சினிமா

பெண் குழந்தைக்கு தந்தையான ரெடின் கிங்ஸ்லி... பிரபலங்கள் வாழ்த்து!

தமிழ் திரையுலகில் காமெடி நடிகராக வலம் வரும் ரெடின் கிங்ஸ்லி மற்றும் நடிகை சங்கீதா ஜோடிக்கு அழகிய பெண்குழந்தை பிறந்துள்ளது. பெண்குழந்தை பிறந்ததை இருவரும் சமுக வலைதளம் மூலம் பகிர்ந்து தங்களது மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளனர்.

பெண் குழந்தைக்கு தந்தையான ரெடின் கிங்ஸ்லி... பிரபலங்கள் வாழ்த்து!
பெண் குழந்தைக்கு தந்தையான ரெடின் கிங்ஸ்லி... பிரபலங்கள் வாழ்த்து!

இயக்குனர் நெல்சன் திலிப்குமார் இயக்கிய கோலமாவு கோகிலா திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையிலகில் நடிகராக அறிமுகமானார். இதனைத்தொடர்ந்து டாக்டர், பீஸ்ட், ஜெயிலர் என நெல்சன் இயக்கத்தில் வெளிவந்த அடுத்தடுத்த திரைப்படங்களில் நடித்து தற்போது தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வருகிறார்.

இவர் கடந்த 2023 ஆம் ஆண்டு சீரியல் நடிகை சங்கீதாவை இவர் திருமணம் செய்து கொண்டார். ஹைதராபாத்தில் உள்ள ஒரு கோவிலில் எளிமையான முறையில் அவர்கள் திருமணம் நடைபெற்றது. இதையடுத்து கர்ப்பமான சங்கீதா தான் நடித்து வந்த சீரியலில் இருந்து வெளியேறினார். சமீபத்தில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அவருக்கு பிரமாண்டமாக வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சினிமா, சின்னத்திரை நடிகர், நடிகைகள் ஏராளமானோர் கலந்துகொண்டு அவர்களை வாழ்த்தினர்.

தற்போது இந்த தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாக சங்கீதா மற்றும் ரெடின் கிங்ஸ்லி இருவரும் பெண் குழந்தை பிறந்துள்ளதை பகிர்ந்துள்ளனர். அந்த பதிவில், அனைவரது வாழ்த்துகளுடன் எங்களுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாக கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.