Malayalam Actress Shakeela About Sexual Harassment : கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்பு நடிகை ஒருவர் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் நடிகர் ஒருவரே ஈடுபட்டது தெரிய வந்தது. இது தொடர்பாக பல்சர் சுனில் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து இந்த வழக்கு தற்போது வரை நடந்து வருகிறது. சமீபத்தில் கூட இந்த வழக்கில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்னென்ன என உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பி இருந்தது. அதற்கு பிறகு மலையாள திரையுலகில் பாலியல் வன்கொடுமை சம்பவங்களும் நடிகைகள், நடிகர்கள் இயக்குனர்களின் பாலியல் இச்சைக்கு பயன்படுத்திக் கொள்ளப்பட்டது, மறுத்தவர்கள் திரை உலகில் இருந்தே ஒதுக்கப்பட்டதாக பகீர் புகார் எழுழந்தது.
இதை அடுத்து இது தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய ஹேமா கமிட்டி அமைக்கப்பட்டது. அதில் நடிகைகளும் இடம் பெற்று இருந்தனர். இந்த குழு விசாரணை நடத்தி தனது அறிக்கையை ஐந்தாண்டுகளுக்கு முன்னரே தாக்கல் செய்தது. ஆனால் தற்போது தான் அது வெளிவந்திருக்கிறது. அந்த அறிக்கையில் மலையாளத் திரை உலகை சில இயக்குனர்கள் நடிகர்கள் முடிசூடா மன்னர்கள் போல ஆண்டு வந்ததும், நடிகைகள் பெண் தொழில்நுட்ப கலைஞர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதும் தெரிய வந்தது.
இந்த அறிக்கை வெளிவந்ததிலிருந்தே பெரும் அதிர்வலைகளை உண்டு பண்ணி இருக்கிறது. தொடர்ந்து மலையாள சினிமாவில் ஜாம்பவான்களாக பார்க்கப்பட்டு வரும் நடிகர்கள், இயக்குனர்கள் மீது பாலியல் புகார்கள் குவிந்து வருகிறது.
தற்போது இதுகுறித்து பேசியுள்ள நடிகை ஷகிலா, “மலையாள திரை உலகில் இருப்பது போன்று தமிழ் திரையுலகிலும் இந்த பிரச்சனை உள்ளது. குறிப்பாக தெலுங்கு திரை உலகில் இதைவிட அதிகமாகவே இருக்கிறது. இந்தியை பொறுத்தவரை அப்படி அல்ல. அவர்கள் உடனே நண்பர்களாக மாறி விடுவார்கள். எனவே அங்கு பெரிதாக காஸ்டிங் கோச் பிரச்சினை இருக்காது. ஆனால் அங்கு நெபோடிசம் பிரச்சனை உள்ளது. தெலுங்கில் வேற லெவலில் இதுபோன்ற பாலியல் பிரச்சினைகள் உள்ளது. இவை எல்லாம் பேசி வைத்துக் கொண்டுதான் செய்யப்படுகிறது.
மேலும் படிக்க: “நிறைய செருப்பு இருக்கு... உடம்பு ஏன் நடுங்குது..” பிரபலத்தை வெளுத்துவிட்ட ஸ்ரீரெட்டி
ஆரம்பத்திலேயே தயாரிப்பாளருக்கும் தனக்கும் அட்ஜெஸ்ட்மெண்ட் பண்ண வேண்டும் என நடிகையின் மேனேஜரிடம் பேசி விடுவார்கள். இதற்கு சம்மதித்துதான் அந்த நடிகை படத்தில் நடிப்பார். முக்கால்வாசி படம் முடிந்த பின்னர் அவர்களால் தன்னை படத்தில் இருந்து வெளியேற்ற முடியாது என்பதால் நடிகைகள் ஒத்துழைக்க மறுப்பார்கள். இதன் காரணமாக பல பிரச்சினைகள் வருகிறது. குடும்ப சூழலால் பாலியல் தொல்லைகளை சிலர் வெளியே சொல்லாமல் இருக்கின்றனர். யாரும் பேசாவிட்டால் எந்த தீர்வும் கிடைக்காது” என தெரிவித்துள்ளார்.