Today Horoscope: இன்றைய ராசிபலன் ஆகஸ்ட் 30 - சுக்கிரன் அருளால் சுகம் பெறப்போவது யார்?

Today Horoscope Predictions in Tamil: வெள்ளிக்கிழமையான இன்று சுக்கிர பகவானின் அருள் நிறைந்த நாள். இன்றைய தினம் சந்திரன் மிதுன ராசியிலும் கடக ராசியிலும் பயணம் செய்கிறார். சந்திரன் பயணத்தாலும் பார்வையாலும் எந்த ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் யாரெல்லாம் கவனமாக இருக்க வேண்டும் என்று பார்க்கலாம்.

Aug 30, 2024 - 06:30
Aug 30, 2024 - 16:46
 0
Today Horoscope: இன்றைய ராசிபலன் ஆகஸ்ட் 30 - சுக்கிரன் அருளால் சுகம் பெறப்போவது யார்?
Today Rasi Palan 2024

Today Horoscope Predictions in Tamil: நிகழும் மங்களகரமான குரோதி வருடம் ஆவணி மாதம் 14ஆம் நாள் ஆகஸ்ட் 30ஆம் தேதி வெள்ளிக்கிழமை துவாதசி திதி இரவு 02.26மணி வரை அதன் பின் திரயோதசி திதி. புனர்பூசம் நட்சத்திரம் மாலை 05.56 மணி வரை அதன் பின் பூசம் நட்சத்திரம். சுக்கிரபகவான் அருளினாலும் சந்திரன் பயணத்தாலும் மேஷம் மீனம் வரை 12 ராசிகளில் பிறந்தவர்களுக்கு என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம். 

மேஷம்

இன்று உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படலாம். உடன்பிறந்தவர்களுடன் ஒற்றுமை குறைவு ஏற்படும். வியாபாரத்தில் உள்ள நெருக்கடிகளை சமாளிக்க நீங்கள் பொறுப்புடனும், சிக்கனத்துடனும் நடந்து கொள்வது அவசியம். உற்றார் உறவினர்கள் வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வீடு பராமரிப்பு வேலையை செய்வீர்கள். வீடு நிலம் வாங்குவதற்கான முயற்சிகளில் ஈடுபடலாம். 

ரிஷபம்

இன்று நீங்கள் நினைத்த காரியம் நிறைவேறும். உங்களுக்கு தாராள தன வரவும், குடும்பத்தில் மகிழ்ச்சியும் உண்டாகும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். அரசு துறையில் இருப்பவர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். வியாபாரத்தில் இருந்த போட்டி பொறாமைகள் குறையும். ஆன்மீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும்.

மிதுனம்

இன்று குடும்பத்தில் உள்ளவர்களுடன் ஒற்றுமை நல்லபடியாக இருக்கும். எதிர்பாராத நல்ல செய்தி வரும். சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழில் ரீதியாக வெளியூர் நபர்கள் மூலம் அனுகூலம் கிடைக்கும். பெரிய மனிதர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை தரும். பண வருமானம் அதிகரிக்கும். 

கடகம்

இன்று வேலை செய்யும் இடத்தில் எதிர்பாராத இனிய நிகழ்வு நடைபெறும். குடும்பத்தில் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். எதிர்பார்த்த வங்கி கடன் கிடைப்பதற்கான வாய்ப்பு அமையும். தொழில் ரீதியாக எடுக்கும் புதிய முயற்சிகளுக்கு கூட்டாளிகளின் உதவியும் ஒத்துழைப்பும் கிட்டும். பணத்தை சிக்கனமாக செலவு செய்வது நல்லது. 

சிம்மம்

இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக தான் இருக்கும்.  வியாபாரத்தில் மந்த நிலை ஏற்படும். பூர்வீக சொத்துக்கள் வழியில் அலைச்சலுக்கேற்ப லாபம் கிட்டும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களால் அனுகூலம் உண்டாகும். சுப விரைய செலவுகள் ஏற்படும். 

கன்னி

இன்று நீங்கள் எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடி வரும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும். வேலையில் இருப்பவர்கள்  சிலருக்கு வெளியூர் செல்லும் வாய்ப்புகள் தேடி வரும். வியாபாரத்தில் புதிய கூட்டாளியின் சேர்க்கையால் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

துலாம்

இன்றைய தினம் பொருளாதாரம் நன்றாக இருக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். பிள்ளைகள் சுறுசுறுப்பாக இருப்பார்கள். சொந்த தொழில் செய்பவர்களுக்கு லாபகரமான பலன்கள் இருக்கும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் வெற்றி தரும்.

விருச்சிகம்

இன்று உங்களுடைய குடும்பத்தில் உற்றார் உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெற்றாலும் வீண் செலவுகளும் அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் இருந்த மந்த நிலை நீங்கும். வேலை செய்யும் இடத்தில் பிரச்சினைகள் ஓரளவு குறையும். பெரிய மனிதர்களின் சந்திப்பால் அனுகூலம் உண்டாகும்.

தனுசு

உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் நிதானமாக இருப்பது நல்லது. பணம் சம்பந்தமான கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. இன்று நீங்கள் மனக்குழப்பத்துடன் காணப்படுவீர்கள். பிறரிடம் தேவையில்லாமல் கோபப்படும் சூழ்நிலை உருவாகும். பேச்சை குறைப்பது நல்லது. 

மகரம்

இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பிள்ளைகளின் படிப்பு நன்றாக இருக்கும். சுப காரியங்களுக்கான முயற்சிகள் அனைத்தும் வெற்றியைத் தேடித் தரும். தொழில் ரீதியான பயணங்களால் நன்மைகள் உண்டாகும்.

கும்பம்

இன்று உங்கள் மனதிற்கு புது தெம்பு கிடைக்கும். பெரிய மனிதர்களின் ஆதரவால் வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் ஒற்றுமையாக செயல்படுவார்கள். உறவினர்கள் மூலம் உதவிகள் தேடி வரும். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். பழைய கடன்கள் வசூலாகும்.

மீனம்

இன்று குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் செய்வீர்கள். பிள்ளைகளால் மனகஷ்டங்கள் உண்டாகலாம். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் கிட்டும். உடன் பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். குலதெய்வ வழிபாடு நிம்மதியை தரும்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow