Today Horoscope: இன்றைய ராசிபலன் ஆகஸ்ட் 13 - சந்திராஷ்டமத்தால் சங்கடம் யாருக்கு?

Today Horoscope Predictions in Tamil: செவ்வாய் பகவானின் அருள் நிறைந்த செவ்வாய்கிழமையான இன்றைய தினம் சந்திரன் விருச்சிகம் ராசியில் பயணம் செய்கிறார். சந்திரன் பயணத்தாலும் பார்வையாலும் எந்த ராசிக்காரர்களுக்கு என்ன பலன் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

Aug 13, 2024 - 05:00
 0
Today Horoscope: இன்றைய ராசிபலன் ஆகஸ்ட் 13 - சந்திராஷ்டமத்தால் சங்கடம் யாருக்கு?
today rasi palan 2024

Today Horoscope Predictions in Tamil: நிகழும் மங்களகரமான குரோதி வருடம் ஆடி மாதம் 28ஆம் நாள் ஆகஸ்ட் 13 செவ்வாய்கிழமை அஷ்டமி திதி காலை 09.23 மணி வரை அதன் பின் நவமி திதி விசாகம் நட்சத்திரம் பகல் 10.44 மணி வரை அதன் பின் அனுசம் நட்சத்திரம். சந்திரன் பயணத்தால் மேஷம் மீனம் வரை 12 ராசிகளில் பிறந்தவர்களுக்கு என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம். இன்றைக்கு யாருக்கு சந்திராஷ்டமம் கவனமாக இருக்க வேண்டியது யார் என்று பார்க்கலாம். 

மேஷம்

சந்திரன் இன்றைய தினம் ராசிக்கு எட்டாம் வீட்டில் சஞ்சரிக்கிறார். இன்று உங்கள் ராசிக்கு  சந்திராஷ்டமம் இருப்பதால் எளிதில் முடிய வேண்டிய காரியம் கூட காலதாமதமாகும். பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. இன்று உங்களுக்கு மனக்குழப்பம் ஏற்படும். தேவையற்ற பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். மற்றவர்களிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். புதிய முயற்சிகளை தவிர்ப்பது நல்லது. வியாபார ரீதியான கொடுக்கல் வாங்கலில் கவனம். வியாபாரத்தில் பெரிய முதலீடுகள் வேண்டாம். பயணங்களை தவிர்க்கவும்.

ரிஷபம்

சந்திரன் இன்றைய தினம் உங்க ராசிக்கு ஏழாம் வீட்டில் சஞ்சரிக்கிறார்.  இன்று குடும்பத்தில் உடன் பிறந்தவர்களுடன் ஒற்றுமையாக இருப்பீர்கள். பெற்றோரின் அன்பையும் ஆதரவையும் பெறுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் அனுகூலம் உண்டாகும். எடுத்த காரியத்தையும் பொறுப்புடன் செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். வியாபாரத்தில் ஊழியர்களுடன் சுமூக உறவு உண்டாகும். உடன் பிறந்தவர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.


மிதுனம்

சந்திரன் உங்க ராசிக்கு ஆறாம் வீட்டில் சஞ்சரிக்கிறார். இன்று எந்த காரியத்திலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். குடும்பத்தில் கணவன் மனைவியிடையே சிறு சிறு மன ஸ்தாபங்கள் ஏற்படலாம். விட்டு கொடுத்து செல்வதன் மூலம் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். வியாபாரத்தில் கூட்டாளிகளை அனுசரித்து செல்வதன் மூலம் முன்னேற்றம் ஏற்படும். பணவருமானம் அதிகரிக்கும். இன்று குடும்பத்தில் சுபசெலவுகள் வரும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.  

கடகம்

சந்திரன் உங்க ராசிக்கு ஐந்தாம் வீட்டில் சஞ்சரிக்கிறார். இன்று வியாபாரத்தில் எதிர்பாராத பிரச்சினைகளை சந்திக்க வேண்டி வரும். உறவினர்கள் வழியில் குடும்பத்தில் வீண் செலவுகள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. நண்பர்கள் தேவையறிந்து உதவுவார்கள். பணப்பிரச்சினைகள் குறையும். இன்று தொழிலில் கூட்டாளிகளுடன் மனக்கசப்பு உருவாகும். பேச்சில் விட்டுக்கொடுத்து செல்லவும். 


சிம்மம்

சந்திரன் உங்க ராசிக்கு நான்காம் வீடான சுக ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். பிள்ளைகளால் மனமகிழும் சம்பவங்கள் நடைபெறும். உறவினர்களிடம் இருந்த மனஸ்தாபங்கள் நீங்கும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலப்பலன் கிடைக்கும். இன்று பிள்ளைகளால் இல்லத்தில் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். நண்பர்களின் ஒத்துழைப்பால் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிட்டும். வேலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். ஆலய தரிசனம் மன அமைதியை தரும். 

கன்னி

சந்திரன் உங்க ராசிக்கு மூன்றாம் வீடான முயற்சி ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார்.  இன்று குடும்பத்தில் பொருளாதார நிலை நன்றாக இருக்கும். பேச்சில் நிதானமும் கவனமும் தேவை. உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். கடன் பிரச்சினைகள் ஓரளவு குறையும். இன்று உடன் பிறந்தவர்களிடம் ஒற்றுமை பலப்படும். உத்தியோகத்தில் சிலருக்கு புதிய வாய்ப்புகள் கிட்டும். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் லாபம் பெருகும். சுபகாரியங்கள் கைகூடும். வீட்டு தேவைகள் யாவும் பூர்த்தியாகும். கடன்கள் குறையும்

துலாம்

சந்திரன் உங்க ராசிக்கு இரண்டாம் வீடான குடும்ப ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமண சுபகாரிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வியாபாரத்தில் கூட்டாளிகளை அனுசரித்து சென்றால் லாபம் அடையலாம். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு சற்று குறையும். பிள்ளைகளின் படிப்பில் முன்னேற்றம் ஏற்படும். திறமையாகவும் புத்திசாலித்தனமாகவும் செயல்பட்டால் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.


விருச்சிகம்

சந்திரன் உங்க ராசியில் சஞ்சரிக்கிறார். இன்று நீங்கள் செய்யும் செயல்களில் தடை தாமதங்கள் உண்டாகும். வேலையில் மேலதிகாரிகளால் நெருக்கடிகள் ஏற்படலாம். குடும்பத்தினரிடம் விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சினைகள் சற்று குறையும். வியாபாரம் சம்பந்தமான வெளியூர் பயணங்களால் நன்மைகள் ஏற்படும்.கிடைக்கும். சுபகாரியங்களில் இருந்த மந்த நிலை நீங்கி முன்னேற்றம் ஏற்படும். ஆடம்பர பொருட் சேர்க்கை உண்டாகும். குடும்பத்தில் ஒற்றுமை பலப்படும். பணவரவு சிறப்பாக இருக்கும்.

தனுசு

சந்திரன் விரைய ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் அதிகரிக்கும். திறமைகேற்ப பதவி உயர்வு கிடைக்கும். வியாபார ரீதியாக எதிர்பார்த்த வங்கி கடன் கிடைக்கும். பொருளாதார நிலை சுமாராக இருப்பதால் ஆடம்பர செலவுகளை குறைப்பது நல்லது. உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். 

மகரம்

சந்திரன் உங்க ராசிக்கு லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். இன்று வியாபார ரீதியாக பொருளாதாரம் சிறப்பாக அமையும். எடுக்கும் முயற்சிகள் யாவும் வெற்றியை தரும். பெண்கள் ஆடம்பர பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவார்கள். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். உத்தியோகத்தில் வருமானம் அதிகரிக்கும். புதிய சொத்துக்கள் வாங்க அனுகூலமான நாளாகும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் தேடி வரும். 

கும்பம்

சந்திரன் உங்களுடைய ராசிக்கு தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டில் பயணம் செய்கிறார். வேலை செய்யும் இடத்தில் உற்சாகமாக இருப்பீர்கள். இன்று உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படலாம். சிக்கனமாக செயல்படுவது நல்லது. தொழில் வியாபாரத்தில் சிறுசிறு மாறுதல்கள் செய்தால் லாபத்தை அடைய முடியும். இன்று உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும். வேலையில் எதிர்பார்த்த பதவி உயர்வுகள் கிடைக்கும். 

மீனம்

சந்திரன் உங்க ராசிக்கு பாக்ய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று திட்டமிட்ட காரியத்தை செய்து முடிப்பீர்கள். ஆன்மீக பயணம் செல்வீர்கள். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. சுபமுயற்சிகளில் சாதகமான பலன் ஏற்படும். வீண் செலவுகளால் சேமிப்பு குறையும். நண்பர்களுடன் இருந்த மனக்கசப்பு நீங்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow