறகு ஆர்சிபி அணி சேப்பாக்கத்தில் வெற்றிப்பெற்ற நிலையில், இப்போட்டி சென்னை மற்றும் டெல்லி ரசிகர்களிடையே மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.