Varalakshmi Viratham 2024 : வரலட்சுமி விரதம் இருந்தால் வீடெங்கும் செல்வம் பெருகும்.. அஷ்ட லட்சுமிகளின் அருள் கிடைக்கும்!

Varalakshmi Viratham 2024 : நாம் செய்யும் பாவ, புண்ணியத்துக்கு ஏற்பவே லட்சுமி நமக்கு செல்வத்தை வழங்குவாள். மகாலட்சுமி நித்திய சுமங்கலி என்று அழைக்கப்படுகிறாள். எனவே தான் அவளை நினைத்து பெண்கள் வரலட்சுமி விரதம்(Varalakshmi Viratham) மேற்கொள்கிறார்கள்.

Aug 14, 2024 - 05:59
Aug 15, 2024 - 09:59
 0
Varalakshmi Viratham 2024 : வரலட்சுமி விரதம் இருந்தால் வீடெங்கும் செல்வம் பெருகும்.. அஷ்ட லட்சுமிகளின் அருள் கிடைக்கும்!
varalakshmi viratham importance

Varalakshmi Viratham 2024 : திருமகளான லட்சுமி நம் இல்லத்திற்கு எழுந்தருளி கொலுவிருப்பதால் வரலட்சுமி பண்டிகை கொண்டாடுகிறோம்.  ஆவணி மாதம் பௌர்ணமி நாளுக்கு முந்தையதாக வரும் வெள்ளிக் கிழமையில் தான் இவ்விரத பூஜை அனுசரிக்கப்படுகிறது. ஆவணி மாதம் பௌர்ணமி அமைவதைப் பொறுத்து ஆடியிலோ ஆவணியிலோ கொண்டாட்டப் படுகிறது.

வரலட்சுமி விரதம் எப்போது?

வரலட்சுமி விரதம்(Varalakshmi Viratham) இருக்கும் பெண்களிடம் அஷ்ட லட்சுமிகளும் மகிழ்ந்து அன்புடன் இருப்பார்கள் என்பது ஐதீகம். கணவர் மகாவிஷ்ணுவின் மார்பில் பொறுமையுடன் இருப்பவள் அன்னை மகாலட்சுமி. அன்னை மகாலட்சுமியின் அருள் கிடைக்க வேண்டும் என்றும் கணவனின் ஆயுள் பலம் அதிகரிக்கவும் பெண்கள் விரதமம் இருந்து மகாலட்சுமியை வணங்குகின்றனர். இந்த ஆண்டு நாளை மறுநாள் ஆடி 31ஆம் நாள் ஆகஸ்டு 16ஆம் தேதி வெள்ளிக்கிழமை வரலட்சுமி விரதம் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.  

வரலட்சுமி விரதம் வழிபாடு:

வெள்ளிக்கிழமை வரலட்சுமி விரதம்(Varalakshmi Viratham) என்றால் முதல் நாளான வியாழக்கிழமை அம்மனை அழைக்கிறோம். பூஜை செய்யப் போகுமிடத்தில் இழை கோலம் போட்டு காவியிட்டு ஒரு தட்டில் அட்சதையைப் பரப்பி அம்மனை ஆவாஹனம் செய்யப் போகும் கலசத்தை அதன் மீது வைக்க வேண்டும். கலசத்தினுள் அட்சதையுடன் வெற்றிலை பாக்கு, மஞ்சள் ஒரு வெள்ளிக் காசு மற்றும் ஒரு எலுமிச்சைப் பழமும் வைத்து மாவிலையைக் கலசத்தின் மீது வைத்து அதன் மீது தேங்காயை வைக்கிறோம். அம்மனின் முகத்தைக் கலசத்தோடு இணைத்து வைத்து விளக்கேற்றி வெண்பொங்கல் நிவேதனம் செய்கிறோம். அம்மனை அழைப்பதாக உள்ள பாடல்கள் பாடி வரலட்சுமி அம்மனை வரவற்கிறோம். 

மகாலட்சுமியை வரவேற்போம்:

வரலட்சுமி விரத பூஜை(Varalakshmi Viratham Poojai) செய்தால் உடனடியாக திருமண யோகம் கைகூடும். லட்சுமி பூஜை செய்யும் போது, நம் வீட்டுக்கு வரும் விருந்தினர்களை நாம் எப்படி உற்சாகமாக வரவேற்போமோ, அதே மாதிரி வாசலில் நின்று லட்சுமியை பாவனை செய்து அழைக்க வேண்டும். வரலட்சுமி விரத பூஜை நடத்தப்படும் வீடுகளில் மகாலட்சுமி வாசம் செய்வாள். லட்சுமி வழிபாட்டால் நீண்ட ஆயுள், புகழ், செல்வம், உடல் நலம் உண்டாகும்.

மாங்கல்ய வரம் வரலட்சுமி விரதம்:

எட்டு விதச் செல்வங்களை தருவதுடன் தாலிப் பாக்கியத்தையும் வரலட்சுமி வழங்குகிறாள். இதனால் தான் மணமான பெண்கள் மகாலட்சுமியை போற்ற வரலட்சுமி விரதத்தை(Varalakshmi Viratham 2024) மேற்கொள்ளுகின்றனர். திருமணத்திற்குப் பிறகு வரும் முதல் வரலட்சுமி விரதத்தன்று புதுமணம் முடித்த பெண்ணிற்கு இந்நோன்பு எடுத்து வைக்கப்படும். புகுந்த வீட்டில் இந்நோன்பு அனுசரிக்கும் வழக்கம் உள்ளது.வரலட்சுமி நோன்பை கடைபிடித்தவர்கள் பெரும் பயனை அடைந்தார்கள் என்று பத்ம புராணம் கூறுகிறது. வரலட்சுமி நோன்பு கடைபிடிக்க முடியாதவர்கள் வீடுகளில் லட்சுமி படம் வைத்து வெள்ளிக்கிழமைகளில் தூபம் காட்டி, தீபாராதனை செய்ய வேண்டும். உப்பு பாத்திரத்தில் உப்பு குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இதன் மூலம் விரதம் இருந்து வழிபட்ட பலன் கிடைக்கும். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow