ADMK Ex Minister Benjamin : ஜெயலலிதா குறித்து பேசிய தா.மோ.அன்பரசன் உத்தமனா? - முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் விளாசல்

ADMK Ex Minister Benjamin on Tha Mo Anbarasan : முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பற்றி கேவலமாக பேசிய அமைச்சர் தா.மோ.அன்பரசன் உத்தமனா என முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் வெளுத்து வாங்கியுள்ளார்.

Aug 12, 2024 - 15:19
Aug 13, 2024 - 09:36
 0
ADMK Ex Minister Benjamin : ஜெயலலிதா குறித்து பேசிய தா.மோ.அன்பரசன் உத்தமனா? - முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் விளாசல்
முன்னாள் அமைச்சர் பெஞ்சமின்

ADMK Ex Minister Benjamin on Tha Mo Anbarasan : சென்னையில் திமுக இளைஞரணி உறுப்பினர் சேர்க்கை முகாம் கடந்த ஆகஸ்ட் 10ம் தேதி நடைபெற்றது. அதில் பேசிய அமைச்சர் தா.மோ.அன்பரசன், “திமுக ஆட்சியில் இருக்கிறதோ, இல்லையோ ஆனால் திமுகவினர் வேறு எங்கும் செல்ல மாட்டார்கள். வரும் காலங்களில் சீமான் போன்ற நடிகர்கள் எல்லாம் வருவார்கள். நடிகர்களை ரசிக்கலாம், அதோடு விட்டுவிட வேண்டும். முதலமைச்சர் ஆகிவிடலாம் என்ற கனவில் நடிகர்கள் அரசியலுக்கு வருகிறார்கள். ஆனால் நடிகர்கள் முதலமைச்சர் ஆவது எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவோடு முடிந்தது. இனி யாரும் எடுபட முடியாது” என பேசினார். இவரது இந்த கருத்து கடும் சர்ச்சைக்குள்ளானது. இதற்கு அதிமுகவினர் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில் சென்னை அடுத்த பல்லாவரம் பகுதியில் சுகாதார சீர்கேடு இருப்பதாகக் கூறி அதிமுக சார்பில் செங்கல்பட்டு மேற்க்கு மாவட்ட கழக செயலாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரன் தலைமையில் திமுக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் பல்லாவரத்தின் பெரும்பாலான இடங்களில் பாதாள சாக்கடை கழிவுநீர் ஏரியில் கலக்கப்படுவதாகவும், பல்லாவரம் கீழ்கட்டளை பகுதிகளில் உள்ள அம்மா உணவுகங்களில்  தரமில்லாத  உணவுகள் வழங்கப்படுவதாகவும், மக்கள் பணிகளை தாம்பரம் மாநகராட்சி முறையாக நிறைவேற்றவில்லை எனவும் குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன. இதில் ஏராளமான அதிமுகவினர் கலந்துகொண்டு மாநகராட்சிக்கு எதிராகப் பதாகைகளை ஏந்தியபடி கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

மேலும் படிக்க: கோவை நீலகிரிக்கு ஆரஞ்சு அலர்ட் .. வானிலை மையம் வார்னிங்

இதைத்தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் உரையாற்றிய முன்னாள் அமைச்சர் பெஞ்சமின், ஜெயலலிதா குறித்த அமைச்சர் தா.மோ.அன்பரசனின் கருத்துக்கு கடும் கண்டனங்களை தெரிவித்தார். இதுதொடர்பாக பேசிய அவர், “திமுக அரசு அரசியல் காழ்புணர்ச்சியாக தமிழகம் முழுவதும் உள்ள தரமாக இருந்த அம்மா உணவகங்களை தரமற்றதாக மாற்றியுள்ளனர். மீண்டும் எடப்பாடி பழனிசாமி 2026ல் முதலமைச்சராக வருவார் என்பதில் எந்த வித சந்தேகமும் கிடையாது. இந்த ஆட்சியில் எந்த விதமான திட்டங்களையும் இவர்கள் கொண்டுவரவில்லை. திமுக அரசு கொண்டு வந்த திட்டங்களால் வீட்டு வரி, சொத்து வரி, மின்சார கட்டணங்கள், பால் விலை, பேருந்து கட்டணம் ஆகியவை உயர்ந்துவிட்டது. இதுதான் இந்த ஆட்சியாளர்களின் சாதனை. இந்த மாவட்டத்தின் அமைச்சராக இருக்கும் தா.மோ.அன்பரசனுக்கு நாவடக்கம் தேவை. நாவடக்கம் இல்லையென்று சொன்னால் தமிழகத்தில் உள்ள அதிமுகவின் தொண்டன் தெருவில் இறங்கி என்ன செய்வார்கள் தெரியாது. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவைப் பற்றி கேவலமாக பேசிய அமைச்சர் உத்தமனா? தமிழகத்தில் ஐந்து முறை முதலமைச்சராக இருந்து, தாய்மார்களால் இதய தெய்வமாகப் போற்றப்பட்டவரை பேசுவதற்க்கு யாருக்கும் எந்த ஒரு தகுதியும் கிடையாது.  இதே போன்று தொடர்ச்சியாக நீங்க பேசினால் அதிமுக தொண்டன் தெருவில் இறங்கி மிகப்பெரிய சம்பவங்களை செய்ய நேரிடும்” என எச்சரித்துள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow