Sri Reddy: “நிறைய செருப்பு இருக்கு... உடம்பு ஏன் நடுங்குது..” பிரபலத்தை வெளுத்துவிட்ட ஸ்ரீரெட்டி

என்னிடம் நிறைய செருப்புகள் உள்ளன என நடிகை ஸ்ரீ ரெட்டி போட்டுள்ள டிவிட்டர் பதிவு வைரலாகி வருகிறது. பிரபல நடிகரை மறைமுகமாக விமர்சிக்கும் விதத்தில் ஸ்ரீ ரெட்டி ட்வீட் போட்டுள்ளது கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Aug 29, 2024 - 22:00
Aug 30, 2024 - 10:23
 0
Sri Reddy: “நிறைய செருப்பு இருக்கு... உடம்பு ஏன் நடுங்குது..” பிரபலத்தை வெளுத்துவிட்ட ஸ்ரீரெட்டி
Actress Sri Reddy

சென்னை: மலையாள திரையுலகில் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட சம்பவம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதனால் மலையாள நடிகர் சங்கத்தின் (AMMA) தலைவர் மோகன்லால் உட்பட நிர்வாகிகள் அனைவரும் ராஜினாமா செய்துள்ளனர். இந்நிலையில், தமிழ் சினிமாவிலும் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. இதுஒருபக்கம் வைரலாக, பிரபல நடிகரை மறைமுகமாக விளாசியுள்ளார் ஸ்ரீ ரெட்டி. இவர் ஏற்கனவே நடிகர் விஷால் மீது பாலியல் புகார் தெரிவித்திருந்தார்.    

இந்நிலையில், தனது டிவிட்டர் பக்கத்தில் பெயரை குறிப்பிடாமல் நடிகர் ஒருவரை விமர்சித்துள்ளார். அதில், ஹாய் மிஸ்டர் உமனைசர், ஒயிட் ஹேர் ஓல்ட் அங்கிள், பெண்களின் பாதுகாப்பு பற்றியெல்லாம் நீ பேசலாமா?. பெண்களை பற்றி பேசும்போது ரொம்ப கவனமாக இருந்தால் நல்லது, அப்போது மட்டும் ஏன் உன் உடம்பு அப்படி நடுங்குகிறது. நீ எவ்வளவு பெரிய ஃபிராடு என்பது இந்த உலகத்துக்கே தெரியும். பெண்களுக்கு பாதுகாப்பு கொடுப்பதெல்லாம் இருக்கட்டும், முதலில் உன்னைச் சுற்றி இருந்த பெண்கள் எங்கு சென்றார்கள்... உனக்கு நடக்கவிருந்த திருமண நிச்சயதார்த்தம் என் கேன்சல் ஆனது. 

எனது கேள்விகளுக்கு அடுத்தமுறை பதில் சொல்ல வேண்டும், நீ எந்த பதவியில் இருந்தாலும் அதைபற்றியெல்லாம் நான் கவலைபட மாட்டேன். உனக்கு என்ன வேண்டுமோ அதனை கர்மா சரியாக கொடுத்து வருகிறது. என்னிடம் விதவிதமாக நிறைய செருப்புகள் உள்ளன, உனக்கு அதில் எதுவும் வேண்டுமா..? என வெளுத்து வாங்கியுள்ளார். ஸ்ரீ ரெட்டியின் இந்த டிவிட்டர் பதிவு திரையுலகில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ஸ்ரீ ரெட்டி யாரை குறிப்பிட்டு இப்படி ட்வீட் செய்துள்ளார், இவ்வளவு காட்டமாக ஏன் விமர்சிக்க வேண்டும் என நெட்டிசன்கள் விவாதித்து வருகின்றனர்.    

மேலும் படிக்க - கோட் 4வது பாடல் ரிலீஸ் அப்டேட்

அதேநேரம் இது விஷாலுக்கு எதிரான பதிவு எனவும் சொல்லப்படுகிறது. அதாவது தனது பிறந்தநாளை முன்னிட்டு செய்தியாளர்களை சந்தித்த விஷால், பெண்களுக்கு திரையுலகில் நடக்கும் பாலியல் துன்புறுத்தல் குறித்து பேசியிருந்தார். யாரோ ஒருவர் பைத்தியக்காரதனமாக ஒரு பெண்ணை பயன்படுத்திகொள்ள முயற்சி செய்வார்கள். ஆனால், அந்த பெண்ணுக்கு தைரியம் வேண்டும், அப்படி கேட்கிறவர்களை அவர் செருப்பால் அடிக்க வேண்டும். யாராக இருந்தாலும் பெண்களை பாலியல் ரீதியான துன்புறுத்த நினைப்பவர்களுக்கு தண்டனை கிடைக்க வேண்டும். தமிழ் சினிமாவிலும் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை இருப்பதாக காலம் காலமாக குற்றம்சாட்டப்பட்டு வருகிறது. 

ஒரு சில உப்புமா கம்பெனிகள் போட்டோ ஷூட் எடுத்து பெண்களை பயன்படுத்திகொள்கிறார்கள். நடிகைகள் யாராவது தங்களிடம் தவறாக நடந்துகொண்டதாக புகார் கொடுத்தால் நிச்சயம் நடவடிக்கை எடுப்போம். யாராவது அட்ஜெஸ்மெண்ட்க்கு அழைத்தால் செருப்பால் அடியுங்கள் என கூறியிருந்தார். அப்போது உங்கள் மீது ஸ்ரீ ரெட்டி கூறிய பாலியல் குற்றச்சாட்டு குறித்து விஷாலிடம் கேட்கப்பட்டது. அதற்கு, ஸ்ரீ ரெட்டி யார் என்றே எனக்கு தெரியாது. அவர்கள் செய்த சேட்டை மட்டும் தான் எனக்கு தெரியும். எளிதாக யார் யார் மீது வேண்டுமானாலும் குற்றம் சுமத்தலாம். ஆனால், என்ன நடந்தது என்ற உண்மை வெளிவர வேண்டும் என விஷால் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow