Varalakshmi Viratham 2024 : வரலட்சுமி விரதம்.. மகாலட்சுமியை வழிபட்டால் கல்யாணம் கைகூடும்.. தீர்க்க சுமங்கலி வரம் கிடைக்கும்!

Varalakshmi Viratham 2024 Pooja Vidhi and Time : வரலட்சுமி பூஜைக்கு உங்கள் வீட்டுக்கு வருபவர்களுக்கு உங்கள் சக்திக்கு ஏற்ப தாம்பூலம் கொடுக்கலாம். ஆனால் உங்கள் விருந்தாளிகளிடம் நீங்கள் காட்டும் அன்பே முக்கியமானது. லட்சுமிவிரதம் இருந்து பூஜை செய்பவர்கள், அந்த பூஜைக்கு வரும் சுமங்கலி பெண்களை மகாலட்சுமியாக நினைத்து போற்ற வேண்டும்.

Aug 12, 2024 - 14:42
Aug 13, 2024 - 09:36
 0
Varalakshmi Viratham 2024 : வரலட்சுமி விரதம்.. மகாலட்சுமியை வழிபட்டால்  கல்யாணம் கைகூடும்.. தீர்க்க சுமங்கலி வரம் கிடைக்கும்!
Varalakshmi Viratham 2024 Pooja Vidhi and Time

Varalakshmi Viratham 2024 Pooja Vidhi and Time : ஆவணி மாதத்தில் வரும் பவுர்ணமிக்கு முந்தைய வெள்ளிக்கிழமையில் வரலட்சுமி நோன்பு கடைப்பிடிக்கப்படுகிறது. வரலட்சுமி விரதம் இருந்து அன்னை மகாலட்சுமிய வழிபட்டவர்கள் பெரும் பயனை அடைந்தார்கள் என்று பத்ம புராணம் கூறுகிறது. வரும் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 16) வரலட்சுமி பூஜை கொண்டாடப்பட உள்ள நிலையில் பூஜை செய்ய நல்ல நேரம், வரலட்சுமி பூஜை விதிகளை(Varalakshmi Pooja Vidhi) பார்க்கலாம். 

அன்னை மகாலட்சுமி அனைவருக்கும் நன்மை தருபவள் என்று அதர்வன வேதத்தில் கூறப்பட்டுள்ளது. நாம் செய்யும் பாவ, புண்ணியத்துக்கு ஏற்பவே லட்சுமி நமக்கு செல்வத்தை வழங்குவாள். மகாலட்சுமி நித்திய சுமங்கலி என்றழைக்கப்படுகிறாள். எனவே தான் அவளை நினைத்து பெண்கள் வரலட்சுமி விரதம்(Varalakshmi Viratham) மேற்கொள்கிறார்கள்.

வரலட்சுமியை(Varalakshmi) எந்த அளவுக்கு தாமரை மலர்களால் அலங்கரித்து வழிபாடு செய்கிறோமோ, அந்த அளவுக்கு புண்ணியம் சேரும்.  சிலர் வரலட்சுமியை விதம், விதமான வாகனங்களில் அமரச்செய்து அலங்காரம் செய்வார்கள். வரலட்சுமி பூஜைக்கு உங்கள் வீட்டுக்கு வருபவர்களுக்கு உங்கள் சக்திக்கு ஏற்ப தாம்பூலம் கொடுக்கலாம். ஆனால் உங்கள் விருந்தாளிகளிடம் நீங்கள் காட்டும் அன்பே முக்கியமானது. லட்சுமிவிரதம் இருந்து பூஜை செய்பவர்கள், அந்த பூஜைக்கு வரும் சுமங்கலி பெண்களை மகாலட்சுமியாக நினைத்து போற்ற வேண்டும்.

வரலட்சுமி பூஜைக்கு(Varalakshmi Pooja) பயன்படுத்தும் சொம்பு தாமிரச்சொம்பு அல்லது வெள்ளிச் சொம்பாக இருக்கலாம். வெள்ளிக்கிழமை காலையில் 10.30 மணி முதல் 12 மணி வரை ராகுகாலம் இருப்பதால், அதற்குள் பூஜையை தொடங்கிவிட வேண்டும். ராகுகாலத்துக்கு முன்பாக கலசத்தை மங்கல வாத்தியங்களுடன் வாசலில் இருந்து அலங்கார மண்டபத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டும். 

வரலட்சுமி பூஜை(Varalakshmi Pooja) செய்வதற்கு முன்பாக, விநாயகர் பூஜை செய்ய வேண்டும். நாம் தொடங்கும் வரலட்சுமி பூஜை தடையின்றி நடைபெற இந்த வழிபாடு அவசியம். அதன்பிறகே வரலட்சுமியை பூஜை செய்து வணங்க வேண்டும். மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வைத்து சந்தனம், குங்குமம் இட்டு விநாயகர் பூஜையை முதலில் செய்ய வேண்டும். அம்பாள் முன்பு மஞ்சள் நூலில் ஏதாவது ஒரு பூவைக்கட்டி வைக்க வேண்டும். வெற்றிலை, பாக்கு, பழங்கள் என்று வைக்க வேண்டும். சாமந்தி, இருவாட்சி, மல்லிகை, முல்லை, மல்லி, அல்லி, தாமரை, அரளி, சண்பகம், தாழம்பூ என்று எல்லாவகை பூக்களை வைத்தும் பூஜை செய்யலாம்.

வரலட்சுமி பூஜையில்((Varalakshmi Pooja)) மஞ்சள் தடவிய நூல்களில் 9 முடிச்சுகள் போட்டு மஞ்சள் கயிற்றை தயார் செய்ய வேண்டும். இதில் உள்ள ஒன்பது முடிச்சுகளும் அஷ்டலட்சுமிகளையும், வரலட்சுமியையும் குறிக்கும். அந்த கயிறை பூஜையில் வைத்து பூஜிக்க வேண்டும். அஷ்டோத்திர மந்திரங்களை சொல்லி பூஜை போட்டு பூஜை செய்ய வேண்டும். பூஜை முடிந்ததும் தேங்காய் உடைத்து வைக்க வேண்டும். பால், தயிர், சர்க்கரை பொங்கல், தேங்காய் பூரணம் அடைக்கப்பட்ட கொழுக்கட்டைகள், இட்லி, மகாநைவேத்தியம் இவைகளை நைவேத்யம் செய்ய வேண்டும்.

பூஜை முடிந்ததும் வலது கையில் நோன்புக்கயிறை அணிய வேண்டும். வீட்டில் பூஜை செய்யும் சுமங்கலி பெண்களும், திருமணமாகாத பெண்களும், பூஜை முடிந்தவுடன் வரலட்சுமி தேவிக்கு சமர்ப்பித்திருந்த ஒன்பது முடிச்சுகளிட்ட கயிற்றை, 'நவதந்து ஸமாயுக்தம் நவக்ரந்தி ஸமன்விதம் பத்னீயாம் தட்சிணே ஹஸ்தே தோரகம் ஸரிவல்லபே' என்ற மந்திரத்தை உச்சரித்து வலது கையில் கட்டிக்கொள்ள வேண்டும்.

வரலட்சுமி நோன்பை(Varalakshmi Nombu 2024) கடைபிடித்தவர்கள் பெரும் பயனை அடைந்தார்கள் என்று பத்ம புராணம் கூறுகிறது. வரலட்சுமி விரத பூஜை செய்தால் உடனடியாக திருமண யோகம் கைகூடும்.  எட்டு விதச் செல்வங்களை தருவதுடன் தாலிப் பாக்கியத்தையும் வரலட்சுமி வழங்குகிறாள். இதனால் தான் மணமான பெண்கள் இத்தினத்தில் மகாலட்சுமியை போற்ற இவ்விரதத்தை மேற்கொள்ளுகின்றனர்.

வரலட்சுமி விரதம்(Varalakshmi Viratham) இருக்கும் பெண்களிடம் அஷ்ட லட்சுமிகளும் மகிழ்ந்து அன்புடன் இருப்பார்கள் என்பது ஐதீகம். வரலட்சுமி விரதம் இருக்கும் பெண்களுக்கு மாங்கல்ய பலம் நீடிப்பதோடு செல்வம், தைரியம், வெற்றி, அரசு பதவி, குழந்தைப் பேறு,கல்வி உள்ளிட்ட எல்லா வளங்களும் வந்து சேரும். இந்த விரதத்தை அனுஷ்டிக்கும் பெண்மணிகள் இவ்வுலகில் சகல போகங்களை அனுபவித்து பின் வைகுந்தம் சேருவார்கள்.

வரலட்சுமி பூஜைக்கு பயன்படுத்தும் கும்பத்தை பிறகு பத்திரப்படுத்தி, சுத்தமான இடத்தில் வைத்துக் கொள்ளலாம். வேறு பூஜைகள் நடத்தும் போது அதை பயன் படுத்தலாம். வரலட்சுமி பூஜைக்கு பயன்படுத்தும் கும்பம் எதிர்பாராத விதமாக நெளிந்து விட்டாலோ, சேதம் அடைந்து விட்டாலோ, வீட்டில் வைத்துக் கொள்ளக்கூடாது. தானமாக கொடுத்து விட வேண்டும். வரலட்சுமி பூஜைக்குப் பயன்படுத்திய பச்சரிசி, தேங்காய் கொண்டு அடுத்த வெள்ளிக்கிழமை பாயசம் செய்து நைவேத்தியம் செய்யலாம்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow