New Municipal Corporations : உதயமானது 4 புதிய மாநகராட்சிகள்.. திட்டப் பணிகளுக்கு முதலமைச்சர் அடிக்கல்..

Chief Minister MK Stalin Foundation Stone of New Municipal Corporations in Tamil Nadu : புதுக்கோட்டை, திருவண்ணாமலை, நாமக்கல், காரைக்குடி ஆகிய 4 புதிய மாநகராட்சிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

Aug 12, 2024 - 19:39
Aug 13, 2024 - 15:06
 0
New Municipal Corporations : உதயமானது 4 புதிய மாநகராட்சிகள்.. திட்டப் பணிகளுக்கு முதலமைச்சர் அடிக்கல்..
மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட்ட 4 நகராட்சிகள்

Chief Minister MK Stalin Foundation Stone of New Municipal Corporations in Tamil Nadu : அமைச்சர் கே.என்.நேரு புதுக்கோட்டை, திருவண்ணாமலை, நாமக்கல், காரைக்குடி ஆகிய நகராட்சிகள், மாநகராட்சிகளாக உருவாக்கப்படும் என்று சட்டசபையில் கடந்த மார்ச் அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பினை செயல்படுத்துவது தொடர்பாக உரிய பரிசீலனைகள் மேற்கொள்ளப்பட்டதன் அடிப்படையில் 4 புதிய மாநகராட்சிகளை உருவாக்கும் நடைமுறைகளை தொடங்கிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டு இருந்தார்.

அதன்படி புதுக்கோட்டை(Pudukkottai) நகராட்சி மற்றும் 11 ஊராட்சிகளை ஒன்றிணைத்து புதுக்கோட்டை மாநகராட்சியும், திருவண்ணாமலை(Thiruvannamalai) நகராட்சி மற்றும் 18 ஊராட்சிகள், அடி அண்ணாமலையில் உள்ள பகுதிகளை ஒன்றிணைத்து திருவண்ணாமலை மாநகராட்சியும், நாமக்கல்(Namakkal) நகராட்சி மற்றும் 12 ஊராட்சிகளை இணைத்து நாமக்கல் மாநகராட்சியும், காரைக்குடி நகராட்சி மற்றும் 2 பேரூராட்சி, 5 ஊராட்சிகளை இணைத்து காரைக்குடி(Karaikudi) மாநகராட்சியும் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த 4 புதிய மாநகராட்சிகளையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் காணொலி காட்சியின் வாயிலாக இன்று தொடங்கி வைத்தார். இதன்மூலம் தமிழகத்தில் மாநகராட்சிகளின் எண்ணிக்கை 25ஆக அதிகரித்துள்ளது.

மாநகராட்சிகளாக அறிவிக்கப்பட்டதன் மூலம் புதுக்கோட்டை, நாமக்கல், திருவண்ணாமலை, காரைக்குடி அருகே அமைந்துள்ள உள்ளாட்சி பகுதிகளில் பெருநகரங்களுக்கு இணையான சாலைகள், பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு மேம்பாடு அடையும்.

அது மட்டுமின்றி இப்பகுதிகளுக்கு வந்து செல்வோர், சுற்றுலா பயணிகள், வணிக நிறுவனங்கள் தொழில் நடத்துபவர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் பயன்பெறும் வகையில் வாழ்க்கைத் தரம் மற்றும் பொருளாதார வளர்ச்சி ஏற்படவும் வாய்ப்பாக அமையும் என்று கருதப்படுகிறது. மாநகராட்சியாக தரம் உயர்த்துவதன் மூலம் அப்பகுதியில் செயல்படுத்தப்பட உள்ள திட்டங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல்துறை சார்பில் ரூ.800 கோடி மதிப்பிலான திட்டப்பணிகள் இன்று தொடங்கப்பட உள்ளது. ரூ.800 கோடியில் முடிவுற்ற திட்டப்பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்(Chief Minister MK Stalin) இன்று தொடங்கி வைத்தார். தவிர, ரூ.1192 கோடி மதிப்பிலான புதிய திட்டப்பணிகளுக்கும் முதலமைச்சர் இன்று அடிக்கல் நாட்டினார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow