GOAT 4th Single: “தளபதியோட பார்ட்டி பண்ண ரெடியா..” யுவன் பிறந்தநாள் ஸ்பெஷலாக கோட் 4வது பாடல்!

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள கோட் படத்தின் 4வது பாடல் வரும் 31ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

Aug 29, 2024 - 19:36
 0
GOAT 4th Single: “தளபதியோட பார்ட்டி பண்ண ரெடியா..” யுவன் பிறந்தநாள் ஸ்பெஷலாக கோட் 4வது பாடல்!
GOAT 4வது பாடல் ரிலீஸ் தேதி

சென்னை: தளபதி விஜய் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள கோட் திரைப்படம், செப்.5ம் தேதி வெளியாகிறது. வெங்கட் பிரபு இயக்கத்தில் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு யுவன் இசையமைத்துள்ளார். புதிய கீதைக்குப் பின்னர் விஜய் – யுவன் கூட்டணி கோட் படத்தில் மீண்டும் இணைந்துள்ளது. இதனால் இப்படத்தின் பாடல்கள் தாறுமாறான சம்பவமாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், கோட் படத்திலிருந்து இதுவரை வெளியான 3 பாடல்களும் எதிர்பார்த்தளவில் இல்லை என விமர்சனங்கள் எழுந்தன. இதற்கெல்லாம் சேர்த்து வைத்து படத்தின் பின்னணி இசையில் யுவன் மாஸ் காட்டுவார் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.  

இந்நிலையில், கோட் படத்தின் 4வது பாடல் குறித்து தற்போது அபிஸியல் அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி கோட் 4வது சிங்கிள் வரும் 31ம் தேதி வெளியாகிறது. யுவன் சங்கர் ராஜாவின் பிறந்தநாள் ஸ்பெஷலாக இந்தப் பாடல் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. 4வது சிங்கிள் அப்டேட்டாக வெளியாகியுள்ள போஸ்டரில், போக்கிரி பட ஸ்டைலில் போஸ் கொடுத்துள்ளார் விஜய். மேலும், “இளைய தளபதியோட பார்ட்டி பண்ண ரெடியா..” என்ற கேப்ஷனும் ரசிகர்களுக்கு வைப் கொடுத்துள்ளது. இதனால் கோட் 4வது பாடல் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்தப் பாடலில் விஜய்யுடன் த்ரிஷா டான்ஸ் ஆடியுள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், அதுகுறித்து வெங்கட் பிரபு தரப்பில் இருந்து எந்த அப்டேட்டும் வெளியாகவில்லை. இதனிடையே இன்று நடைபெறவிருந்த கோட் பிரஸ்மீட் நிகழ்ச்சி கடைசி நேரத்தில் கேன்சல் ஆகியுள்ளது. ஆனால், இன்னும் ஓரிரு தினங்களில் இந்த பிரஸ்மீட் நடைபெறும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், கோட் ட்ரெய்லரில் படத்தின் கதை குறித்து எல்லா லீடும் இருக்கிறது. ஆனால், ரசிகர்கள் யாரும் அதனை சரியாக டீ-கோடிங் செய்யவில்லை என வெங்கட் பிரபு ஒரு நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளார். 

மேலும் படிக்க - ரஜினியின் கூலி படத்தில் இணைந்த நாகர்ஜுனா!

அதுமட்டுமில்லாமல், கோட் படத்தின் திரைக்கதை வேகமாக இருக்கும் எனவும், அடுத்து என்ன சீன் வரும் என்பதை யாராலும் கணிக்கவே முடியாது என்றும் அடித்துக் கூறியுள்ளார். விஜய் கேரியரில் கோட் கண்டிப்பாக ப்ளாக் பஸ்டர் மூவியாக இருக்கும் என வெங்கட் பிரபுவே நம்பிக்கையுடன் பேசியதும், இந்தப் படம் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow