Today Rasi Palan : இன்றைய ராசிபலன் ஆகஸ்ட் 16 - வரலட்சுமியின் அருளால் கோடீஸ்வர யோகம் யாருக்கு?

Today Rasi Palan Predictions in Tamil : சுக்கிர பகவானின் அருள் நிறைந்த வெள்ளிக்கிழமையான இன்றைய தினம் சந்திரன் தனுசு ராசியில் பயணம் செய்கிறார். சந்திரன் பயணத்தாலும் பார்வையாலும் எந்த ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டம் யாரெல்லாம் கவனமாக இருக்க வேண்டும் என்று பார்க்கலாம்.

Aug 16, 2024 - 05:30
Aug 16, 2024 - 10:16
 0
Today Rasi Palan : இன்றைய ராசிபலன் ஆகஸ்ட் 16 - வரலட்சுமியின் அருளால் கோடீஸ்வர யோகம் யாருக்கு?
Today Rasi Palan Predictions in Tamil


Today Rasi Palan Predictions in Tamil : நிகழும் மங்களகரமான குரோதி வருடம் ஆடி மாதம் 31ஆம் நாள் ஆகஸ்ட் 16ஆம் தேதி வெள்ளிக்கிழமை ஏகாதசி திதி காலை  09.40 மணி வரை அதன் பின் துவாததி. மூலம்  நட்சத்திரம் பகல் 12.43 மணி வரை அதன் பின் பூராடம் நட்சத்திரம். சந்திரன் பயணத்தால் மேஷம் மீனம் வரை 12 ராசிகளில் பிறந்தவர்களுக்கு என்ன பலன்(Rasi Palan) கிடைக்கும் என்று பார்க்கலாம். கடைசி ஆடி கடைசி வெள்ளிக்கிழமையான இன்றைக்கு வரலட்சுமி விரதம்(Varalakshmi Viratham). சந்திராஷ்டமம் யாருக்கு ? கவனமாக இருக்க வேண்டியது யார் என்று பார்க்கலாம். 


மேஷம் ராசிபலன் :

சந்திரன் உங்க ராசிக்கு ஒன்பதம் வீட்டில் பயணம் செய்கிறார். கடந்த இரண்டு நாட்களாக இருந்த பிரச்சினைகள் நீங்கும். இன்று பணவரவு நன்றாக  இருக்கும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் இருந்த பிரச்சினைகள் நீங்கும். உறவினர்கள் வருகையால் வீட்டில் சுபநிகழ்ச்சிகள் நடைபெறும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். தெய்வ வழிபாடு நல்லது.

ரிஷபம் ராசிபலன் :

சந்திரன் உங்க ராசிக்கு எட்டாம் வீட்டில் இருப்பதால் இன்று உங்களுக்கு தேவையில்லாத மனக்கவலைகள் தோன்றும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் பிறரை நம்பி எந்த வேலையும் கொடுக்காமல் இருப்பது உத்தமம். உத்தியோகத்தில் கவனம் தேவை. சுபமுயற்சிகளை தவிர்க்கவும். வாகனத்தில் செல்லும் போது நிதானம் தேவை.

மிதுனம் ராசிபலன் :

சந்திரன் ஏழாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று குடும்பத்தில் எதிர்பாராத திடீர் தனவரவு உண்டாகும். சுபகாரிய முயற்சிகளில் இருந்த இடையூறுகள் நீங்கும். பெற்றோரின் அன்பையும் ஆதரவையும் பெறுவீர்கள். உடல்நிலை சீராகும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். கொடுத்த கடன்கள் வசூலாகும்.

கடகம் ராசிபலன் :

சந்திரன் ஆறாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று நல்ல செய்திகள் வீடு தேடி வரும். பிள்ளைகள் தம் பொறுப்பறிந்து செயல்படுவார்கள். வேலை செய்யும் இடத்தில் உற்சாகம் அதிகரிக்கும். உயரதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். பூர்வீக சொத்துகளால் நல்ல லாபம் கிடைக்கும். ஆலய தரிசனம் மன அமைதியை தரும். 

சிம்மம் ராசிபலன் :

சந்திரன் இன்றைய தினம் ஐந்தாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று ஆனந்தமான செய்திகள் வீடு தேடி வரும். திருமண சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பிள்ளைகள் அன்புடன் நடந்து கொள்வார்கள். தொழில் ரீதியாக அரசு வழி உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் அதிகமாகும். வீட்டிற்குத் தேவையான புதிய பொருட்கள் வாங்குவீர்கள்.

கன்னி ராசிபலன் :

சந்திரன் இன்றைய தினம் நான்காம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் உண்டாகலாம். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது. நண்பர்களுடன் வீண் வாக்குவாதங்கள் தோன்றும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. தொழிலில் கூட்டாளிகளின் ஆலோசனைகளால் முன்னேற்றம் உண்டாகும்.  

துலாம் ராசிபலன் :

சந்திரன் இன்றைய தினம் மூன்றாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உங்கள் திறமைகளை வெளிபடுத்தும் நாளாக அமையும். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவீர்கள். சுபகாரிய முயற்சிகள் அனைத்திற்கும் நற்பலன் கிடைக்கும். உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் தேடி வரும். வியாபாரத்தில் லாபம் பெருகும். எதிர்பார்த்த உதவிகள் வீடு தேடி வரும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். 

விருச்சிகம் ராசிபலன் :

சந்திரன் இன்றைய தினம் இரண்டாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று குடும்பத்தில் பணவரவு சுமாராக இருக்கும். உத்தியோகத்தில் வேலைபளு அதிகரிக்கும். உறவினர்களால் வீண் செலவுகள் அதிகமாகும். எந்த ஒரு செயலிலும் பொறுமையை கடைபிடிப்பது நல்லது. வியாபாரத்தில் செய்யும் முதலீடுகளால் இரட்டிப்பு லாபம் ஏற்படும். கொடுத்த கடன்கள் வசூலாகும். பணவரவு அபரிமிதமாக இருக்கும். 

தனுசு ராசிபலன் :

சந்திரன் இன்றைய தினம் உங்க ராசியில் பயணம் செய்கிறார். இன்று தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்ற நிலை காணப்படும். குடும்பத்தில் பிள்ளைகளால் சுப செலவுகள் ஏற்படும். பணவரவு தாராளமாக இருப்பதால் வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். உடன் பிறந்தவர்கள் சாதகமாக இருப்பார்கள். உத்தியோகத்தில் இருந்த போட்டி பொறாமைகள் நீங்கும்.

மகரம் ராசிபலன் :

சந்திரன் இன்றைய தினம் உங்க ராசிக்கு விரைய ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்று குடும்பத்தில் பொருளாதார நெருக்கடிகள் ஏற்படலாம். உறவினர்கள் மூலம் வீண் பிரச்சினைகள் வரும் பேச்சில் கவனம் தேவை. எடுக்கும் முயற்சிகளில் சிறு தடங்கலுக்குப் பின் வெற்றி கிடைக்கும். பயணங்களால் அனுகூலப் பலன்கள் ஏற்படும். ஆலய வழிபாடு மன அமைதியை தரும்.

கும்பம் ராசிபலன் :

சந்திரன் இன்றைய தினம் உங்க ராசிக்கு லாப ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்று நீங்கள் எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். வெளியூர் பயணம் செல்ல நேரிடும். ஆடை, ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் அதிகமாகும். உத்தியோகஸ்தர்களுக்கு உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்கும். சுபகாரியங்கள் கைகூடி வரும். வியாபாரத்தில் புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும்.

மீனம் ராசிபலன் :

சந்திரன் இன்றைய தினம் உங்க ராசிக்கு பத்தாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று நீங்கள் செய்யும் புதிய முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். வேலை செய்யும் இடத்தில் புரமோசன் கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பங்குச்சந்தை முதலீடுகளால் லாபம் வரும். குடும்பத்தில் சந்தோஷம் உருவாகும். சகோதர சகோதரிகளின் ஒற்றுமை அதிகரிக்கும். உறவினர்களிடம் சுமூக உறவு உண்டாகும். பிள்ளைகளின் மூலம் சந்தோஷ செய்திகள் தேடி வரும்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow