Coolie: சைமன் சார்! ரஜினியின் கூலி படத்தில் இணைந்த நாகர்ஜுனா... போஸ்டரே சும்மா தெறிக்குதே!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் – லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி வரும் கூலி படத்தில் தெலுங்கு நடிகர் நாகர்ஜுனா இணைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

Aug 29, 2024 - 18:44
 0
Coolie: சைமன் சார்! ரஜினியின் கூலி படத்தில் இணைந்த நாகர்ஜுனா... போஸ்டரே சும்மா தெறிக்குதே!
ரஜினியின் கூலி படத்தில் இணைந்த நாகர்ஜுனா

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினியின் கூலி படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரித்து வரும் இப்படத்தின் ஷூட்டிங் தற்போது விசாகப்பட்டிணத்தில் நடைபெற்று வருகிறது. கூலி மூலம் முதன்முறையாக ரஜினி – லோகேஷ் கூட்டணி இணைந்துள்ளதால், இப்படத்திற்கு மிகப் பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. கூலி டைட்டில் டீசர் வெளியான வேகத்தில் படப்பிடிப்பை தொடங்கிய படக்குழு, தற்போது கேரக்டர் அப்டேட் கொடுத்து வருகிறது. கூலி படத்தின் முதல் அப்டேட்டில், அனிருத்தும், அன்பறிவ் மாஸ்டரும் இணைந்துள்ளதாக அறிவித்திருந்தது. 

அதன் பின்னர் நேற்று தான் கூலி படத்தின் அடுத்த அப்டேட் வெளியானது. அதன்படி கூலி படத்தில் ரஜினியுடன் யாரெல்லாம் நடிக்கின்றனர் என்ற அறிவிப்புகளை போஸ்டர்களாக வெளியிட்டு வருகிறது படக்குழு. முதல் ஆளாக மலையாள நடிகர் செளபின் சாஹிரின் போஸ்டர் வெளியானது. கூலி படத்தில் தயாள் என்ற கேரக்டரில் செளபின் சாஹிர் நடிப்பதாக அறிவித்த படக்குழு, அவரது மிரட்டலான போஸ்டரையும் வெளியிட்டது. அதில், சட்டை அணியாமல் கையில் கோல்ட் வாட்ச், வாயில் பீடி என கெத்தாக போஸ் கொடுத்திருந்தார் செளபின் சாஹிர். 

இந்தப் போஸ்டரில் செளபின் சாஹிர் கோல்ட் வாட்ச் வைத்திருந்தது ரசிகர்களிடம் கவனம் ஈர்த்தது. அதேபோல் தற்போது இரண்டாவது கேரக்டர் போஸ்டர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த அப்டேட்டில் தெலுங்கு நடிகர் நாகர்ஜுனாவும் கூலி படத்தில் இணைந்துள்ளதை படக்குழு கன்ஃபார்ம் செய்துள்ளது. மேலும் அவரது கேரக்டர் பெயர் சைமன் என்பதையும் படக்குழு அறிவித்துள்ளது. ரஜினி, செளபின் சாஹிரைத் தொடர்ந்து நாகர்ஜுனாவின் போஸ்டரிலும் கோல்ட் நிற வாட்ச் இருப்பது ரசிகர்களுக்கு ஹைப் கொடுத்துள்ளது. 

மேலும் படிக்க - வாழை பஞ்சாயத்து… எழுத்தாளருக்கு மாரி செல்வராஜ் பதிலடி!

ஆரம்ப காலங்களில் ரஜினியும் நாகர்ஜுனாவும் இணைந்து படங்களில் நடித்துள்ளனர். தற்போது கூலி திரைப்படம் மூலம் நீண்ட இடைவேளைக்குப் பின்னர் இக்கூட்டணி இணைவது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தனுஷின் குபேரா படத்தில் நடித்து வரும் நாகர்ஜுனா, அடுத்து ரஜினி-லோகேஷ் கூட்டணியிலும் இணைந்துள்ளார். இந்த வரிசையில் சத்யராஜ், கன்னட நடிகர் உபேந்திரா, நடிகை ரச்சிதா ராம், பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமீர்கான் ஆகியோரது போஸ்டர்களும் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். 

ரஜினியின் ஜெயிலர் படத்தில் மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராஃப் மூவரும் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தனர். இதில் சிவராஜ்குமாரின் கேமியோ ரோல் ரசிகர்களுக்கு செமையாக வைப் கொடுத்திருந்தது. ஜெயிலரை தொடர்ந்து ரஜினியின் வேட்டையன் படத்திலும் பான் இந்தியா நடிகர்களான அமிதாப் பச்சன், ஃபஹத் பாசில், ராணா, மஞ்சு வாரியர் ஆகியோர் நடித்துள்ளனர். இப்போது கூலி படத்திலும் மலையாளத்தில் இருந்து செளபின் சாஹிர், தெலுங்கில் இருந்து நாகர்ஜுனா கமிட்டாகியுள்ளது எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow